SAMBUCUS சம்புகாஸ்
மூலம்: மரத்தில் வரும் மல்லிகை பூ.
சளி இருக்காது, அப்போது கூட மூச்சு விட இழுக்க திணருது என்பார். சளியிருந்து இப்படி திணறினால் SULPH. நள்ளிரவில் இதய நோயாளிகாரர்களுக்கு இப்படி திணறினால் LOBELIA. SPIGELIA.. மூச்சி வெளியே விட முடியலீங்க என்பார். அதற்கு ஒரே மருந்து SAMBUCUS.முக்கி, முக்கி மூச்சு இழுப்பார். இரவு கஷ்டம். இரவு பயமும், கவலையும் இருக்கும். இது ஆஸ்துமாவில் பொருந்தும், குறியை பார்த்துக்கொள்ளனும். குழப்பமும், பயமும் என்றால் ARS, ALOE, SAMBU தான். வாழ்க்கையில் பொருளில் வெறுப்பு என்பார். ஆனால் விடா பிடியும், வாதமும் இருக்கும். சுவற்றில் டி.வி. உருவம் மாதிரி தெரியுது என்பார். வியர்வைக்கு பிறகு குழப்பம். திக், திக்குனு விழுவார்கள். பிறகு மயக்கமே வந்து விடும். தூக்கத்தில் திக்குனு விழுந்தால் CHIN. காய்ச்சலின் போதும், தூக்கத்திலும் தேம்பி தேம்பி அழுவார். குடித்து விட்டு ஆர்பாட்டம் செய்வார். ஏழு மருந்தில் இதுவும் ஒன்று. வெளியே வரும்; மூச்சுக்காற்று அடைப்பு, அதனால் குழந்;;தைக் கூட நெஞ்சைத் தூக்கி, தூக்கி, இறக்கி இப்படி மூச்சு விடும், இழுக்கும். பென்ஸ்;(BENS);;; லாரி மாதிரி புஷ், புஷ்னு மூச்சுக் காற்று விடுவார்கள். வறண்ட சளி, வறட்சி, படபடப்பு, மூக்கடைப்பு இருக்கும். தூங்கும் போது வறண்ட காய்ச்சல், எழுந்தால் வியர்வை, காலை நான்கு மணிக்கு மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், சிரித்த மாதிரியே இருப்பார்கள். அசால்டாகவும் இருப்பார்கள். காலையில் குழப்பம் பிறகு தெளிவு. கண்ணை மூடினால் பேய், பிணம் தெரியுது என்பார். தூங்கினால் வியர்வை CHINA.