PETROLEUM பெட்ரோலியம்
மூலம்: பெட்ரோலியத்தில் இருந்து செய்யப்பட்டது. (மூலபொருள்).
பெட்ரோல், மண்ணென்ணை, குரூடு ஆயில் போன்ற இவைகளை பயன்படுத்தும், இது சம்பந்தமாக வேலை செய்யும் தொழிளார்களுக்கு, ஏற்படும் விளைவுகளை முறிக்க பயன்படும். கார், கப்பல், விமானம் போன்றவற்றில் பிரயாணம் செய்யும் காலங்களிலும், இடி, மின்னல் காலத்திலும், மன வேலை அதிகம் செய்தாலும், வெறுப்பு ஏற்பட்ட பின்பும், முட்டைகோஸ் சாப்பிடுவதாலும், மேலே கண்ட காரணங்களால் நோய், வலி, கஷ்டம் ஏற்படும். ஈரம் இல்லாத பருவ காலத்திலும், தலையணை, உயரமாக வைத்து படுத்தாலும் சுகம். இருட்டில் சுகமாக இருக்கும். வெளிச்சம் என்றால் தொல்லை, ஈர பருவ காலத்திலும், வெய்யில் துவங்கும் போதும், சரும நோய்கள். சின்ன காயம் பட்டாலும் சீழ் பிடித்து விடும். பசியினால் வயிறு வலிக்கும். சூடு என்றால் மயக்கம் தோன்றி வாந்தியில் முடியும்.