STICTA PULMONARIA ஸ்டிக்டா பல்மோனரியர்

இம் மருந்துக்குரியவர்கள் இரவில், பகலில், தலையை கீழே வெச்சால் இருமல் படுக்க விடாது. முக்கிய மருந்து. கீழே தலையை சாய்க்க விட மாட்டேங்குதுங்க என்ற ஒரே குறிக்கு இதை தரலாம். வேறு நோயும் தணியும். அது தானே ஹோமியேபதி தத்துவம். (Dr. nrfy அதை மிகவும் எளிமை படுத்தி விட்டார். மகிழ்ச்சி, அவருக்கு மிகவும் நன்றி.) தண்ணி மாதிரி ஒழுகும். சளியோடு அடைப்பும், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயுடன், அதாவது கழுத்து அப்படியே பிடிச்சிகிச்சி என்று வாத நோய் குறிகளும் தோன்றும். சளி வந்துகிட்டே இருக்குது. அதனால் மந்தமாக இருக்குது என்பார். மனம் காற்றில் மிதந்து கொண்டிருக்கிற மாதிரி ஒரு எண்ணம் இருக்குது என்பார். இது முக்கிய குறி. சளி பிடிச்ச பிறகு தலைவலி என்பார். கண் விழி எரிச்சல். மூக்கடைப்பும், வேக்காடும் (NUX) வறண்ட பொருக்குகள், பால் குறைவாக சுரக்கும். உடன் RICINUS பார்க்கவும். நுரை, நுரையாக பேதி, புளிச்ச நாற்றத்துடன் சிறுநீர்பை வலி. தொண்டை வறட்சியாக மூச்சு இழுக்க கஷ்டம். கால் இழுக்கிற மாதிரி. கால் காற்றில் பறக்கிற மாதிரி இருக்கிறது என்பார்.