SULPHUR சல்பர்

மூலம்: கந்தகம்.

இம் மருந்துக்குரியவர்கள் சரும நோயாளி. காலையில் தூங்கி எழுந்தவுடன் மலம் கழிவார். அழுக்கு உடையையே அணிந்துக் கொண்டிருப்பார். தலை வார மாட்டான், குளிக்க மாட்டான். ஒருவன் முன்னே சென்ற பிறகு அவரைப் பற்றி மற்றவர்களிடம் கேலி செய்வான். அதாவது முன்னே விட்டு, பின்னாடி கேலி செய்பவன். ஒரு ரூபாய், பத்து ரூபாய் கிடைத்தால் கூட நானே ராஜா, என்று கூறுவதும், எவன் கிட்டேயும் அடிமையாக வேலை செய்யமாட்டேன் என்றும், நான் ராஜா மாதிரி என்பான். பையன் ஊதாரித்தனமாக இருந்தால் கூட கவலைப்படாமல் நானே ராஜா என்று கூறிக் கொள்வான். தொழிலை புறக்கணிப்பான் BELL, NUX, SULPH. மாதிரி காலையில் எழுந்ததும் சுறு, சுறுப்பும், வேலைக்கு போக எண்ணமில்லை RHOD.

செருப்பை கழட்டி விட்டு ஜில்லுனு தரையில் காலை வைப்பான், படுக்கும் போது கூட ஜில்லுனு இருக்க வேண்டும் என்பதற்காக போர்வை கால் பகுதியில் மட்டும் போர்த்த மாட்டான். காலில் ஜில்லுனு காற்று படட்டும் என்பதற்காக, காலையில் தூங்கி எழுந்தவுடன் மலம் கழிவார். உடம்பு கரையுதுங்க, காத்தாட்டம் ஆகுதுங்க, பொசுக்குனு இருக்குதுங்க, சக்கையாட்டம் ஆகுதுங்க, சுண்டுதுங்க நாளுக்கு நாள் உடம்பு எளச்சிக்கிட்டே வருதுங்க என்று இப்படி நிகழ்காலத்தில் கூறினால் இது. (இப்படி கடந்த காலத்தில் கூறினால் THUJA.) சளியுடன் மூச்சு, விட கஷ்டம். மூச்சு திணறல் என்றால், இரும்பி, இரும்பியே தொல்லைங்க என்றால். அதிகாலையில் சளி, காலை 11 மணிக்கு என்றால் இது முக்கிய குறி. ஸோராவை எதிர்க்கும் மருந்தில் இதை அரசன் என்பார்கள். ஸோரா தடுப்பதால் கொடுத்த மருந்து வேலை செய்யாது. அப்போது இதை கொடுத்தால் தான் வேலை செய்யும்.

SULPHURICUM – ACIDUM - சல்ப்பூரிக்கம் ஆசிடம்

கந்தக ரஸம் (காரகம்).

இம் மருந்துக்குரியவர்கள் தவறாமல், வெயில் காலத்தில் பெண்களுக்கு தோன்றும் தொல்லைகள். கட்டாயத்துக்காக கேள்வி கேட்பதும், பதில் சொல்வதும். மிகுந்த பர பரப்பும், அதனால் சுறு, சுறுப்பாக இருப்பார் ARG-N. வலியானது மெதுவாக அதிகரித்து டக்குனு மறைந்து விடும். (மெதுவாக இறங்கினால் PULS.) வயதானவர்கள் கண்ணாடி போட்டு இரணம் ஏற்பட்டு விட்டால். குழந்தைகளின் நாற்றமுள்ள கழிவுகள் MAG-C, HEP-S, RHEUM. மூளையே கழுவி விட்ட மாதிரி இருக்குது என்பார். இரத்தம் வடியும் அளவு வாய்ப்புண், நாள்பட்ட இருதய எரிச்சல், குத்துக் காயம், நைவு காயம் ஏற்பட்ட பிறகு சருமம் ஆறாமல் இருந்தால், நெருப்பு சுட்டப்புண் வடுவில் மீண்டும் இரத்தம் வடிந்தால் (அ) நீல நிறமாகி வலி இருக்கும். பிறப்பு உறுப்பு யோனி உதட்டில் நீல நிறம், சிவப்பு நிறம் ஆகி இரத்தம் வடியும். மூலத்தில் கருப்பு நிறமான இரத்தம் வரும். குடியை மறக்கவும் முடியாது, அதனால் நிறுத்தவும் முடியாது என்ற குடிகாரர்களுக்கு, அவர்களுக்கு தகுந்த மனகுறிக்கு மருந்து கொடுத்தும், குறி தவறி விட்டால் இந்த மருந்தின் தாய் திரவம் ஒரு பங்கும், மூன்று பங்கு சாராயத்தில் கலந்து கொடுத்ததில் ஒரு மாதத்தில் பரம்பரை குடிகாரர்களே மறந்து விட்டார்கள் என்று டாக்டர் ஹெரிங் கூறுகிறார். (அமெரிக்கா) தற்போது ஜெர்மளியில் இதே மாதிரி தருகிறார்கள். ஹெரிங் பிறகு நூறு ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது WISBADAM. தாய் திரவத்தை தருகிறார்கள். ஆனால் மனகுறியை பார்த்து மருந்து கொடுத்தால் மற்ற தொல்லையும் போய் விடும். வயிற்றுக்குள்ளே காற்று உருளுது. வெளியே வரமாட்டீங்குது என்பார்கள். ஒரே மருந்து இது தான்.