RUMEX CISPUS ருமக்ஸ் சிஸ்பஸ்

மூலம்: மஞ்சள் நிறமுள்ள பூண்டு.

இதுவும் N-S போல ஈரம் பருவ கால மருந்து. தானாக உணர்வின்றி மலம் SULPH. மாதிரி. மழை, குளிர் காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும். அப்படியே ஒழுகும். கட்டி கட்டியாகவும் வரும். அதிகப்படியான சளிக்கு ஒரே மருந்து இது தான். கணைத்துக் கொண்டும், காரிக்கொண்டும் இருப்பார்கள். தொண்டை, நெஞ்சு, எரிச்சல் அதையே நினைத்து அதிக கஷ்டம் BRY. அல்ல, RUMEX. காற்று தேவை இல்லை. BRY காற்று தேவை. NUX மாதிரி இருக்கும். போர்வையை உடல் முழுவதும் போர்த்திக்குவார். NUX-V கையை மட்டும் வெளியே வைப்பார். HEP-SUL.குளிர் காற்றை உள்ளே (மூச்சை) இழுக்க முடியாது. அதிக உணர்ச்சி. இவர்கள் வாயை மூடிக் கொண்டு மூச்சு இழுப்பார்கள். இதே இடத்தில் நெற்றியைத் தவிர மற்றயிடத்தை போர்த்திக் கொண்டால் ARS. சளி பிடித்த காலத்தில் சளி, பேதியும், மாறி, மாறி வந்தால் இது தான். தொண்டையில் ஒரு மாதிரி சளி கணைத்துக் கொண்டேயிருப்பார். இதே இடத்தில் கணைத்தால் PHOS. காரி, காரி துப்பினால் RUMEX. கணைக்க காரித் துப்ப, இரண்டுக்குமே சத்து இல்லாமல் பலஹீனமாக இருந்தால் CAUST. பச்சையாக, மஞ்சளான சளி என்றால் N-S. நாரு மாதிரி சளி என்றால் RUMEX. பேசும் போது வாயை மூடிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் கவனிக்காமல் அசால்டாக கண்டுக் கொள்ள மாட்டார்கள். (சோமனாமேனிய) தூக்கத்தில் நடப்பார்கள், கார் கூட ஓட்டுவார்கள். ஆபிஸிலிருந்து வந்து ஆடையை கழற்றியவுடன் அப்ப வெளிக்காற்று படும் பாருங்க அப்ப தான் அரிப்புங்க என்பார். தொண்டையில் சளி அப்பிக்கிட்டு இருக்கும். அது நார், நாராக வரும். மனைவி கூறுவாள், வருகிறார், போகிறார் எதையும் கண்டுக்க மாட்டுகிறார் குடும்பத்தை என்பாள். புறக்கணிப்பு. சளி பிடித்த காலத்தில் காரா எலும்பு வலி, மாலையில் எதுவும் செய்யமுடியாது.