NATRUM –SULPHRICUM நேட்ரம் சல்ப்ரிக்கம்

மூலம்: காந்தமும், உப்பும் கலந்த கலவை.

மண்டை, பொடனி, மூளை பகுதியில் அடிப்பட்ட பிறகு, அறுவை சிகிச்சைக்கு பின்பு மண்டையில் ஆழமான குத்து ஏற்பட்ட பிறகு ஏற்படும் பொதுவான அடிக்கு ARNICA. லேசான குத்துக்கு LED. ஏரியில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பவர்கள், நெல் வயல், சதுப்பு நிலப் பகுதியில், ஈரமான பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு இது. என் மனைவி குழந்தைகள், கணவன், குடும்பத்திலிருந்தும், பதவியிலிருந்தும் போயிடுவேங்க, ஆனால் உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் கட்டு, பட்டு இருக்கிறேன் என்பார்கள். மாலை 4 வடி 7 வரை ஆஸ்துமா தொல்லை. கனேரியாவில் காலை 4 வடி 7 வரை வயிறு தொல்லைகள். மஞ்சள், பச்சை நிற வாந்தியும் ஏற்படும். சளியானது நாராட்டம் பச்சை நிறத்தில் வரும். இதேயிடத்தில் நாராட்டம் மஞ்சளாக வந்தால் HYD. இதே வெள்ளை நிறத்தில் நாராட்டம் வந்தால் K-BICH.

பெண்:- மாத விலக்கானது மூக்கில் வரும். காரமாகவும், எரிச்சலோடும் கொட்டும். இவர்களுக்கு வெள்ளையானது மஞ்சளும், பச்சையும் கலந்த மாதிரி இருக்கும். குழந்தையானது சிறு தவறு செய்யும், அப்போது திட்டினால் கூட மனம் நொந்து போகும். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள்.

மனநிலை :- இசைக் கேட்டால் இவர்களுக்கு வருத்தம் ஏற்படும். பித்து, பிடித்து போய் விடும். முறை வைத்து வரும் மன நோய் (பைத்திய குணம்) எப்பவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும். பாருங்க மருந்து வைத்து இருக்கிறேன், என் பையன், பொண்ணுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் மருந்து குடிக்காம கட்டு பட்டு இருக்கிறேன் என்பார்கள். கோபம், தற்கொலை முயற்சி.

குறிப்பு:- ஒரு சாராயம் விற்கும் பெரியம்மா சொன்னாங்க. என் இடுப்பு பையிலே தாங்க அரளிக்காய் வைச்சி இருக்கிறேங்க, என் உடம்பில இருக்கிற நோயும், குடும்ப கஷ்டமும் தாங்க முடியலை, என் பையன் வேலைக்கு வந்து விட்டால் மருந்தை சாப்பிட்டு செத்து விடுவேங்க. அது வரை கட்டுபட்டு இருக்கிறேன் என்றார். இதை கொடுத்தவுடன் நோய் குணம் ஆகி விட்டது. படுக்கும் போது வயிற்றை அழுத்திப் படுத்தால் கூட ஈரல் பகுதி நகர்வது ஆடுவது, போலிருக்கும்.