PICRICUM - ACIDUM பிக்ரியம் ஆசிடம்

பிக்ரிக் என்ற ரஸாயனம்.

இவர்கள் சோகை பிடித்த மாதிரியும், முகத்தைப் பார்த்தால் எலுமிச்சை பழம் மாதிரியும் (நிறம்)இருக்கும். ஆனால் என் இரத்தம் சூடாக ஒடுதுங்க என்பார். அதற்கு பச்ச தண்ணீரில் குளிப்பதும், குளிர்ந்த காற்றில் இருப்பதும் சுகம் என்பார். மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும், மூளையை போட்டு கசக்குவதும், அதிக சிந்தனை செய்வதும், குழப்பமும், கோபமும் ஏற்படும். மூளை அதிர்ச்சி ஏற்பட்டு கிரு, கிருப்பில் முடியும். பின்பு சிறிதளவு உடல் வேலை செய்தாலும், அறிவு மங்கி போய் விடும். மூளையில் சக்தியே இருக்காது என்று கென்ட் அவர்கள் கூறுகிறார். சிறுநீரில் பாஸ்பேட், யூரிக் ஆஸிட் உற்பத்தி ஆகிவிடும். சிறுநீர் பை பலஹீனப்பட்டு விடும். வியாபாரிகளுக்கும், கந்து கடைக்காரர்களுக்கும் இது பொருந்தும். பார்த்துக்கனும்.