MILLEFOLIUM மிலி்போலியம்

மூலம்: ஏரோ என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை.

பல வகையான மூல நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து. அதுவும் மூலத்திலிருந்து சுத்த இரத்தம் வரணும். மூலத்துடன் எர்ணியா இருக்கணும். சின்னம்மைக்கு பிறகும் இப்படி ஏற்படலாம். தொப்புளில் அதிகப்படியான வலி, மூல ஆப்ரேஷன், சிறுநீர் கல் எடுத்தப் பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது நல்ல மருந்து. இதனால் (ஆப்ரேஷனால்) இவர்களது வளர்ச்சி குறைந்து விடும். சினைப்பை வீங்கி விடும். உயர்ந்த வெப்பநிலை இருக்கும். மூலத் தொல்லைகளையேத் தான் கூறுவார்கள். சிறிது அசைந்தாலும் கிரு, கிருப்பு. ஞாபக மறதி அதிகம். தலையில் அதிக இரத்தம் இருப்பதால், தலை நிரம்பியிருப்பது போன்ற உணர்வு. மாத விலக்கு அடக்கியதால், காக்கா வலிப்பு வரும். வலி விசுக், விசுக்கென இருக்கும். பளீர், பளீர் என தோன்றி மறையும்.

மூக்கில் இரத்தம் வரும். (உடன் ERECHT மருந்து). விசுக், விசுக் கென்ற வலி கண்களின் வேர்களிலிருந்து மூக்குக்கு வந்திருச்சு என்பார்கள். மூலத்தைச் சுற்றியுள்ள குடல்களில் வலி. மூலத்தைச் சுற்றிலும் இரத்தம் கசியும், சிறுநீரில் இரத்தம் வரும். உடன் (SEBEC-AUR.)

மாதவிடாய் குறித்த காலத்தில் ஏராளமாக, மூல நோய் மாதிரியே சுத்த சிவப்பு இரத்தம் ஏராளமாக ஊத்தும். வலி பலவகையாக இருக்கும். கர்பக்காலத்திலும் வலி ஏற்பட்டு இரத்தம் வரும். காச நோயாளியைப் போல இரும்பிக் கொண்டேயிருப்பார். இரும்பித் தும்பும் போதும், கடைசியில் இரத்தம் வரும். சுத்த இரத்தத்தைத் கூட காரி, காரி துப்புவார்கள். உடன் (IP.) மாதவிலக்கு அடக்கியப் பிறகு, மூல வியாதி பயங்கரமாகவும், நெஞ்சு பட, படப்பு இருக்கும். அதிக நாடிதுடிப்பு ஏற்படும். மூல வியாதியை அடக்கியப் பிறகு ஏற்படும் தொல்லைக்கு நல்ல மருந்து மற்றும் சுத்த இரத்தம் அதிகமாக கொட்டும்.

உறவு மருந்துகள்: IPECA, ERECHT, GERAN, HAMAM.