RUTA GRAVEOLENS ருட்டா க்ராவெலென்ஸ்

மூலம்: ஓடுவந்தலையின் கசப்பு பகுதி.

எலும்பில் அடிப்பட்டு விட்டதுங்க என்றாலும், எலும்பில் அடிப்பட்ட மாதிரி வலிக்குதுங்க என்றாலும், எலும்பைச் சொல்லி, எலும்பைப் பற்றியே புகார் சொல்லி அது வலிக்குதுங்க என்று சொன்னால் இது தான் மருந்து. பொதுவாக அடிபடுவதற்கும், பிளவுக்கும், சிராய்ப்புக்கும் வேறு, வேறு மருந்தாகும். எலும்பு அடிக்கு முக்கிய மருந்து இது தான். எலும்பில் அடிப்பட்ட மாதிரி வலிக்குதுங்க என்று பொய்யாக சொன்னாலும் இது தான் மருந்து. எலும்பில் அடிப்பட்டு நைவுக்காயம் மாதிரி இருக்குதுங்க என்றாலும் இது தான் மருந்து. எழுத்தாளர், டைலர் போன்றவர்கள் கண்களைப் பயன்படுத்தி வேலை செய்து ஏற்படும் கண் தொல்லைகளுக்கு இது தான் மருந்து.