PHOSPHORUS பாஸ்பரஸ்

மூலம்: பாஸ்பரஸ்.

இம் மருந்துக்குரியவர்கள் கூறுவார்கள். என் உடம்பில் என்ன இருக்குது என்று தெரிந்துக் கொள்ள ஸ்கேன், இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே எடுக்கலாமா என்று கேட்பார்கள். தனிமை பயம், குடும்பத்தில் கட்டுபட்டிருக்கிறேன் என்று மனைவியோ. கணவனோ கூறினால் இது தான் மருந்து. பேசும் போது கேள்வி கேட்டால் பதிலை தாமதமாக கூறுவார். உடனே கூறமாட்டார். நான் பச்சையாக சொல்லறேன், உண்மையை வெளிப்படையாக சொல்கிறேன், என் இரகசியத்தை கூறுகிறேன், என் மனதை திறந்து பேசுகிறேன் என்றால், இவர்கள் கருப்பாக இருந்தாலும் ஆடையை குறைத்துக் கொள்வதும், மேக்கப் செய்வதுமாகவே இருப்பார்கள். கருப்பாக இருந்தால் கூட தான் அழகி என்ற எண்ணம் இருக்கும்.கால் மேல் கால் போட்டுக் கொண்டு அடிக்கடி ஆடைகளை சரி செய்வதும் பிறரை வசீகரிப்பதற்காக, பிறர் பார்கட்டும் என்பதற்காகவும், இரவல் நகை, துணி மணி, மேக்கப், பந்தா மாதிரியே தான் செய்கை செய்வார். கம்பீரம், தாயத்தைக் கட்டியதும், பாடம் போட்டுக் கொள்ள மற்றும் மற்றவர்களுக்கு பாடம் போட விரும்புவார்கள். பிறருக்கு ஆசிர்வாதம் செய்வதும், பிறரிடம் ஆசிர்வாதம் வாங்குவதும், அன்பு காட்டினால் அவரும் அதிக அன்பு செலுத்துவார். இடி, மின்னல் பயத்துக்கு ஒரே மருந்து. PLAT – – னாக் காரர்கள் அன்பு செலுத்தினால் திரும்ப செலுத்த மாட்டார்கள். ஆணவக்காரர்கள். ஆனால் PHOS போலவே மேக்கப்பும் இருக்கும். குளிர் காய்ச்சல், மற்ற நோயின் போதும், ஐஸ்வாட்டர் சாப்பிட்டால் சுகம் என்றால். டாக்டரிடமே நான் வேலைக்கு போகலாமா என்றுக் கேட்டால். வேறொருவர் நல்ல செயலை செய்தால் அவருக்கு நன்றி கூறுவார். மின் அதிர்ச்சி, மின்னல் அதிர்ச்சி, ஷேக் அடித்த மாதிரி வலி, பளிர்னு வந்திட்டு போகுதுங்க என்று கூறினால், ஊசி குத்திய பிறகு இரத்தம் உறைய செய்யவும், குணப்படுத்துவதற்கு நல்ல மருந்து. தனியாக. மறைவாக இரகசியமாக பேச வேண்டும் என்பார்கள். தொண்டையில் சளி அப்பும். அடிக்கடி கனைத்து கொண்டால் நல்லாயிருக்கிறது என்பார்கள். இருப்பினும் ஐஸ்கிரிம் விரும்பி சாப்பிடுவார்கள். வயிற்று வலி, தலைவலி, பிற நோய்களின் போது கூட ஐஸ்வாட்டர் குடிக்கலாமா என்பார். குடித்தால் வயிற்று வலி விட்டு போகுதுங்க என்பார். சூடாக குடித்தால் வயிற்று வலி அதிகம் ஆகிறது என்றால் FL-AC, PULS.