MOSCHUS மஸ்கஸ்
மூலம்: கஸ்தூரி.
இந்த மருந்தின் முக்கியமான குறி. பித்து பிடித்து விடுதல், குளிர்ச்சியிலும், காற்றிலும் தொல்லை. நரம்பு தளர்ச்சியினால் மயங்கியே விழுந்திடுவார்.
மனம் :- கட்டுபாடு இல்லாமல் ஏராளமாக பேசுவார்கள். கவலை மிகுதியினால் பட, படப்பு, திக்கு, திக்குனு விழுவார்கள். காமவெறி பிடித்து விடும்.
தலை:- மூக்குத் தண்டில் வலியும், உச்சி வலியும் இருக்கும். சிறிது அசைவு ஏற்பட்டாலும், மயங்கி விழுந்து விடுவார்கள். சிறிது உயரம் போனாலும் மயங்கி விழுந்து விடுவார். ஏதேனும் பழைய செய்தியைக் காதில் கேட்டால், தலை உச்சியில் தட்ற மாதிரி இருக்கும்.
வயிறு:- பச்சையான காப்பி டிக்கேஷனை அப்படியே குடிப்பார்கள். உணவு சாப்பிட வெறுப்பு. எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். வயிறு சம்மந்தப்பட்ட தொல்லை, வந்தாலே நெஞ்சுக்குள்ளே தளர்ந்து போச்சி என்பார்கள். சாப்பிடும் போது மயக்கம் ஏற்பட்டு சாய்ந்து விடுவார்கள். அடிவயிறு நீண்டு விடும். இழுத்து, இழுத்து விக்கல் வரும். உடன் HYDROCY – AC, SUL-AC, IGN, CAJAF.
ஆண்:- இவர்களுக்கு அளவுக்கு அதிகமான செக்ஸ், விருப்பங்கள் இருக்கும். அதனால் விந்து பீச்சியடித்துக் கொண்டேயிருக்கும். பின்பு ஆண் தன்மையை இழந்து சக்கரை வியாதிகாரராகி விடுவார்கள் COCA. ஈடுபட்ட பின்பு வாந்தி ஏற்படும்.
பெண்:- மாதவிலக்கு முன்னதாகவும், மிக ஏராளமானதாகவும் போகும். இதனால் களைப்பு தட்டி கிரு, கிருப்பு ஏற்படும். . NUX-M, VERAT-A.இல்லற விருப்பம் சித்ரவதை செய்வதுப் போலிருக்கும். பிறப்பு உறுப்பை நசுக்கி. நசுக்கி உறுப்பே மாறி விடும். மாதவிலக்கு காலங்களில் இது அதிகமாக காணப்படும்.
சிறுநீரகம்:- ஏராளமான சிறுநீர் போய் சக்கரை வியாதிக்காராகி விடுவார்கள்.
சுவாசகோசம்:- நெஞ்சை இறுக்கி பிடிப்பது போல் இருக்கும். அதனால் ஆழ்ந்து சுவாசிப்பார்கள். திடீரென குரல் வளையை பிடிச்சு நசுக்குவது போலிருக்கும். அதனால் சுவாசிக்க கஷ்டமாக இருக்கும். பைத்தியம் பிடித்த மாதிரி ஆஸ்துமாவில் இழுத்து, இழுத்து சுவாசிப்பார். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல மருந்து. நுரையீரல் பக்கவாதத்தினால் இப்படி ஷேஸ்டை செய்வார். ஆஸ்துமா வியாதியின் போது கவலையும், பயமும் ஏற்பட்டு சளி சவ்வரிசி உருண்டையாட்டம் காரி, காரி நிறைய துப்புவார்.
இதயம்:- பட, படப்பும், இருதய நடுக்கமும், பலஹீனமான நாடிதுடிப்பும் ஏற்பட்டு கேணம் பிடித்து மயங்கி விழுந்து விடுவார்.
திறந்த வெளிக் காற்றில் இவருக்கு சுகமாக இருக்கும். ஆனால் குளிர்ச்சியா இருந்தால் கஷ்டம். ஆனால் அதிக குளிர்ச்சியாக இருந்தால் சுகம் என்பார். தேய்த்து கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் கேணம் பிடித்த மாதிரி இருப்பார்கள்.
உறவு மருந்துகள்:- NUX-M, ASAF, VALER, SUMBUL, IGN, CASTRO.