MANGANUM மாங்கனம்
மூலம்: மாங்கனிசின் புகை ரஸம்.
காது வலி தோன்றி பின்பு மற்ற உறுப்புகளுக்கு பரவும். அடிவயிற்றில் வெட்டும் வலியின் போது வாயில் ஜல வாய் ஊற்று மாதிரி ஊற்றும். இவர்கள் வயதுக்கு வருவதற்கு மிகவும் கால தாமதம் ஆகியிருக்கும். இவர்களது குரல் வளை கரஇ கரப்பான உரத்த குரலாக இருக்கும். குரல் வளையில் தோன்றுகின்ற வறட்சி தான் காரணம். கணையத்தில் தோன்றும் குழிப்புண்கள் அதன் பிறகு சர்க்கரை வியாதி தோன்றி விடுதல். இவர்களுக்கு மாதவிலக்கு Nடாக வரும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் பருவ காலத்தில் சதை மாதிரி கட்டி கட்டியாக மாதவிலக்கு போகும். அப்போது அது சுடு தண்ணியாட்டம் கொட்டுதுங்க, கறியை அறிஞ்ச மாதிரி இருக்குதுங்க என்றால் இது தான்; மருந்து. இதை மாதவிலக்கு நிற்கும் காலத்தில் சொல்வார்கள். இது இம் மருந்தின் முக்கிய குறி. குளிர்ச்சியான எந்த பொருளும் பல்லின் மீது பட்டாலும் வலி கடுமையாகி விடும். சோகை பிடித்த மாதிரி உள்ள பெண்கள் கூறுவார்கள் எனக்கு பாதியில் மாதவிலக்கு மிகவும் வலியோடு ஏற்படுகிறது என்பார்கள். பித்தப்பை கெட்டு பித்த கற்கள் உற்பத்தியாகி அங்கு வலி தோன்றும் இது முக்கியம். மற்ற வாதவலிஇ சரும வியாதிஇ ஆண்இ பெண் உறுப்பில் புண் என்றும் இப்படி பலஇபல பொது குறிகள் இருக்கிறது. இதை மத்தூரில் பார்த்து கொள்ளனும்.