PLATINUM – METALLICUM ப்ளாட்டினம் மெடாலிக்கம்

தங்கத்தை விட 10 பங்கு விலையுர்ந்த ஒரு உலோகம்.

இம் மருந்துக்குரியவர்கள், சிறு பொருட்களை வைத்து கொண்டும் படிப்பு, அழகு பொருட்கள், குறைவாக இருந்தாலும் கூட நம்மிடம் எல்லாமே இருக்குது. நாம் தான் உயர்ந்தவர் என்ற ஆணவம், தற்பெருமை பேசுபவர். பிறரை கேலியும், கிண்டலும், இழிவுபடுத்தியும் பேசுவார்கள்;. இவர்களுக்கு பிறர் குறைகள் மட்டும் தான் தெரியும். அதை வைத்து இழிவு படுத்துவார். அவள் கூறுவாள் எனக்கு தகுந்த கணவன் இல்லைங்க என்பாள், இவன் குண்டாக இருக்கிறான், கருப்பாக இருக்கிறான், இப்படி நிறைவை கூட குறைவாக சொல்லி திட்டுவாள். நான் எங்கேயோ, பெரியயிடத்தில் பிறக்க வேண்டியவள், பிச்சக்கார கூட்டத்தில் பிறந்து விட்டேன் என்பாள். என் பிள்ளைகள் பாருங்க, தலையும், அதுங்க உடம்பும், இந்த தௌ;ளவாரி நாயிங்க, என் வயித்தில் பிறக்க வேண்டியவர் இல்லை, திருடன்களாக வந்து பிறந்து விட்டது என்பாள். சாமியார் என்றாலும் கூட ஆணவ தோரணை தெரியும். பூசாரி என்றாலும் கூட அவர் அதிகாரம் தெரியும். பிச்சைக்காரர் என்றாலும் தான், தான் உயர்வு என்று நினைப்பார். காந்தியை கூட சொட்டையன் என்றும், துண்டு கட்டியவன் என்று கேலி செய்வதும், யாராக இருந்தாலும் இழிவுப்படுத்துவதும், தான், தான் உயர்வு என்ற ஆணவ பேச்சும், செயலும் இருக்கும். செக்ஸ் விருப்பம் மிக, மிக அதிகம். ஆனால் இவர்களை தொட்டவுடன் மயங்கி போய் விடுவார்கள். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் துணைவணை கொச்சை, கொச்சையாக திட்டுவதும் உதைப்பதும் இவர்கள் செய்வார்கள்;, செக்ஸ் விருப்பத்தை தணிக்க முடியாததால், பேச்சும் பெருமையும் இப்படியே தான் இருக்கும் இவரை அடையாளம் கண்டு கொள்ளவும். வலி மரத்து போவதும், ஜில்லிப்பு தட்டுவதும் மாறி மாறி ஏற்படும். இடுப்பு பகுதி, மானி கட்டி போட்ட மாதிரி உணர்வு.