STRAMONIUM ஸ்டமோனியம்
மூலம்: ஊமத்தங்காய் (இந்தியா).
இம்மருந்துக்குரியவர்களுக்கு அடிபட்டு விடுவோமோ என்ற பயம். ஊமைக்கட்டி என்றால், மனைவி விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும், வீடு விற்ற பிறகும், பதவி போன பிறகும், குழந்தை இழப்பு, இது போன்ற, கிடைக்காது என்று தெரிந்த பிறகும் இழந்த பொருளை, நபர்களை மறக்காமல் இருந்தால், பள்ளி கூடத்தில் (போனால்) அடிப்பார்களோன்னு பயம். சிறு பிள்ளைகள் என்றால் டீச்சர் மாணவர்களை அடித்து விடுவார்களோ என்று பயந்து பள்ளி கூடத்துக்கு கூட போக மாட்டார்கள். இருட்டில் பயம். ஏதாவது ஒன்றை விடாப்பிடியாகவே பிடித்து இருப்பார்கள். கணவனோ, மனைவியே விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும் அவர்களை விடாமல் இழுத்து பிடித்து கொண்டே (இருப்பார்கள்) விரும்புவார்கள். திக்கு வாய்க்கு நல்ல மருந்து. வாயை விகாரமாக அப்படி ஆட்டி, ஆட்டி அதன் பிறகு பேசுவார்கள். தன் நோயை தெரிந்துக் கொள்ள விரும்புவார்கள். குறுகலான சந்து, பாதை ஆகியவற்றில் தொல்லை. சேகல் முறையில் கூற வேண்டும் என்றால், ஒரு நோயாளி அவர் கிளினிக்கு வந்து பார்த்து விட்டு திரும்பி போனாராம். ஏன் என்று கேட்டதற்கு இங்கு இவ்வளவு கூட்டம் இருக்குது. இதுல என்னை எங்கு கவனிக்கப் போறாரு, அவருக்கு எங்க டைம் இருக்கும் என்று கூறினாராம். எப்போதும், அம்மாவை கட்டி பிடித்து கொண்டே, அம்மாவுடனேயே இருக்கும் குழந்தைகள். தாக்கப்பட்டிடுவோமா, அடிபட்டு விடுவோமோ என்று எதிர் பார்;த்து பயந்தால், அடிபட்டிடும், காயம் பட்டிடும் என்று பயந்து பதுங்கினால், பயந்தால் இது தான் மருந்து. (உதாரணம் 3 வருடம் முன்பு பாம்பை பார்த்து பயந்திருப்போம். ஆனால் நிகழ்ச்சி போகாவிட்டால் OP.)) தாய் சொல்லுவாள் ஒண்ணுக்கு கூட இந்த பிள்ளை போக மாட்டேங்குதுங்க என்பார். எப்பவுமே அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டே இருக்கும் குழந்தை. இருட்டில் பயம், பள, பளப்பிலும் பயம், திக்குனு பயம், ஓடர தண்ணீரை கண்டால் பயம். பிடித்து கடிக்க விரும்பும் பைத்தியம். தனிமையில் பயம். எல்லாம் பயத்தின் அடிப்படை தான், துணியை கிழிக்கும் பைத்தியங்கள், சந்தேகத்தின் அடிப்படை என்றால் HYOS. இருட்டில், நாய், பூனை துரத்துவது போல் பயம். தானாகவே பேசிக் கொண்டு போகும் பைத்தியம். மனதில் அமைதியின்மை. பிறரை தொல்லைப்படுத்துவார். தாடை மட்டும் ஆடும் வலிப்பு. பெரிய கட்டி, புற்றில் வீக்கம் வலியிருக்காது.