SELENIUM செலினியம்
மூலம்: விந்து (நல்ல மனிதர்).
இது ஆண்களுக்கு முக்கியமாக பயன்படும் மருந்து. விந்து கசிந்து கொண்டே இருக்கும். மலம் கழிய உட்காரும் போகும், குனியும் போதும் முக்கும் போதும், சிறுநீர் கழிக்க முக்கும் போதும் விந்து சொட்டு, சொட்டாக கசியும். சிறுநீர் விட்ட பின்;பு (அ) முன்பு நுனியில் கஞ்சி தண்ணி மாதிரி இரண்டு சொட்டு இருக்குதுங்க என்பார். அது பசையாட்டம் இருக்கும். இப்படி ஏற்பட என்ன காரணம் என்றால் வாழ்க்கையில் நடந்த கடுமையான நோய், டைபாயிடு, மலேரியா, காமாலை, T.B., போன்ற கடுமையான நோய்களுக்கு பிறகும், இப்படி பல நோய்க்கு பிறகும், டீ நிறைய குடித்த பிறகும், செயற்கையாக உறுப்பை கசக்கிய பிறகும், இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். ஈடுபட விருப்பம் நிறைய இருக்கும். ஆனால் விந்து சக்தியே ஸ்டாக் (இருப்பு) சேராது. மானி சிறுத்து சுருங்கி, ஜில்லிட்டு, விரைப்பு தட்டாது. மீறி பெண்ணை தொட்டவுடன் கொஞ்சம், நஞ்சம் இருப்பதும் விந்து சக்;தி வெளியே கொட்;டி விடும். அதனால் மரண களைப்பு ஏற்படும்;;;. அதனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் உள்ளே ஒரு இஞ்சிக் கூட போகாது. வெயில் காலம் எலுமிச்சை பழச்சாறு, மது வகைகள், டீ அதிகம் குடித்த பிறகு இந் நிலை கூட வரலாம். (பெண்ணை நினைத்தவுடனேயே சக்தி கொட்டி விடும். அதனால் உயிர் போகிற மாதிரி வலிக்குது என்பார். ACETIC-ACID). விந்து போன பிறகு பலஹுனதால் மானி தளர்ந்து விட்டால் AGNUS-C, CALAD, SELIN. மலம் கழியும் போது குபுக்ன்னு கொட்டி விடும் ALOE, CALC, SANI, SEP, STICTA.