MYRISTICA – SEBIFERA மைரீஸிடிகா செபிப்பேரர்

உடல்களில் வேக்காட்டினால் (சூட்டினால்) திசுக்கல் அப்படியே நின்று கட்டியாகி விடும். அதற்கு இந்த மருந்தை தந்தால் அந்த கட்டிகளை உடைத்து எடுத்து விடும். வேக்காடு அடைந்த சருமத்திற்கும் பரோடிக்ட் கிளாண்ட், மூலம், கொடி பவுத்திரத்திற்கு (வௌ;வேறான இரு உறுப்புகள் இயற்கைக்கு மாறாக அமைந்த ஒரு குழாயினால் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருத்தல்.) சருமத்தில் ஏற்படும் ராஜப்பிளவைக்கு இது நல்ல மருந்து. விரல் நுனியில் ஏற்படும் சீழ்கட்டிக்கு நல்ல மருந்து. விரல்களில் நகத்தில் வலியும் வீக்கமும். உடன் அதன் எலும்பில் வலி. புற்று நோயின் முதல் நிலை, செப்டிக் ஏற்பட்டால் அதை வெட்டி எடுக்க இம் மருந்து பயன்படும். கை, கால் நீட்டிக் கொள்ளுதல், மடக்கவே முடியாது. தொண்டையில் செம்பு சுவையும், எரிச்சலும் தெரியும். நாக்கில் வெள்ளை நிறப்படிவு உடன் பிளவை அடைப்பால் அசுத்த இரத்தக்குழாயில் எற்படும் வேக்காடு, சீழ் புண்கள் கொப்பளங்களுக்கு, இதை கொடுத்தால் அவற்றை எல்லாம் வெளியே தள்ளி குணமாக்கி விடும். காது கொப்பளத்திற்கும், மூல பௌத்திரத்திற்கும் இதைக் கொடுத்தால் கட்டியை உடைத்து வெளியே தள்ளிவிடும். SILICA, HEP-SUL -ரை விட அதிகமான சக்தி வாய்ந்த மருந்து. மற்றும் அதை விட அதிகமாகவும் தேவைப்படலாம்.