PLANTAGO – MAJOR பிலான்டக்கோ மேஜர்
வாழைப்பழத் தோலிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.
இந்த மருந்து பல் வலிக்கும், பல் சொத்தைக்கும் பயன்படும் மருந்துகளில் இது முக்கிய மருந்து. பல் வலியின் போது, காது வலியும் ஏற்படும். பல் எவுறு கரைந்து கொண்டே வரும். கண் வலி, கண் முட்டையின் நடுவில் இழுப்பது போல் வலி எற்படும். பல் வலி நடு காது வரை வலிக்கும். பல் வலியினால் கண்ணின் நடு முட்டையில் சுளீர், சுளீர் என வலி ஏற்பட்டு மற்றயிடங்களுக்கு எல்லாம் பரவும். விரும்பி சாப்பிடும் பொருளின் மீதே வெறுப்பு ஏற்படும் மனநிலையுடையவர்கள். உதாரணமாக வாசனை புகையிலை, வாசனை சிகரெட் போன்றவற்றில் நிக்கோட்டின் என்ற வாசனைப் பொருள் கலக்கிறார்கள். இந்த நிக்கோட்டினை சாப்பிட்டு, சாப்பிட்டு வெறுப்பு ஏற்பட்டுவிடும். இந்தியாவில் ஹோமியோபதி முறையில் தயாரிக்கப்படும் பல் பொடிகளில் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்.
காலை, ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை தலை தளர்ச்சியாக இருக்கும். இது முறை வைத்து வரும் (அ) காலை ஏழு மணிக்கே ஆரம்பித்து உடனே விட்டு விடும். (அ) மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து உடனே விட்டு விடும். கண்ணில் கிழிப்பது போல வலி, தலை முழுவதும் பரவி முகத்துக்கு வந்திடும். காதில் சுளீர்னு வலி ஏற்படும். காது விரைப்பாக இருக்கும். ஏதோ சப்தம் கேட்கும். காது நரம்பெல்லாம் வலிக்கும். உடனே தொண்டை, தலை, காது, பல்லுக்கு என மாறி, மாறி வலிச்சிக்கிட்டே இருக்கும். தண்ணியாட்டம் மஞ்சள் நிறமான சளி தீடீரென வரும்.
பல்வலி ஏற்படும் உணர்ச்சி அதிகமாகி இரணமாட்டம் ஆகிவிடும். பல் எவுறு கண்ணமெல்லாம், வீங்கிவிடும். எச்சில் ஒழுகும். பல் நீண்ட மாதிரி, உணர்வு காற்று கூட பட முடியாது. ஆனால் சாப்பிட்டால் வலி எதுவும் தெரியாது.
மலச்சிக்கல், பேதி என மாறி, மாறி ஏற்படும். மலம் கழியும் போது முக்க முடியாது. காரணம் மூலத்தொல்லையும், இருக்கும். மலம் வரும் போதே பாதியிலே நின்று விடும். பேதி மரக்கலரில் தண்ணியாட்டம் வரும்.
சிறுநீர் ஏராளமாக கொட்டும். சிறுநீர் கழிவதேக் கூட தெரியாது. பல் வலியின் காரணமாக உடன் ; RHUS-T, BELL, AROM, CAUST.
சருமம் பிப்பாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தடிப்பு, தடிப்பாகவும், மினு, மினுனும் இருக்கும். நகச் சுத்தியும் வரும். உடன் (AGAR, TAMUS.) உறவு மருந்துகள் :- KALM, CHAM, PULS.மருந்து வீரியம்:- தாய் திரவகத்திலிருந்து குறைந்த வீரியம் வரைத் தரலாம்.