USTILAGO உஸ்டிலகேர்
மூலம்: ரொம்ப கெட்டப் பழக்கம் உள்ளவர்கள். இதனால் உயிர் சக்தி இழந்து விடுவார்கள். அதனால் தாழ்வு மனப்பான்மை. கத்துதல். மானியில் தோலுறிதல், அதிகமான செக்ஸ் எண்ணங்களாலும், அதையே நீவிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் இரவில் நீவிக் கொண்டும், இருப்பார்கள். அதனால் இரவில் தூங்கும் போதும், ஓய்விலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். பித்துப் பிடித்து கிடப்பார்கள். மயக்கத்தினால் வெது, வெதுப்பான அறையில் படுத்துக் கிடப்பார்கள். ஏதாவது வெறுப்பு இருந்துக் கொண்டே இருக்கும். கட்டுப்பாடு இல்லாததால் உடல் இயக்கம் முழுவதும், மாயமாகஇருக்கும். அதிகமான உறுத்தல், பரபரப்பு. மூளை ரொம்ப பலஹீனமாகி விடும்.
தலைவலி, மயக்கம், பருவக் காலங்களில் மாறி, மாறி ஏற்படும். அடிக்கடி ஏராளமான தாறு, மாறான மாதவிடாய், தலை முழுவதும் நரம்பு, சம்மந்தப்பட்டத் தொல்லைகள் காணப்படும். தலையிலும், உடல் பகுதியிலும் இரத்தம் தேங்கியது போல, வெடிப்பது இது போல் பல உணர்வுகளிருக்கும். அழுத்துவது போன்ற தலைவலி. நடக்கும் போது மேலும் அதிகமாகும். உடன் பலஹீனமும் காணப்படும். இதனால் சிறுநீர் பகுதியும், கர்பப்பை பகுதியும் ரொம்ப தாக்கப்படும். நெற்றிப் பகுதியில் வலி ஏற்படும். நடந்தால் மேலும் அதிகமாகும். தலைவலியினால் தலை முடி முழுவதும், கொட்டி விடும். விரல் நகமும் வழுவில்லாமல் விழுந்திடும். நெற்றிப் பொட்டுப் பகுதியிலும், வலி ஏற்படும்.
கண் நரம்புகள் இழுத்துப்பிடிக்கும். கண்ணில் தண்ணிர் வரும். எதையும் பார்க்க முடியாது. தெறிக்கும் படியான வலி ஏற்படும். மூக்கு திடீரென பயங்கரமாக அடைத்துக் கொள்ளும். அழுத்தினால் உடனே குறைந்து விடும். முகம், மண்டைத் தோளில் எரிச்சலுடன் இழுத்துப் பிடிக்கும், படியான வலித் தோன்றும். சில நேரங்களில் பல் ஆடும். முன் வெட்டும், இரண்டு பற்களில் தொடர்ச்சியான வலி ஏற்படும். வாயில் அதிகப்படியான எச்சில் ஊறுதல், உடன் திக்கான, கசப்பான எச்சிலும் வரும். காலையில் வாயில் செம்பு வாடையில் வரும். வயிற்றியிலிருந்து சளி வரும். உடன் எரிச்சலாக வரும். பசியே எடுக்காமலும் இருக்கும். அதிகமான ஆசையும் இருக்கும். இரவில் தாகம் ஏற்படும். சாப்பிட முடியாமல் இருப்பார். பின் சாப்பிட, சாப்பிட பசி எடுத்து நிறைய சாப்பிடுவார்கள்.
புளியேப்பம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வயிற்றில் வெட்டுவது போல வலி. மேல் வயிற்றுப் பகுதியில், விரல்களின் மூட்டுப் பகுதியில் இழுத்துப் பிடிக்கும் படியான வலி. குமட்டல் ஏற்படும். வாந்தி எடுத்தால் குறைந்து விடும். வயிற்றிலுள்ள அசுத்த இரத்தக் குழாய்களில் இருந்து வெளியாகும் இரத்த போக்கு. வயிறு ரொம்ப அசதியாகவும். காலியாகி எல்லா உறுப்பும் இல்லாத போன்ற உணர்விருக்கும், காலை பதினொறு (11) மணிக்கு இப்படியிருந்தால் SULPH.வயிறு நீண்டது போலிருக்கும். வயிற்றுப் பகுதியில் இழுத்துப் பிடிக்கும் படியான வலி. ரொம்ப சங்கடமான நிலை ஏற்படும். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் தோள்பட்டை வரை போகும். நெஞ்சுக்குழியில் எரிச்சல், வயிறு எரிச்சல், வலி 3 –நிமிடம் இருக்கும். மாலை ஆறு மணிக்கு அடிவயிற்றுப் பகுதியில் இடுப்பெலும்பு முழுவதிலும், வெட்டுவது போன்ற வலி, இரவு எட்டு மணிக்கு மலம் அதிக வலியுடன் வெளியேறும். அப்போது வலி மேலும் அதிகமாகும். பிறகு சில நேரம் கழித்து அடிவயிறு முழுவதும் வலி ஏற்படும். வலது ஈரல் பகுதியில் வலி ஏற்படும். இந்த வலி தொப்புள் வரை வரும். மலம் கழிந்து பிறகு தொப்புள் வலி குறையும். நடக்கும் போது இடது இடுக்கில் வலி ஏற்படும். மதியம் அடிவயிறு பகுதியைச் சுற்றிலும் வலி. அப்பகுதி வறண்டு விடும்.
மலம் லேசான கலரில் பேதியாக போகும். சிறுநீர் பையில் இழுத்துப் பிடிக்கும். அதன் நரம்புகளில் சிறுநீர் விடும் வரை கஸ்டம்.
விந்துச் சுரபிகளில் வீக்கம் ஏற்படும். கைப்பட்டவுடன், விந்து வெளியேறிவிடும. பெண்களைப் பார்த்தாலே பீச்சியடித்து விடும். அதனால் அவமானத்தால் புத்தி பேதலித்து கத்துவார்கள். ஆனால் ஏகப்பட்ட ஆசைகள் இருக்கும். கட்டுப்படுத்தவே முடியாது. சித்ரவதையினால் தன்னையே சாவடித்துக் கொள்ள நினைப்பார்கள. வேலை செய்யவே முடியாது. மானி, விதைக் கொட்டைகள் தளர்ந்துக் காணப்படும். காலை நான்கு மணிக்கு திடீரென விரைப்புத் தட்டி விந்து தானாக வெளியேறிவிடும். சிறுநீர், மலம் கழியும் போது வெளியேறினால் SELINIUM. வெள்ளைப் பாட்டிற்கு பதிலாக மஞ்சள் நிறமான நாற்றத்துடன் கழிவுகள் வெளியேறும். இது போன்ற இன்னும் பல விளக்கங்கள் ALLEN KEY NOTES – ல் 351-ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும்.