VACCININUM வக்சினினம்

மூலம்: அம்மை விஷ கிருமிகள்.

ஆலோபதியில் அம்மையின் தடுப்பு மருந்துக்காக, கிருமிகளை வளர்த்து உபயோகிக்கும் போது சிலருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. அம்மையின் முறிவுக்காக வளர்க்கப்படும் கிருமிகளிலிருந்து வீரியப்படுத்துபவை. பெரியம்மை நோய் தோன்றி செப்டிக ஆனால் வாரியோலின், மாலண்ட்ரியம், வாக்சினம் (இது). இது மூன்றுமே அதனதன் குறிகளுக்கு ஏற்றவாறுத் தரலாம்.

அம்மை ஊசிகள் குத்தியிருந்தால், அதன் விஷம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடலிலே இருக்கும் என ஹானிமேன், பர்னட் போன்றவர்கள் கூறுகிறார்கள்.

இந்நோய் பற்றி Dr. ஹானிமேன் கூறுவது:-

சைக்கோஸிஸ் நரம்புகள் இரண்டும் இணைந்து தான் உடற்பகுதியில் புறப்பாடுகளாக வருகிறது. அதனாலும் குளிரும், அஜீரணமும் ஏற்படுகிறது. இதனால் தான் மலக் காற்று அதிக நாற்றத்துடனும் அதிக நேரமும் வருகிறது. இந்நோய் பற்றி Dr. கிளர்க் கூறுவது. நீண்டு, நீண்டு, இழுத்து, இழுத்து, கக்குவான் இரும்பல் இரும்புபவர்களுக்கும்,இழுப்புக்கும் இந்த தடுப்பு மருந்து தான் காரணம் என்றுக் கூறுகிறார்கள். அதற்கு இம் மருந்து தந்தால் அம்மை விசம் முறிந்து குணம் ஏற்படும்.

எதற்கெடுத்தாலும் அழும் குணம், ரொம்ப பலஹீனமானவர்களாக இருப்பார்கள். எப்போதும் நோய் பிடித்தது போன்றே இருப்பார்கள். சுறு, சுறுப்பே இல்லாமல் மந்தமாக இருப்பார்கள். தூங்கும் போதுக் கூட ஓய்விருக்காது. நரம்புத் தளர்ச்சிக் காணப்படும். நோயைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்கள். சின்னம்மை நோய் வந்திடுமோனு பயமிருக்கும்.

நெற்றிப் பகுதியில் மட்டும் வலி. இந்த வலியானது இரண்டு நரம்புகளின் மூலம் காது, உச்சந்தலை வரைச் சென்று வலிக்கும். வலது பொட்டில் தைப்பது போன்ற வலி ஏற்படும். தலை முழுவதும் கடுமையான, தாங்க முடியாத அளவு வலி.

சருமம் சூடாகவும், வறட்சியாகவும் இருக்கும். பருப்பு போன்ற கொப்பளங்கள் இருக்கும். அதில் கட்டிகள் காணப்படும். அம்மைக் கொப்பளங்கள் போலவே இருக்கும். இது போன்ற அம்மைக் கொப்பளங்கள் காண இது தான் மருந்து. ஒப்பிட்டு பார்க்கும் உறவு மருந்துகள்:- VARIYOLIN, MALAND, THUJ. (இவை எல்லாம் சக்தி வாய்ந்த மருந்துகள், மறு குறி பாய்ந்தாலும், இதையே தரலாம். வீரியம் 200க்கு மேல் தான் தரணும்.)