SANGUNARIA சாங்குனேரியர்
மூலம்: இரத்த நாளத்தையே அறைத்தது.
நம்முடைய நோய் குணமாகி விடும் என்று டாக்டரையும், மருந்தையும் 100ு நம்புவார்கள். நம்பாதவர்கள் HYOS. (100ு சந்தேகம் படுபவர் LACH). பருவ காலத்தில் முறை வைத்து தொல்லைகள் தாக்கும்;. தலைவலி கண்ணே வெடிக்கிற மாதிரி வலிக்கும். அழுத்தி விட்டால் தணியும். பின் மண்டையில் வலி ஆரம்பித்து மேலே ஏறி இடது கண் குழியில் முடியும். இரவில் கக்குவான், மற்ற இரும்பல்கள் எல்லாம் அதிகமாகும். வாதவலிகள் தோன்றும். இளம் பெண்ணுக்கு ஏராளமான முகப்பருக்கள் தோன்றும். இவர்கள் நேர்மையானவர்கள், உண்மையாகவும,; நேர்மையாகவும்; இருப்பார்கள். மன வேலையும்;, உடல் வேலையும், கடுமையாகவும் செய்வார்கள். அதனால் உடல் எல்லாம் வலிக்கும். தேய்த்து விட்டால் சரியாகி விடும், என்பார். தலை வலி மட்டும் வெடிக்கிற மாதிரி வலிக்கும். (வெயில் ஒளிப்பட்டு அதனால் வெடிக்கிற மாதிரி தலை வலித்தால் GLONI). ஆகவே வெயில் பட்டு வெடிக்கிற மாதிரியா, வெயில் படாமல் வெடிக்கிற மாதிரியா என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். நம்பிக்கையோடு செயல்படும் மனிதர்கள். வாயில் சர்க்கரை போட்ட மாதிரி அவ்வளவு இனிப்பாக வாயில் ருசி தெரியுது என்பார். அதே மாதிரி சர்க்கரை (இனிப்பை) போட்டால் கசப்பாக ருசி தெரியுது என்பார் இரண்டு குறிக்கும் ஒரே மருந்து இது தான்.