VARIOLINUM வரிலோனியம்
மூலம்: பெரியம்மையின் சீழ் கிருமிகள்.
இம் மருந்து பெரியம்மை தோன்றி உள்ளவர்களுக்கு இதை தந்தால் குணமாகும். அது கொள்ளை நோயாக பரவும் காலத்தில் இக் குறிகள் தோன்றும். அப்போது இதை கொடுத்தால் அம்மை மூலமாக காட்டியுள்ள அவரின் விஷம் போய் விடும். அந்த நோய் தோன்ற காரணமான விஷமும் போய் விடும். போய் விட்டால் பிறகு ஏது விஷம்?. அம்மையை தடுத்தால் தானே வேறு பக்கம் விஷம் வரும். மனக்குறி நமக்கு அம்மை நோய் வந்து விடுமோ என்று அதிக பயம், கண் வலி பயங்கரமாக இருக்கும். கண் வீங்கி போய் விடும். சிலருக்கு பூ கண்ணில் விழுந்து பார்வை மங்கி விடும். வேறு சிலருக்கு கண் ரசம் கெட்டு பார்வை போய் விடும். (அ) கண் விழி உடைந்து போய் விடும். தொண்டை சுத்தமாக அடைத்து விடும். அதனால் சுவாசிக்க கஷ்டம். பிசின் மாதிரி சளி அதனால் இரும்பி, இரும்பி இரத்ததையே துப்புவார். வலது புற தொண்டையில் கட்டி மாதிரி இருக்குது என்பார். அது தெறிக்கும் வலி முதுகு வரை பரவுது. அந்த வலி கெண்டைக் கால் வரைக்கும் பரவுதுங்கஎன்பார் வலி. அதனால் அமைதியாக படுக்கவும், இருக்கவும், முடியலை என்பார். குறிப்பாக மணிக்கட்டு, அடி வயிறு, முதுகு, இப்படி வலி மாறி, மாறி வரும். நெருப்பு மாதிரியே உட்காய்ச்சல்; அடிக்குதுங்க என்பார். ஏராளமான நாற்றம் உள்ள வியர்வை, இருப்பினும் வறண்டு போன சூடான சருமம். இதனுடன் பல உறவு மருந்துகள் உள்ளது. அதன், அதன் குணத்தையும், மேலும் இம் மருந்தின் விளக்கத்தையும் 666 வது பக்கம் வில்லியம் போரிக் புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.