NUX - VOMICA நக்ஸ் வாமிகர்
மூலம்: எட்டிக்காய்.
இம்மருந்துக்குரியவர்களது மனநிலை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் சரியா வேலை செய்யணும், வெச்ச பொருள், வெச்ச இடத்தில் இருக்கணும். சேர் கொஞ்சம் கோணையாக இருந்தால் கூட எட்டி உதைப்பான். எதாவது தவறாக எழுந்திருந்தால் அந்தப் பேப்ரைக் கசக்கி தூக்கி எறிந்து விடுவார். இதே மாதிரி இருந்தால் ARS. தாங்கிக் கொள்வான். இவ்வளவு மோசம் கிடையாது. எந்த வேலையையும், எவ்வளவு நேரம் செய்தாலும், இவர்களுக்கு திருப்தியே கிடையாது. சாவேன் என்று மெரட்டிக் கூறுவார்கள். பூ, பத்தி, சென்ட், வெளிக்காற்று, பேன் காற்று போன்றவைகளையும், வாசனையும் இவர்களால் தாங்க முடியாது. சிறிது கூட சேராது தொல்லை தரும். சிறுநீர் மலம் போன்றவை தான் தொல்லைத் தரும். மலம் பாதியிலேயே நின்று விடும். மலக்குடலில் பாதியிலே நின்று விடும். இதனால் தான் மலம் வருது என்ற உணர்வு. அதனால் மலம் அடிக்கடி போவான். பாதியில் நிற்பதால். மலம், பேதி, சீதக்கட்டு கழிந்தால் சுகம் என்பார்கள். மாத விலக்கு நீடித்தும், இடைவெளி குறைவாகவும் இருக்கும். நிம்மதி தேடுவான். இவ்வளவு வேலையும் செய்யதப் பிறகு, போலிசில் பிடித்துக் கொள்வார்களோ என்று அதிக உணர்ச்சி வசப்பட்டால், அனைவரிடமும், இவன் வேலை வாங்குவான். ஆனால் இவன் செய்ய மாட்டான். மற்றவரை அமைதியாக இருக்க சொல்வான். ஆனால் இவன் கத்திக் கொண்டே இருப்பான். காப்பி சாப்பிட்டால் தொல்லை. எனக்கு நிம்மதி வேண்டும் என்பான். மற்றவர் தப்பு செய்தால் பொருத்து கொள்ள மாட்டான். அதிகாரம் செய்யும் ஆபிஸர், உத்தரவு போட்டு பேசுவான். சேராத உணவு, சித்த மருந்துகள், மற்ற மருந்துகள் சாப்பிட்டு வயிறு கோளாறு ஏற்பட்டால் அதை முறிக்கப் பயன்படும். குளிரின் போது கையை சுருட்டி போர்வைக்குள் வைப்பார். (வயிறு வலினால் வாந்தியில் மலமே வந்து விடும். PLB என்ற மருந்தும் பொருந்தும்.) பிறர் சிறிய தப்பு செய்தாலும் பொருக்க மாட்டான். (மன்னிக்கவே மாட்டான் ACID – NITE) கேள்வி கேட்டால் பயம், உணர்ச்சி வசப்பட்டு கூறுவார்.
OCIMUM – CANUIM - ஓசிமம் கானாப்பியம்
பிரேஷ் நாட்டில் விளையும் சத்து மிக்க ஒரு தாவரம்.
இது முக்கியமாக சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் பாதைகளில் தோன்றும் தொல்லைகளுக்கு பொருந்தும். எப்படி என்றால் இவர்களுக்கு சிறுநீரில் உப்பு அதிகமாகிவிடும். பின்பு சிறுநீர் போனால், சிவப்பு நிறத்தில் மணல் மாதிரி சிறுநீரில் வந்து விடும். அதை ஒரு பாட்டிலில ;பிடித்து பார்த்தால் இப்படி சிறுநீரில் மணல் மாதிரி படிவங்கள் காணப்படும். இதற்கு இதுவே முக்கிய மருந்து. தொடையிடுக்கில் உள்ள கோளம் திடீர்ன்னு வீங்கி போயிடும். நெறி கட்டிகிச்சி என்பார்கள். வலது தொடையில் இப்படி வீங்கும். நினைநீர் கோளத்துக்கும், சிறுநீர் குழாய் பாதை வீங்கி தொல்லை தரும்.
சிறுநீரகம்:- குறிப்பாக இது சிறுநீரக தொல்லைக்கு பொருந்தும். அதாவது கட்டி எடுத்த பிறகும், காரமான சிறுநீரும், பல விதமான வலியும், சிறுநீரில் அதிகம், இரத்தம் வந்தாலும் பல விதமான வலிகளுக்கும் முக்கிய காரணம் இதுவே.
ஆண்:- இடது புற விதைக் கொட்டை வீங்கி சூடாக இருக்கும்.
பெண்:- பெண் பிறப்பு உறுப்பு, உதடு வீங்கி பெருத்து இருக்கும். மேட்டு பகுதியில் கத்தியில் அறுப்பது போன்ற வலி. மார்பு பெரியதாகவும், கனமாகவும் இருக்குது என்றும், காம்பு மேல் கை பட்டாலும் வலிக்குது என்பாள். பிறப்பு, உறுப்பை சொறிந்து, சொறிந்து உறுப்பே தொங்கி போய்விடும்.
சிறுநீர்:- சிறுநீரில் தட்ட பயிர் மாதிரி கற்களும், வெண்ணெய் மாதிரி திவளைகளும், தயிர் மாதிரியும், கோந்து மாதிரியும், இரத்த மாதிரியும், சிறுநீரில் இருக்கும். சிறுநீர் காரமாகவும் இருக்கும்.
OLEUM – SANTALIA - ஓலியம் சான்டலியர்
சந்தன எண்ணை.
இம் மருந்து சிறுநீரக பாதையிலும், செக்ஸ் உறுப்பிலும், விசேஷமாக வேலை செய்யும். அதனால் விசேஷமாக கனேரியாவுக்கு இது சுத்தம் செய்ய உதவும். இவர்களுக்கு மிகவும் கடுமையான இருமல் ஏற்படும். அதற்கு ஒரு மிளகு அளவு சர்க்கரையை வாயில் போட்டால் போதும். உடனே எக்கி, எக்கி இருமி கொண்டிருப்பது உடனே தணிந்து விடும். சிறிது, சிறிது தான் கோழை வரும்.
ஆண்:- விரைப்பு தட்டும் போது மானி கடுமையாக வீங்கி வலிக்கும். அப்போது மஞ்சள் நிறமான சளி மாதிரி திரவம் கசியும். பெரினியம் (ஆஸன வாய்க்கும், மானிக்கும் இடைப்பட்ட பகுதி) உள்ளே கடுமையான வலியிருக்கும்.
சிறுநீர்:- அடிக்கடியும், எரிச்சல் வெட்ற மாதிரி வலியும், வீங்கியும், வாய் சிவந்தும், சிறுநீர் மெதுவாகவும், சன்னமாகவும் வரும். சிறுநீரகம் வரை வலி பரவும். கருப்பையே ஒரு பந்தாட்டம் உருண்டு யோனி புற வாயில் தெரியும். அப்போது நிற்க கஸ்டமும், ஒரு திரவம் கெட்டியாக நிறைய கசியும். நாட்பட்ட கட்டி தெரியும் அதற்கு இது நல்ல மருந்து.