MURAX மூரக்ஸ்

மூலம்: ஒரு வகை நாட்டில் வாழும் கடல் மீன்.

கர்பகாலத்தில் கவலை, மன அசதினால் படுத்தே இருக்க விருப்பம். எவ்வளவு சாப்பிட்டாலும், வயிறு காலியாகவே இருக்கும். ஏழு நாள் ஆனாலும் மலமே போகாது. இது தான் இம் மருந்தின் முக்கிய குறி. பால் மாதிரி சிறுநீரும், சேக்ரலில் வலியும் இருக்கும். வெள்ளை அதிகம் போனால் சுகம் என்பார். வலது ஓவரில், இடது மார்பில் வலியும், கருப்பை தளர்ந்து விடும் SEP, LIL-T, க்கு காம விருப்பம் அதிகம். உடன் இருதய வியாதியிருக்கும். காமம் குறைவு SEP. இப்படி தான் பிரித்து பார்த்துக்கணும். பிப்பு இருந்தால் SULPH. செக்ஸ் உறுப்பு பகுதியில் துணிபட்டாலோ. வியர்வை பட்டாலும் கூட காம எண்ணம் அதிகமாகி வெறி பிடித்து விடும். மெனோபாஸ் நேரங்களில் இந்த மருந்து குணம் எப்படி என்றால் காம எண்ணம் மிக, மிக அதிகமாக இருக்கும். கட்டி, கட்டியாக மாதவிலக்கும், ஒழுங்கு அற்றதாகவும் இருக்கும். கர்பபையில் புண் மாதிரி வலிக்கும். இரவில் தாகமும், பசியும், சிறுநீரும் போகும். இது சக்கரை வியாதிகாரர்களுக்கு பொருந்தலாம். கருப்பை யோனியில் வந்திடுமோனு தொடையை இருக்கி பிடிப்பார். SEP. யாவும் இதே மாதிரி இருக்கி பிடிப்பார். ஆனால் செக்ஸ் அதிக விருப்பம். MURAX. யாரிடமும் பேச மாட்டார். கோபமாகவே இருந்தால் CHAM, MURAX, URA, கருப்பை கனமாக இருக்குதுன்னு அடிவயிற்றில் கையை கொடுத்து. தாங்கி பிடித்தால் LACH. இரவில் தாகம், சிறுநீர், பசி. இது சக்கரை வியாதிகாரர்களுக்கு பொருந்தும்.

MYRISTICA – SEBIFERA - மைரீஸிடிகா செபிப்பேரர்

உடல்களில் வேக்காட்டினால் (சூட்டினால்) திசுக்கல் அப்படியே நின்று கட்டியாகி விடும். அதற்கு இந்த மருந்தை தந்தால் அந்த கட்டிகளை உடைத்து எடுத்து விடும். வேக்காடு அடைந்த சருமத்திற்கும் பரோடிக்ட் கிளாண்ட், மூலம், கொடி பவுத்திரத்திற்கு (வௌ;வேறான இரு உறுப்புகள் இயற்கைக்கு மாறாக அமைந்த ஒரு குழாயினால் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருத்தல்.) சருமத்தில் ஏற்படும் ராஜப்பிளவைக்கு இது நல்ல மருந்து. விரல் நுனியில் ஏற்படும் சீழ்கட்டிக்கு நல்ல மருந்து. விரல்களில் நகத்தில் வலியும் வீக்கமும். உடன் அதன் எலும்பில் வலி. புற்று நோயின் முதல் நிலை, செப்டிக் ஏற்பட்டால் அதை வெட்டி எடுக்க இம் மருந்து பயன்படும். கை, கால் நீட்டிக் கொள்ளுதல், மடக்கவே முடியாது. தொண்டையில் செம்பு சுவையும், எரிச்சலும் தெரியும். நாக்கில் வெள்ளை நிறப்படிவு உடன் பிளவை அடைப்பால் அசுத்த இரத்தக்குழாயில் எற்படும் வேக்காடு, சீழ் புண்கள் கொப்பளங்களுக்கு, இதை கொடுத்தால் அவற்றை எல்லாம் வெளியே தள்ளி குணமாக்கி விடும். காது கொப்பளத்திற்கும், மூல பௌத்திரத்திற்கும் இதைக் கொடுத்தால் கட்டியை உடைத்து வெளியே தள்ளிவிடும். SILICA, HEP-SUL -ரை விட அதிகமான சக்தி வாய்ந்த மருந்து. மற்றும் அதை விட அதிகமாகவும் தேவைப்படலாம்.