RICINUS COMMUNIS BOFAREIRA ரிசினஸ் கம்மோஸ் பொப்வரியர்
மூலம்: விளக்கெண்ணையிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.
இம் மருந்துக்குரியவர்கள் வயிறு உப்பிசத்தைப் பற்றியே கூறுபவர்களுக்கும், (வாயு தொல்லை) மலக் காற்று அடிக்கடி பிரிவதை கூறுபவர்களுக்கும் இந்த மருந்து. பால் குறைவாக உள்ள தாய்மார்களுக்கு இதை கொடுத்தால் பால் அதிகமாகச் சுரக்கும். முக்கியமாக இம் மருந்தின் குறிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாந்தியும், குமட்டலும் ரொம்ப நேரம் ஏற்படுவதால் களைப்பு தட்டி விடுவார்கள்.
பின் மண்டையில் வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்படும். இரத்த தேக்கம் காணப்படும். காதில் வண்டு கத்துவது போன்ற சப்தம் கேட்கும். முகம் வெழுத்துக் காணப்படும். வாய் உதறலும் (நடுக்கலும்) காணப்படும். பசியே இருக்காது. ஏராளமான தாகமும் இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பார். வயிறு எரிச்சல், வயிறு புளிப்பு தட்டி நெஞ்சு கரிச்சலும், வயிறு எரிச்சலுமிருக்கும். உடன் குமட்டல், எக்கசக்கமான அளவு வாந்தி எடுத்தல், தொப்புளில் வலி ஏற்படும். வாய் வறட்சி. மலக்குடலில் உள்ள குடல்கள் இழுத்துப்பிடித்து போன்ற வலி. பேதி போக வேண்டும் என்ற எண்ணமிருக்கும். (பேதி போனால் அரிசி கழுவின தண்ணி மாதிரியே போகும் வேறு எதுவும் இருக்காது. மலம் கழியும் போது வயிறு இழுத்துப் பிடிக்கும். வயிற்றில் கட, முடனு சப்தமும் கேட்கும். உடல் ஜில்லிப்பு, மலம் அதிகமாக வரும் அப்ப வலியிருக்காது, பிறகு ஆஸன வாயில் வலி ஏற்படும். மலம் பச்சையாகவும், சீதமாகவும், சளியாட்டமும், இரத்தம் கலந்தும் வரும். காய்ச்சல் உடல் இளைத்துக் கொண்டே வரும். அதனால் கேனம் பிடித்தது போலவே இருப்பார்கள்.
உறவான மருந்துகள்:- வெயில் காலத்தில் ஏற்படும் தொல்லையுடன் வாந்தியும் இருந்தால்:- RESORCIN. தசைகளில் இழுத்துப் பிடித்து இருந்தால்:- CHOLOSTERRAPINA, ARS, VERAT. மருந்தின் வீரியம்:-3x. திரவத்தின் வீரியத்;தை, பாலில் கலந்து தாய்க்கு கொடுத்தால், பால் சுரக்காத பெண்களுக்கு இந்த மருந்தை பாலில் ஐந்து சொட்டுகள் விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம். பால் சுரக்கும் வரை.