MALARIA – OFFICINALIS மலேரியா ஆப்சினல்

ரொம்ப முட்டாள் தனமானவர்கள். தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மனநிலைமையும் உற்சாகமில்லாமல் மந்தமாகவே இருக்கும். தலையின் மீது ஏதோ மோதுவது போலவும், மோதியவுடன் தலை வெடிப்பது போலவும், இருக்கும். தன்னை சுற்றியுள்ள பொருள்கள், சுத்துவது போன்ற உணர்வும் இருக்கும், (தலை சுற்றல் (அ) மயக்கம்) தூங்கும் போது கிரு, கிருப்பு ஏற்படும். படுக்கையிலிருந்து எழுந்து நடக்கும் போது தலைச் சுற்றல் ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்து விடுவார்கள். முன் தலை நெற்றில் பொட்டுப் பகுதியில் மந்தமான, தொடர்ச்சியான வலி இருக்கும். திடீர், திடீரென, அடிக்கடி தலைவலி வரும். முக்கியமாக நெற்றியில் இப்படி ஏற்படும். தலை முழுவதும் பட, படவென அடித்துக் கொண்டு வலி ஏற்படும். மயக்கமும் அப்போது குழப்பம் ஏற்படுவது போல் உணர்விருக்கும். நெற்றியில் தலை வலி ஆரம்பித்து தலை முழுவதும் பரவி வலிக்கும்.

கண்:- கண்களில் தெரிக்கும் படியான (தொடர்ச்சியான) வலி ஏற்பட்டு அது வலது கண்ணுக்குள் சென்று வலிக்கும். கண் பாரமாகவும், தூக்கமான நிலையில் இருப்பது போல உணர்விருக்கும். கண் பலஹீனமாவும், பார்வை மங்கலாகவும், இருக்கும். படிப்பதை எல்லாம் வித்தியாசமாகத் தெரியும். கண்ணில் நெருப்பாட்டமும், நிலக்கரி எரிவது போல் எரியும். வலது புற காதின் வெளிப்புறத்தில் இழுத்துப் பிடிப்பது போல் வலி.

மூக்கின் வேர்ப்பகுதியில் அதிக மனத்தாக்கல் ஏற்படும். வலியினால், அதிகமான காய்ச்சலின் போது குளிரை விரும்புவார். மூக்கு மற்றும் அதன் மேல் பகுதியில் அளவுக்கு அதிகமான வலி இருப்பது போன்ற உணர்வு.

வலது கன்னம், கன்ன எலும்புகளில் அரிப்பு. மற்றும் முகம் கை, கால் எலும்புகளிலும் அரிப்பு ஏற்படுதல்) அப்போது அந்தப் பகுதியை லேசாக பட்டு, பட்டென, அடித்தாலும், சொறிந்துக்கொண்டாலும், சுகமாக இருக்கும். முகம் முழுவதும் லேசான சூடு பீரிட்டு பாயும். மேலும் அது உடல் முழுவதும் பரவும்.

பற்கள்:- இடது மேல் பற்களில் வலி. நாக்கின் மேல் புறத்தில் அங்கங்க என புள்ளியாட்டமும் இருக்கும். அதில் மிளகு சுவைத் தெரியும். அளவுக்கு அதிகமான எச்சில் வரும். நாக்கு வீங்கியிருக்கும். நாக்கின் மேலே, லேசாக மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் ஏதோ தடவியது போல இருக்கும். (கசப்பு சுவை, வாய் வறட்சி மற்றும் நாக்கு வெள்ளை நிறமாக இருக்கும்.) நாக்கு வெள்ளையாகவும் அதன் நடுவில் மரக்கலரில் வெட்டும் காணப்படும். நாக்கு வெள்ளை நிறமாகவும், தடிப்பாகவும் இருக்கும். வாய் ரொம்ப வறட்சியாக இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். ஆனால் உண்மையில் வாயில் ஈரம் இருக்கும். குளிர்ச்சியான பானம் சாப்பிட விருப்பம். வேறு எதையும் சாப்பிட முடியாது. மீறி சாப்பிட்டால் வாந்தி வரும். புளிப்பான வாந்தியும், ஏற்படும். தாகம் அப்பொழுது குளிர்ச்சியான நீரை சாப்பிட பேராவல். பசியே எடுக்காது. சாப்பாட்டின் மீது வெறுப்பு, உடல் நலம் குன்றி காணப்படுவார்கள். அதிகமான தண்ணீர் சாப்பிட விரும்புவார்கள். பிறகு மனநிலை மாறி உருளைக் கிழங்கு, ஆப்பிள், மாட்டு இறைச்சியை விரும்பி, சாப்பிடுவார்கள். கசப்பான கெட்ட சுவை வாயில் தெரியும். உடன் குமட்டலும் இருக்கும். நாக்கின் வேர்களில் வறட்சி, அழுக்கு பிடித்தது போல இருக்கும். நாக்கின் உள் வளைவுகளில் இருக்கி பிடித்தது போல இருக்கும்.

பெரும்பாலும் இரவில் பசி எடுக்காது. சாப்பாடு வேகும் நாற்றம் பிடிக்காது. ஆனால் விழாக்களில் சாப்பிட விருப்பமிருக்கும். விழாக்களில் (DINNER) ரில் சாப்பிட்டால் உடல் நிலை சுகமாக இருக்கும். அடிக்கடி எதுக்களித்தல், ஏற்படும். இதனால் அதிக தொல்லையாக இருக்கும். ஆனால் சுவை எதுவும் தெரியாது. குமட்டல், சளி போன்ற பொருள்கள் வாய்க்கு வந்து, வந்து போகும்.

அடி வயிறு சூடாக இருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்று வலியிலிருந்து மீளவே முடியாத அளவுக்கு வலி இருந்துகிட்டே இருக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களில் தொல்லைகள் ஏற்படும். (மூச்சு விடும் போது கல்லீரல் வலி ஏற்படாது. படுத்தால் வலி அதிகமாகும். அதிக அழுத்தம் கொடுத்தால் நல்லாயிருக்கும்.) (கல்லீரலில் கிச்சு, கிச்சு செய்வதுப் போல் இழுத்து பிடிப்பது போல வலி இருக்கும்.) (கல்லீரல், தோள்பட்டையில் அடிப்பகுதியில் இழுத்துப்பிடிப்பது போல் வலி.) (அடிவயிற்றில் மீள முடியாத அளவு வலியும், பாரமும், மலச்சிக்கலும் இருக்கும்.) வலியுடன் பேதி கழிவார்கள். குடல்கள் பலஹீனமாகிவிடும். கல்லீரல் பகுதியில் இருந்துக் கொண்டே இருக்கும். சிறுநீர், கழிந்தப் பிறகு வலி நின்று விடும். வலது தோள்பட்டையின் கீழ்ப் பகுதியில் தொடர்ச்சியான, தெறிப்பது போன்ற வலி. கல்லீரலில் பகுதியில் இழுத்து பிடிப்பதுடன் இரணமாட்டம் இருப்பது போன்ற உணர்வு. அழுத்தினாலோ, அழுத்தி கீழே படுத்தாலோ வலி அதிகமாகி விடும்.

காலை நேரங்களில் பேதி ஆகுதல், மலம் லேசாகவும், மஞ்சள் நிறமாகவும், அழுக்காகவும் வெளியேறும்.

லேசான சுவாசம், நாம் பார்த்தாலே தெரியும், சோர்ந்து போய் காணப்படுவார்கள். ஆனால் ஆழ்ந்து சுவாசிக்க விரும்புவார்கள். மலேரியா, காச நோய் ஏற்பட காரணமாக இருக்கும், இடங்களில் இவர்கள் இருப்பார்கள்;. அதனால் தான் இந்தத் தொல்லைகள் ஏற்படுது. மலேரியா நோய் விரைவில் ஒட்டிக் கொள்ளக்கூடிய தேகவாகு உள்ளவர்களாக இருப்பார்கள். மார்பு, அடிவயிறு களைப்பாக இருப்பது போன்ற உணர்வு. அரை நிமிடத்திற்கு ஒரு முறை இரும்பல் ஏற்படும். படுக்கையில் உட்கார்ந்துக் கொண்டு பேசும் போதும், திரும்பினாலும், இரும்பல் மேலும் அதிகமாகும். வெடி, வெடிப்பது போன்ற இரும்பல் சப்தம் பேசும் போது ஆழ்ந்த சுவாசம் வரும். நரம்பு துடிப்பும் தெரியும்.

கழுத்து பலஹீனம் ஆனது போன்ற உணர்வு. அசைவு ஏற்பட்டால் தலையின் மேற்பகுதியில் தொடர்ச்சியான வலி ஏற்படும். (LUMBAR). கீழ் முதுகுப் பகுதியில் பலஹீனமும் தெரிக்கும் படியான வலியும் இருக்கும். (கை, கால் மூட்டுகளில் வாத வலியாட்டம் வலி, நொண்டியான மாதிரி இருக்குதுனும் சொல்வார்கள்.) கை, கால், தோள்பட்டை வலி, கழுத்து இழுத்துப் பிடித்துக்கும். உறுப்புகள் எல்லாம் எனக்கு உதவ மாட்டிங்குதுனு சொல்வார்கள். வலது தோள்பட்டையில் தொடர்ச்சியான வலி.

கல்லீரல் இழுத்துப் பிடித்துக்கும். அடிக்கடி ஈரல் தொல்லைகளே ஏற்படும். முதுகு, கீழ் முதுகு பகுதியில் சுடுவது போல வலி. தூங்கி எழுந்ததும் படுக்க தோன்றும். இடுப்பு பகுதியை அழுத்தி படுத்துக் கொள்வார்கள். அப்போது சுகம் என்பார்கள். நடந்த பிறகு தொல்லைகள் அதிகம்.

கைகளில் குளிர்ச்சி ஏற்பட்டு அது உடல் முழுவதும், கால் வரை பரவும், கீழ் வாதம் ஏற்படும். கை மூட்டுகளில் மறுத்தும், குளிர்ந்தும் காணப்படும். இரண்டு முழங்கைகளிலும் தொடர்ச்சியான வலி. மணிக்கட்டில், கைகளில் அசதியும், தெரிக்கும் படியான வலி இருப்பது போன்ற உணர்வும், புஜம் அசதியாகி விடுதல், கைகளில் அரை பக்க வாதம் வந்திடும், ஆனால் இந்த கைகளை வைத்து வேலை செய்ய முடியும் என்னால் என்றுக் கூறுவார்கள். கைகளில் அரைபக்க வாதம் வந்ததால் சரியாக உபயோக படுத்த முடியாது என்றுக் கூறுவார்கள். காலை நேரம் ஆரம்பிக்கும் போதே கை ரொம்ப ஜில்லிப்பு, இரவில் கையும், காலும் ரொம்ப ஜில்லித்து விடும்.

கால்கள்:- கால்கள் மேல் இடுப்பு எலும்புகளில் வலி, கால் மூட்டுப் பகுதியில் தெரிக்கும் படியான வலி. அசதி ஏற்பட்டு அது கீழ்க்கால் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு செல்லும். வயதானவர்களுக்கு இது போல் ஏற்படும். இடது பாதத்தில் தெரிக்கும் படியான வலியிருக்கும். ஒய்வின்றி நடந்துக் கொண்டேயிருப்பார்கள். ஏதோ சொறிந்து விடுவது போல உணர்விருக்கும். பாத மூட்டுகள் குளிர்ந்தது போல உணர்விருக்கும் மேலும் மருத்து விடும். வலது மூட்டில் அதிகமா வலியும், பலஹுனமும் ஏற்படும். முட்டியை வளைத்தாலும், எழுந்து நடக்கும் போது வலி ரொம்ப அதிகமாகும். பொதுவானக் குறி ரொம்ப அசதிதான். கொஞ்சம் தூரம் தான் நடக்க முடியும், முக்கியமாக பெல்விஸ், சேக்ரல் பகுதியில், மேல் தொடையில் நடக்கும் போது வலி ஏற்படும். உட்கார்ந்து, படுத்துக் கொண்டால் வலி சுகம். உடம்பை கட்டிப் போட்ட மாதிரி இருக்குதுங்கனு சொல்வார்கள். டைபாய்டு காய்ச்சல் போலவும் பாதி பக்கவாதம் வந்த மாதிரியும் இருப்பார்கள். வாத நோயும் இருக்கும். வாத பக்கவாதமும் உடன் இளைத்தலும் காணப்படும். ரொம்ப சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஒய்;;;;வின்மை கொஞ்சம் கூட நகர முடியாது. இந்த பலஹுனம் ரொம்ப நாளாகவே இருந்ததாக இருக்கும். உடன் பசியே இருக்காது. ரொம்ப மிக மிக அதிகமான அசதி. கண்டிப்பாக இவர்கள் வெளிக்காற்றுக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து விடுவார்கள். இவைகளை மூடிவிட்டால் தொல்லை அதிகமாகிவிடும். தலை மற்றும் வயிறு ரொம்ப குளிர்;ச்சியாக இருக்கும். அப்போதும் பெண்கள் குளிர்காற்றை விரும்புவார்கள். (தோல்) சருமம், கண்கள் மற்றும் முகம் ரொம்ப மஞ்சளாகி விடுதல். எல்லா சருமமும் வறண்டு விடுதல், உடல் முழுவதும் வியர்வை ஏற்படுதல்.

தூக்கம் இல்லாமல் படுத்துக் கிடப்பார்கள். மந்தமாக சோம்பலாகவே இருப்பார்கள். நேரமாகவே படுப்பார்கள். ஆனால் தூக்கம் வராது. கோட்டுவாய் வந்து கொண்டே இருக்கும். ஊஞ்சலில் படுத்துக்கொண்டு ஆடிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் தூங்க விரும்புவார்கள். ஆனால் தூக்கமே வராது இதனால் சோம்பலாகவே இருப்பார்கள். அதனால் தெளிவு இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.

காய்ச்சலின் போது காலிலிருந்து உடம்பு முழுவதும் காய்ச்சல் பரவும். குளிர்ச்சியும் காலிலிருந்தே மேலே ஏறும். எப்பவும் காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு திட்டு, திட்டாக காய்ச்சலும், குளிரும் மலேரியா காய்ச்சலில் இருக்கக் கூடிய பல குறிகளைக் கூறுவார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல், மந்தம் பலஹுனம், சோம்பல் இருக்கும். ஈர பருவக்காலங்களில் உடம்பு ஜில்லுணு இருக்கும். துப்பாக்கியில் சுடுவது போல வலியும், இது எல்லா தசைகளிலும் வலிக்கும். எலும்பில் தொடர்ச்சியான வலி, இரவு நேரத்தில் அதிகமான காய்ச்சல், காலையில் மேலும் காய்ச்சல் அதிகமாகி விடும். தினமும் மதியத்தில் உடம்பு ஜில்லிப்பு. இடுப்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் அதிகமாகிவிடும். தினமும் மத்தியானத்தில் உடம்பு ஜில்லிப்பு, இடும்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் ரொம்ப அதிகமாகிவிடும். உடல் முழுவதும் தொடர்ச்சியான வலி. புஜத்திலும், கால்களிலும் முக்கியமாக இது போன்ற வலி. சிறிது அசைவு ஏற்பட்டாலும் அதிகமான வியர்வை இது திடீர், திடீரென ஏற்படும். உடல் ஜில்லிப்பு பின்பு இரண்டு நாட்கள் சூடு என மாறி மாறி வரும். இரவில் அளவுக்கு அதிகமான வியர்வை. வியர்வை அதிகமாக வருவதால் உடல் ஜில்லிப்பு ஏற்படும்.

பல நாட்களாக இருக்கும் மூல வியாதி அதன் மேல் பகுதியில் இரத்தமும் வரும். வலி இருக்காது. ஆனால் ரொம்ப வெறுப்பாக இருப்பார்கள்;. பேதி தினமும் நான்கு, ஐந்து முறை போகும். லேசாகவும், இரத்தத்துடனும், சளியுடனும், சீதமும் கலந்து போகும். மலம் வருவது போன்ற உணர்விருக்காது. கைகளில் அசதி ஏற்படும். பின்பு சிறிது சிறிதாக இந்த களைப்பு கால்களுக்கு பரவும். முதுகு பகுதியில் உள்ள தசைகளில் மந்தமான வலி, இதே வலி இடுப்பெலும்பு சதைகளிலும் காணப்படும். ஆனால் வலி விரைவில் குறையவே குறையாது, அசதியும் இருக்கும். இடது தொடை நரம்பில் வாதம் மந்தமான தொடர்ச்சியான வலி இது தொடை வரை பரவும். கால் மூட்டுகளில், தொண்டையில் நெருப்பு எரிவது போன்ற உணர்வு. ஆனால் வெளிப்புறம் வியர்வையிருக்கும், படுத்துக் கொண்டால் குறைந்து விடும். வலது இடுப்பில் மந்தமான வலி உடன் இரணமாட்டமும் வலி. அழுத்தினால் தசைகளில் தளர்ச்சி (அசதி) மற்றும் தொடை நரம்புகளிலும், இடுப்பிலும் வலி ஏற்படும். விலா எலும்புகளுக்கு கீழ் உள்ள பகுதியில் சுடுவது போல வலி. இந்த வலி அதிகரித்து கீழ்ப்புறமாக இடது கால் வரை பரவும். தோள்பட்டை எல்லாம் கனமாக இருப்பது போன்ற உணர்வு. கைகள் மற்றும் பாதத்தில் எரிச்சல், கைகள் மற்றும் புஜங்களில் தொடர்ச்சியான வலி. இரவில் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் ஒய்வின்றி நடுங்குதல். காலையில் அதிகமாகி விடுதல். ஒய்வில்;; திரும்பி, திரும்பி படுப்பது போல கற்பனையான எண்ணமிருக்கும். விலா எலும்புக்கு கீழே உள்ள பகுதியில் மந்தமாக இருத்தல், அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு பட, படவென அடித்துக்கொள்ளும். வலி உள்ள பகுதியை அழுத்திப் படுத்தால் சிறிது சுகம் கிடைக்கும்.