MALANDRINUM மாலான்டியம்

மூலம்: கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

மனநிலை குழப்பமாகவும், களைப்பாக இருக்கும். மூளை பலஹீனம் என்பார். மனசுக்கு வேலை அதிகமாக இருந்தால், படபடப்பு, மனதை ஒரு நிலை படுத்த முடியலை என்பார்கள். புதிய வேலையை செய்ய முடியாது. எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார்கள். தினமும் செய்ய முடியாது, எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார்கள். தினமும் செய்யக்கூடிய சாதாரண வேலையை கூட செய்ய முடியலை என்பார்கள். பல விதமான பலஹுனம் இருக்குதுனு சொல்வார்கள். ஞாபகமே வைத்துக் கொள்ள முடியாது, மூளை ரொம்ப பலஹுனமுடையவர்கள். இதனால் எதைப் படித்தாலும் வேற மாதிரியாக தெரியும். இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு சுளிர், சுளிர் என வலி பரவும், இதனால் குழப்பமாயிடுது ஒண்ணுமே முடியலை, மனக் கஷ்டம் ஏற்படுது, களைப்புத் தட்டிப் போயிடுது. யோசனை செய்ய முடியலை எண்ணம் அலைபாயுது, மூளை செத்த மாதிரி இருக்குது அதனால் யோசிக்க முடியலை என்று இவ்வளவு கஷ்டத்தையும் கூறுவார்கள். பித்துப் பிடித்த மாதிரி களப்பை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

தலை் தலையில் கொப்பளங்கள் தொப்பி போட்டது போல ஏற்பட்டு வெடித்து, வெடித்து வரும். இந்த தொல்லையின் போது காலையில் எழும் போது தலை உருண்டையாட்டமும், அரிசி போல ஆவது போல் உணர்விருக்கும். தலையில் நிறைய பொடுகு வரும். நான்கு வாரத்துக்கு ஒரு முறை தலையில் சீழ் கொப்பளம் வரும். கழுத்தைச் சுற்றியிலும் குருணை, குருணையாக இருக்கும் அது கழுத்தைச் சுற்றியிலும் பரவி காது வரை வரும். புண்ணில் ஏற்படும் பொருக்கல் (பொக்கு) கெட்டியாக நீல நிறமாகவும், வெள்ளையாகவும், சிவப்பாகவும், செதில், செதிலாகவும்;, உரியும், உடன் பிப்பும் இருக்கும். இது மாலை நேரங்களில் காணப்படும். பொருக்கல் காதைச் சுற்றிலும் வெள்ளை, சிவப்பு நிறங்களில் உறியும். முதுகு யோனிப் பகுதியிலும் பொருக்கல் வரும். முன், பின் தலைகளில் வலி ஏற்படும். பலவகையான வலிகளும், ஜில்லிப்பும் இருக்கும். சாப்பிடும் போது பித்த வாந்தி உடன் முன் தலை வலி, களைப்பும் இருக்கும். நடு மண்டையில் புரு, புருனு ஊருவது போல இருக்கும், இது முதுகு வரை பரவும். எலும்பில் பயங்கரமான வலி இருக்கும். உடன் ஜில்லிப்பு, பித்த வாந்தி இருக்கும். பேதியின் நிறையத் தொல்லைகள் ஏற்படும். தலை ரொம்ப பாரமாக இருக்கும். தலைவலியும், முதுகு வலியும், கழுத்து நரம்பு பிடிப்பு, பசியே இருக்காது. மலச்சிக்கல், ரொம்ப அசதியும் இருக்கும். இந்த தொல்லை எல்லாம் அம்மை தடுப்பூசி போட்ட பிறகு தான் என்பார்கள். நெற்றியில் புறப்பாடுகள் தோன்றும். உடன் அரிப்பிருக்கும். முகத்தில் நிறைய படைகள் தோன்றும். அதிக கொப்பளம் ஏற்பட்டு அதனின் உள் பகுதியில் அரிப்பு ஏற்படும். அதிலிருந்து பிசின் மாதிரி, தேன் மாதிரி மஞ்சள் நிறமாக வரும். மேல் உதட்டிலும் மஞ்சள் நிறத்தில் தேன் மாதிரி வரும்.

காதில் பச்சையில் கலந்த மஞ்சள் நிறத்தில் சீழ் வெளியேறும். மேலும் இரத்தமும் கலந்து வரும். நாக்கின் மேல் மஞ்சள் நிற படிவு காணப்படும். ஆதலால் நடுவில் சிவப்பு நிறத்தில் கோடு கிழித்தது போல இருக்கும். மேலும் நடு நாக்கில் பெரிய பிளவை இருக்கும். வீங்கியும் இருக்கும். மூச்சுக் காற்றில் வாடை அடிக்கும். இடது புற நாக்கின் ஓரத்தில் அழுகியப் புண் போல் இருக்கும். (CANKER எனப்படும் சிபிலிஸ் நோயினால்) இதனால் நாக்கு முழுவதும் புண்ணாகி இரணமாட்டமும் இருக்கும் பேச முடியாது. இதனால் முட்டாள் ஆகிவிடுவார்கள். இந்த குறிகளுக்கு MALANDRINUM 30 1 வேளை கொடுத்தால் புண்ணு குணமாகி, முட்டாள் தனமும் குணமாகி விடும் என்று H.S. TAYLOR கூறுகிறார். தொண்டையின் இடது புறம் இரணமாகவும் வீங்கியும் காணப்படும். இடது டான்சில் வீங்கி இருக்கும். மஞ்சள் நிறமான குழிப்புண் உடன் வெட்டி விட்டது நன்றாக தெரியும். பல நாட்கள் ஆனாலும், இந்த புண்கள் இருக்கும். இருக்கிப் பிடிப்பது போல, தானியம் உறுத்துவது போல், வறட்சியாக இருப்பது போல் பல உணர்வுகளிலிருக்கும். எச்சிலைத் துப்பிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் பைத்தியம் மாதிரி ஆகிவிடுவார்கள். தொண்டை வீங்கியிருக்கும். ஆனால் வலியிருக்காது. இடதுபுற டான்சில் பெருத்து வேக்காடு அடைந்திருக்கும். தொண்டையில் எந்த நோய்குறிகளோ, வலியோ ஏற்பட்டால் அது இடது புறம் ஆரம்பித்து, கடைசியில் வலது புறத்தில் முடியும். தொண்டை அல்சர் புண் மாதிரியும், இரணமாட்டமும் இருக்கும். இது மேலும் பரவி குரல் வளை வரை செல்லும். தாகமே இருக்காது. தண்ணிக் குடித்தால் குமட்டல் ஏற்படும்.

எவுறு வீங்கி அதில் அல்சர் புண் காணப்படும். பற்களின் பதிவுகள் காணப்படும். தொட்டாலோ, பிரஸ்பட்டாலோ உடனே இரத்தம் வெளியேறும். ரொம்ப திக்காக மரக்கலரில் தசைகளுடன் இரத்தமும், சீழும் வெளியேறும். இது அல்சர் எற்பட்ட எவுரில் இருந்து வரும். பற்களில் ஊத்தையிருக்கும்.

சாப்பிட்டப் பிறகு குமட்டல், பித்த வாந்தி வரும். வெறும் வயிற்றில் மயக்கம் எற்படும். வயிற்றில் இருக்கக்கூடிய எல்லா உறுப்பும் எங்கியோ போனது போன்ற உணர்வு. நடுக்கல் இருக்கும். சாப்பிட்டால் குறைவு. சாப்பிட்டுக் கொண்டே இருக்கவும் விரும்புவார்கள். தொப்புளைச் சுற்றிலும் வலி ஏற்படும். பேதி இரத்தமாக, மஞ்சள் நிறமாக, சளியாட்டம், லேசாக சீதம் கலந்த மாதிரியும் பேதி ஏற்படும். ரொம்ப மாறி, மாறி வரும். அதுவும் காலை நேரங்களில் ரொம்ப அதிகமான தொல்லைக் காணப்படும். பேதி காரமாகவும் வரும். குழந்தைகளாக இருந்தால் கத்தும், தூங்காமல் இருபத்து நான்கு மணி நேரமும் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்லும் குழந்தைகள், மலம் கருப்பாகவும், லேசாகவும், செத்துப் போன பொணம் மாதிரி பொண நாற்றம் அடிக்கும். காரமாக, மஞ்சள் நிறமாகவும், மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடிய அளவுக்கு பேதி வரும், அப்போது ஆஸன வாயும், மலக்குடலும் நெருப்பாட்டம் எரியும். கருப்பான மரக்கலரிலும், அழுக்கான, நாற்றத்துடன் அடிக்கடி ஏற்படும் பேதி, அப்போது அடிவயிற்றில் வலி வரும். பேதி மரக் கலரில் வந்தால் வயிறு வலி இருக்காது. கருப்பு நிறமாக, அழுக்கு பிடித்த, வாடையில் ஏற்படும் பேதி. உடன் குமட்டல், சோம்பேறித்தனமும் ஏற்படும். கருப்பான அழுக்கு நாற்றமுடைய பேதி உடன் உடலில் ஏற்படும். அழுகைக்கும், அதிகமான களைப்பும் இருக்கும். குடல்களின் இயலாமையால் மலம் கழிய விருப்பம் இருக்காது. எனிமா கொடுத்தப் பிறகு மலம் வெளியேறும். அப்போது மலக்குடலில் இரணமாட்டமும், நைவுக் காயம் மாதிரியும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மலக்குடலில் இந்த உணர்வு ஏற்படும். இதனால் மலம் கழிய பயம் ஏற்படும்.

நடக்கும் போது சிறுநீர்ப் பையில் அளவுக்கு அதிகமான உணர்ச்சி ஏற்படும். பித்தப் பையில் உறுத்தல் ஏற்பட்டவுடன் சிறுநீர் கழிய ஓடுவார்கள். எப்போதும் மானியை கையில் பிடித்திருக்கும் குழந்தைகள்.

பெண்களின் பிறப்புறுப்பின் உதடுகளில் முரடு தட்டி வீங்கி யோனியையே மூடிக் கொள்ளும். பொருக்கல், மஞ்சள், இளஞ்சிவப்பு, கருப்பு, மரக்கலரில் பல நிறமாக உதிறும்.

முதுகு :- முதுகின் உட்புறங்களில் வலி ஏற்படும். வலியானது அடிப்பது போல இருக்கும். சேக்ரலின் உட்புறப் பகுதியில் வலி ஏற்படும். இடுப்பு பட்டை எலும்பு, தோள்பட்டை எலும்பின் கீழ் பகுதியில் வலி இருக்கும். அதுவும் இடது புறத்தில் தான் அதிக வலி வரும். (இந்த தொல்லைக்கு Dr. B. அவர்கள் 200 1 வேளை கொடுத்தால் போதும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.)

கைகளில்:- உள்ளங்கை மற்றும் விரல்களில் அழுத்தம் ஏற்படும். புஜங்களின் முன் பகுதிகளில் உள்ள கெட்டிப் பகுதியில் கொப்பளங்கள் ஏற்படும்.

கால்கள் :- இரண்டுத் தொடைகளும் பூ இதழ்கள் உறையர மாதிரி இருக்குது. கால் மூட்டுள் பெருத்து விடுதல், கணுக்காலில் அசதி, ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாரமாகி விடுதல். பாதத்தில் அதிகமான வியர்வை வரும். அழுகிற பொணம் மாதிரி நாற்றம் வரும். நடக்கும் போது பாதத்தின் மேல் பகுதி எலும்புகளில் இரணமாட்டம் வலி. உள்ளங்காலில் நிறைய வியர்வை வரும். தோலும், உரியும், நெருப்பாட்டமிருக்கும். பாதத்தில் ஏற்படும் காக்கா கொப்பளங்களுக்கு இது நல்ல மருந்து. செருப்புக் கூட போட முடியாது. கொஞ்ச தூரம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. பாதத்தில் ஆழமான புண் எற்பட்டு நெருப்பாட்டம், இரணமாட்டம் வலி அதன் மீது பச்சத்தண்ணீர் ஊற்றினால் சுகம். எல்லா மூட்டுகளும், இரணமாகி விடும். எல்லா விரல்களிலும், கைகளிலும், கால் பாதங்களிலும் இரணமாட்டம் வலி ஏற்பட்டு அந்த உறுப்புகளைச் சுற்றி பரவும்.

தோல்:- முகம், மண்டைத் தோல்களில் கரப்பான் படை ஏற்படும். அதில் எரிச்சல், கொட்டுவது போன்ற வலி, அரிப்பு எற்படும். புஜப்பகுதிகளில் புறப்பாடுகள் தோன்றும். அம்மைத் தடுப்பு மருந்து கொடுத்தப் பின்பு சருமத்தில் வறட்சி, சொர, சொரப்பு மற்றும் அழகற்ற (தோல்கள்) சருமம் வருடக் கணக்கில் இருக்கும். இந்த குறிக்கு இது நல்ல மருந்து. வறட்சியான, சொர, சொரப்பான உள்ளங்காலில் கெட்டித் தன்மையும், குளிர்ச்சியில் தொல்லை அதிகமாகும். ஏதாவது சோப்பு போட்டு (கை, கால்களை ) கழுவினாலும், தொல்லை ஏற்படும். எண்ணெய் வடியும் சருமம், சருமத்தில் தோன்றும் புறப்பாடுகள் மற்றும் தலைமுடி எண்ணெய் பசையுடன் காணப்படும். கொப்பளங்கள் கொஞ்சம், கொஞ்சமாக வரும். ஆனால் விரைவில் (ஆறவே ஆறாது.) குணமாகாது. அப்படி குணமானாலும், வேறு புண்கள் ஏற்பட்டு விடும். கை, புஜம் மற்றும் கால் மூட்டில் புறப்பாடுகள் தோன்றும். சொறிந்தால் அதிலிருந்து சிவப்பு நிறங்களில் பொருக்கல் வரும். வெது, வெதுப்பு பட்டால் பிப்பு அதிகமாகும்.

தூக்கத்தில் ஓய்வற்று அப்படி இப்படி என பெரண்டு, பெரண்டு படுப்பார்கள். சண்டைப் போடுவது போல் கனவுகள் வருவதால் தொல்லையாக இருக்கும். அம்மைத் தடுப்பூசி போட்டப் பிறகு தான் அதிக கெடுதியான தொல்லைகள் ஏற்படும். ஆனால் அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டேயிருந்தால் நல்லாயிருக்கும். பல வகையான சரும நோயாளிகளுக்கு இது பயன்படும். அம்மைத் தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து. உடம்பின் கீழ் பகுதியில் பாதி பகுதி கெட்டுவிடும். அதில் சீழ் கொப்பளங்கள் வந்து வெடித்து பரவி அதிலிருந்து மீண்டும் கொப்புளம் வரும். குறைந்த அளவு நாடித்துடிப்பு. ஏதாவது சரும நோய் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்று பர்னட் அவர்கள் கூறுகிறார். பெரியம்மை, சின்னம்மை என அம்மைகள் அடிக்கடி தோன்றினால் கூட இது மாதிரி சருமத் தொல்லைகள் ஏற்படும். அப்போது கூட இது மாதிரி சருமத்த தொல்லைகள் ஏற்படும். அப்போது உடம்பு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் என (கிளர்க்) CLARK கூறுகிறார். கரப்பான் படையில் இருந்து சீழ் வடியுது, அதில் எரிச்சல் உட்புறமாக ஏற்படுவதும், அதிகமான வாடையும் அடிக்கும். இரவில் குளிக்கும் போது பொருக்கல் அதிகமாக வரும். குளிர்காற்றுப் பட்டால் சுகமாக இருக்கும் என்று THOMPSON கூறுகிறார். மற்றும் தலை, முதுகுப் பகுதியில் புறப்பாடுகள் தோன்றி அது பெட்டெக்ஸ் வரைப் பரவும். மேலும் யோனி வரை கூட பரவும். பரவி யோனி உதடுகளில் புறப்பாடு ஏற்பட்டு அதிக தொல்லைகளை ஏற்படுத்தும். புறப்பாடு கை வரை கூட பரவும். கம்பு அளவு சிறு, சிறு (அக்கி) கொப்பளங்கள் வரும். இதை குணப்படுத்த முடியலைங்க ரொம்ப நாளாக அப்படியே இருக்குது என்பார்கள். அம்மையின் அழுக்குதான் இதற்கு காரணம். அது சிறிய அளவு இருந்தால் கூட தொல்லைகளைத் தரும். கால் பகுதியில் சிவப்பு நிறமாக காட்டும். காட்டாமல் உட்புறத்தில் இருந்துக் கொண்டுக் கூட தீங்கு செய்யலாம். எனவே பெரியம்மை ஏற்பட்டிருந்தாலோ, அதுக்கு ஊசி போட்டு அமுக்கியிருந்தால் அதன் பிறகு ஏற்படும் அனைத்து தொல்லைகளுக்கும் இதுவே மருந்து.

MALARIA – OFFICINALIS - மலேரியா ஆப்சினல்

ரொம்ப முட்டாள் தனமானவர்கள். தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மனநிலைமையும் உற்சாகமில்லாமல் மந்தமாகவே இருக்கும். தலையின் மீது ஏதோ மோதுவது போலவும், மோதியவுடன் தலை வெடிப்பது போலவும், இருக்கும். தன்னை சுற்றியுள்ள பொருள்கள், சுத்துவது போன்ற உணர்வும் இருக்கும், (தலை சுற்றல் (அ) மயக்கம்) தூங்கும் போது கிரு, கிருப்பு ஏற்படும். படுக்கையிலிருந்து எழுந்து நடக்கும் போது தலைச் சுற்றல் ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்து விடுவார்கள். முன் தலை நெற்றில் பொட்டுப் பகுதியில் மந்தமான, தொடர்ச்சியான வலி இருக்கும். திடீர், திடீரென, அடிக்கடி தலைவலி வரும். முக்கியமாக நெற்றியில் இப்படி ஏற்படும். தலை முழுவதும் பட, படவென அடித்துக் கொண்டு வலி ஏற்படும். மயக்கமும் அப்போது குழப்பம் ஏற்படுவது போல் உணர்விருக்கும். நெற்றியில் தலை வலி ஆரம்பித்து தலை முழுவதும் பரவி வலிக்கும்.

கண்:- கண்களில் தெரிக்கும் படியான (தொடர்ச்சியான) வலி ஏற்பட்டு அது வலது கண்ணுக்குள் சென்று வலிக்கும். கண் பாரமாகவும், தூக்கமான நிலையில் இருப்பது போல உணர்விருக்கும். கண் பலஹீனமாவும், பார்வை மங்கலாகவும், இருக்கும். படிப்பதை எல்லாம் வித்தியாசமாகத் தெரியும். கண்ணில் நெருப்பாட்டமும், நிலக்கரி எரிவது போல் எரியும். வலது புற காதின் வெளிப்புறத்தில் இழுத்துப் பிடிப்பது போல் வலி.

மூக்கின் வேர்ப்பகுதியில் அதிக மனத்தாக்கல் ஏற்படும். வலியினால், அதிகமான காய்ச்சலின் போது குளிரை விரும்புவார். மூக்கு மற்றும் அதன் மேல் பகுதியில் அளவுக்கு அதிகமான வலி இருப்பது போன்ற உணர்வு.

வலது கன்னம், கன்ன எலும்புகளில் அரிப்பு. மற்றும் முகம் கை, கால் எலும்புகளிலும் அரிப்பு ஏற்படுதல்) அப்போது அந்தப் பகுதியை லேசாக பட்டு, பட்டென, அடித்தாலும், சொறிந்துக்கொண்டாலும், சுகமாக இருக்கும். முகம் முழுவதும் லேசான சூடு பீரிட்டு பாயும். மேலும் அது உடல் முழுவதும் பரவும்.

பற்கள்:- இடது மேல் பற்களில் வலி. நாக்கின் மேல் புறத்தில் அங்கங்க என புள்ளியாட்டமும் இருக்கும். அதில் மிளகு சுவைத் தெரியும். அளவுக்கு அதிகமான எச்சில் வரும். நாக்கு வீங்கியிருக்கும். நாக்கின் மேலே, லேசாக மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் ஏதோ தடவியது போல இருக்கும். (கசப்பு சுவை, வாய் வறட்சி மற்றும் நாக்கு வெள்ளை நிறமாக இருக்கும்.) நாக்கு வெள்ளையாகவும் அதன் நடுவில் மரக்கலரில் வெட்டும் காணப்படும். நாக்கு வெள்ளை நிறமாகவும், தடிப்பாகவும் இருக்கும். வாய் ரொம்ப வறட்சியாக இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். ஆனால் உண்மையில் வாயில் ஈரம் இருக்கும். குளிர்ச்சியான பானம் சாப்பிட விருப்பம். வேறு எதையும் சாப்பிட முடியாது. மீறி சாப்பிட்டால் வாந்தி வரும். புளிப்பான வாந்தியும், ஏற்படும். தாகம் அப்பொழுது குளிர்ச்சியான நீரை சாப்பிட பேராவல். பசியே எடுக்காது. சாப்பாட்டின் மீது வெறுப்பு, உடல் நலம் குன்றி காணப்படுவார்கள். அதிகமான தண்ணீர் சாப்பிட விரும்புவார்கள். பிறகு மனநிலை மாறி உருளைக் கிழங்கு, ஆப்பிள், மாட்டு இறைச்சியை விரும்பி, சாப்பிடுவார்கள். கசப்பான கெட்ட சுவை வாயில் தெரியும். உடன் குமட்டலும் இருக்கும். நாக்கின் வேர்களில் வறட்சி, அழுக்கு பிடித்தது போல இருக்கும். நாக்கின் உள் வளைவுகளில் இருக்கி பிடித்தது போல இருக்கும்.

பெரும்பாலும் இரவில் பசி எடுக்காது. சாப்பாடு வேகும் நாற்றம் பிடிக்காது. ஆனால் விழாக்களில் சாப்பிட விருப்பமிருக்கும். விழாக்களில் (DINNER) ரில் சாப்பிட்டால் உடல் நிலை சுகமாக இருக்கும். அடிக்கடி எதுக்களித்தல், ஏற்படும். இதனால் அதிக தொல்லையாக இருக்கும். ஆனால் சுவை எதுவும் தெரியாது. குமட்டல், சளி போன்ற பொருள்கள் வாய்க்கு வந்து, வந்து போகும்.

அடி வயிறு சூடாக இருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்று வலியிலிருந்து மீளவே முடியாத அளவுக்கு வலி இருந்துகிட்டே இருக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களில் தொல்லைகள் ஏற்படும். (மூச்சு விடும் போது கல்லீரல் வலி ஏற்படாது. படுத்தால் வலி அதிகமாகும். அதிக அழுத்தம் கொடுத்தால் நல்லாயிருக்கும்.) (கல்லீரலில் கிச்சு, கிச்சு செய்வதுப் போல் இழுத்து பிடிப்பது போல வலி இருக்கும்.) (கல்லீரல், தோள்பட்டையில் அடிப்பகுதியில் இழுத்துப்பிடிப்பது போல் வலி.) (அடிவயிற்றில் மீள முடியாத அளவு வலியும், பாரமும், மலச்சிக்கலும் இருக்கும்.) வலியுடன் பேதி கழிவார்கள். குடல்கள் பலஹீனமாகிவிடும். கல்லீரல் பகுதியில் இருந்துக் கொண்டே இருக்கும். சிறுநீர், கழிந்தப் பிறகு வலி நின்று விடும். வலது தோள்பட்டையின் கீழ்ப் பகுதியில் தொடர்ச்சியான, தெறிப்பது போன்ற வலி. கல்லீரலில் பகுதியில் இழுத்து பிடிப்பதுடன் இரணமாட்டம் இருப்பது போன்ற உணர்வு. அழுத்தினாலோ, அழுத்தி கீழே படுத்தாலோ வலி அதிகமாகி விடும்.

காலை நேரங்களில் பேதி ஆகுதல், மலம் லேசாகவும், மஞ்சள் நிறமாகவும், அழுக்காகவும் வெளியேறும்.

லேசான சுவாசம், நாம் பார்த்தாலே தெரியும், சோர்ந்து போய் காணப்படுவார்கள். ஆனால் ஆழ்ந்து சுவாசிக்க விரும்புவார்கள். மலேரியா, காச நோய் ஏற்பட காரணமாக இருக்கும், இடங்களில் இவர்கள் இருப்பார்கள்;. அதனால் தான் இந்தத் தொல்லைகள் ஏற்படுது. மலேரியா நோய் விரைவில் ஒட்டிக் கொள்ளக்கூடிய தேகவாகு உள்ளவர்களாக இருப்பார்கள். மார்பு, அடிவயிறு களைப்பாக இருப்பது போன்ற உணர்வு. அரை நிமிடத்திற்கு ஒரு முறை இரும்பல் ஏற்படும். படுக்கையில் உட்கார்ந்துக் கொண்டு பேசும் போதும், திரும்பினாலும், இரும்பல் மேலும் அதிகமாகும். வெடி, வெடிப்பது போன்ற இரும்பல் சப்தம் பேசும் போது ஆழ்ந்த சுவாசம் வரும். நரம்பு துடிப்பும் தெரியும்.

கழுத்து பலஹீனம் ஆனது போன்ற உணர்வு. அசைவு ஏற்பட்டால் தலையின் மேற்பகுதியில் தொடர்ச்சியான வலி ஏற்படும். (LUMBAR). கீழ் முதுகுப் பகுதியில் பலஹீனமும் தெரிக்கும் படியான வலியும் இருக்கும். (கை, கால் மூட்டுகளில் வாத வலியாட்டம் வலி, நொண்டியான மாதிரி இருக்குதுனும் சொல்வார்கள்.) கை, கால், தோள்பட்டை வலி, கழுத்து இழுத்துப் பிடித்துக்கும். உறுப்புகள் எல்லாம் எனக்கு உதவ மாட்டிங்குதுனு சொல்வார்கள். வலது தோள்பட்டையில் தொடர்ச்சியான வலி.

கல்லீரல் இழுத்துப் பிடித்துக்கும். அடிக்கடி ஈரல் தொல்லைகளே ஏற்படும். முதுகு, கீழ் முதுகு பகுதியில் சுடுவது போல வலி. தூங்கி எழுந்ததும் படுக்க தோன்றும். இடுப்பு பகுதியை அழுத்தி படுத்துக் கொள்வார்கள். அப்போது சுகம் என்பார்கள். நடந்த பிறகு தொல்லைகள் அதிகம்.

கைகளில் குளிர்ச்சி ஏற்பட்டு அது உடல் முழுவதும், கால் வரை பரவும், கீழ் வாதம் ஏற்படும். கை மூட்டுகளில் மறுத்தும், குளிர்ந்தும் காணப்படும். இரண்டு முழங்கைகளிலும் தொடர்ச்சியான வலி. மணிக்கட்டில், கைகளில் அசதியும், தெரிக்கும் படியான வலி இருப்பது போன்ற உணர்வும், புஜம் அசதியாகி விடுதல், கைகளில் அரை பக்க வாதம் வந்திடும், ஆனால் இந்த கைகளை வைத்து வேலை செய்ய முடியும் என்னால் என்றுக் கூறுவார்கள். கைகளில் அரைபக்க வாதம் வந்ததால் சரியாக உபயோக படுத்த முடியாது என்றுக் கூறுவார்கள். காலை நேரம் ஆரம்பிக்கும் போதே கை ரொம்ப ஜில்லிப்பு, இரவில் கையும், காலும் ரொம்ப ஜில்லித்து விடும்.

கால்கள்:- கால்கள் மேல் இடுப்பு எலும்புகளில் வலி, கால் மூட்டுப் பகுதியில் தெரிக்கும் படியான வலி. அசதி ஏற்பட்டு அது கீழ்க்கால் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு செல்லும். வயதானவர்களுக்கு இது போல் ஏற்படும். இடது பாதத்தில் தெரிக்கும் படியான வலியிருக்கும். ஒய்வின்றி நடந்துக் கொண்டேயிருப்பார்கள். ஏதோ சொறிந்து விடுவது போல உணர்விருக்கும். பாத மூட்டுகள் குளிர்ந்தது போல உணர்விருக்கும் மேலும் மருத்து விடும். வலது மூட்டில் அதிகமா வலியும், பலஹுனமும் ஏற்படும். முட்டியை வளைத்தாலும், எழுந்து நடக்கும் போது வலி ரொம்ப அதிகமாகும். பொதுவானக் குறி ரொம்ப அசதிதான். கொஞ்சம் தூரம் தான் நடக்க முடியும், முக்கியமாக பெல்விஸ், சேக்ரல் பகுதியில், மேல் தொடையில் நடக்கும் போது வலி ஏற்படும். உட்கார்ந்து, படுத்துக் கொண்டால் வலி சுகம். உடம்பை கட்டிப் போட்ட மாதிரி இருக்குதுங்கனு சொல்வார்கள். டைபாய்டு காய்ச்சல் போலவும் பாதி பக்கவாதம் வந்த மாதிரியும் இருப்பார்கள். வாத நோயும் இருக்கும். வாத பக்கவாதமும் உடன் இளைத்தலும் காணப்படும். ரொம்ப சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஒய்;;;;வின்மை கொஞ்சம் கூட நகர முடியாது. இந்த பலஹுனம் ரொம்ப நாளாகவே இருந்ததாக இருக்கும். உடன் பசியே இருக்காது. ரொம்ப மிக மிக அதிகமான அசதி. கண்டிப்பாக இவர்கள் வெளிக்காற்றுக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து விடுவார்கள். இவைகளை மூடிவிட்டால் தொல்லை அதிகமாகிவிடும். தலை மற்றும் வயிறு ரொம்ப குளிர்;ச்சியாக இருக்கும். அப்போதும் பெண்கள் குளிர்காற்றை விரும்புவார்கள். (தோல்) சருமம், கண்கள் மற்றும் முகம் ரொம்ப மஞ்சளாகி விடுதல். எல்லா சருமமும் வறண்டு விடுதல், உடல் முழுவதும் வியர்வை ஏற்படுதல்.

தூக்கம் இல்லாமல் படுத்துக் கிடப்பார்கள். மந்தமாக சோம்பலாகவே இருப்பார்கள். நேரமாகவே படுப்பார்கள். ஆனால் தூக்கம் வராது. கோட்டுவாய் வந்து கொண்டே இருக்கும். ஊஞ்சலில் படுத்துக்கொண்டு ஆடிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் தூங்க விரும்புவார்கள். ஆனால் தூக்கமே வராது இதனால் சோம்பலாகவே இருப்பார்கள். அதனால் தெளிவு இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.

காய்ச்சலின் போது காலிலிருந்து உடம்பு முழுவதும் காய்ச்சல் பரவும். குளிர்ச்சியும் காலிலிருந்தே மேலே ஏறும். எப்பவும் காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு திட்டு, திட்டாக காய்ச்சலும், குளிரும் மலேரியா காய்ச்சலில் இருக்கக் கூடிய பல குறிகளைக் கூறுவார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல், மந்தம் பலஹுனம், சோம்பல் இருக்கும். ஈர பருவக்காலங்களில் உடம்பு ஜில்லுணு இருக்கும். துப்பாக்கியில் சுடுவது போல வலியும், இது எல்லா தசைகளிலும் வலிக்கும். எலும்பில் தொடர்ச்சியான வலி, இரவு நேரத்தில் அதிகமான காய்ச்சல், காலையில் மேலும் காய்ச்சல் அதிகமாகி விடும். தினமும் மதியத்தில் உடம்பு ஜில்லிப்பு. இடுப்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் அதிகமாகிவிடும். தினமும் மத்தியானத்தில் உடம்பு ஜில்லிப்பு, இடும்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் ரொம்ப அதிகமாகிவிடும். உடல் முழுவதும் தொடர்ச்சியான வலி. புஜத்திலும், கால்களிலும் முக்கியமாக இது போன்ற வலி. சிறிது அசைவு ஏற்பட்டாலும் அதிகமான வியர்வை இது திடீர், திடீரென ஏற்படும். உடல் ஜில்லிப்பு பின்பு இரண்டு நாட்கள் சூடு என மாறி மாறி வரும். இரவில் அளவுக்கு அதிகமான வியர்வை. வியர்வை அதிகமாக வருவதால் உடல் ஜில்லிப்பு ஏற்படும்.

பல நாட்களாக இருக்கும் மூல வியாதி அதன் மேல் பகுதியில் இரத்தமும் வரும். வலி இருக்காது. ஆனால் ரொம்ப வெறுப்பாக இருப்பார்கள்;. பேதி தினமும் நான்கு, ஐந்து முறை போகும். லேசாகவும், இரத்தத்துடனும், சளியுடனும், சீதமும் கலந்து போகும். மலம் வருவது போன்ற உணர்விருக்காது. கைகளில் அசதி ஏற்படும். பின்பு சிறிது சிறிதாக இந்த களைப்பு கால்களுக்கு பரவும். முதுகு பகுதியில் உள்ள தசைகளில் மந்தமான வலி, இதே வலி இடுப்பெலும்பு சதைகளிலும் காணப்படும். ஆனால் வலி விரைவில் குறையவே குறையாது, அசதியும் இருக்கும். இடது தொடை நரம்பில் வாதம் மந்தமான தொடர்ச்சியான வலி இது தொடை வரை பரவும். கால் மூட்டுகளில், தொண்டையில் நெருப்பு எரிவது போன்ற உணர்வு. ஆனால் வெளிப்புறம் வியர்வையிருக்கும், படுத்துக் கொண்டால் குறைந்து விடும். வலது இடுப்பில் மந்தமான வலி உடன் இரணமாட்டமும் வலி. அழுத்தினால் தசைகளில் தளர்ச்சி (அசதி) மற்றும் தொடை நரம்புகளிலும், இடுப்பிலும் வலி ஏற்படும். விலா எலும்புகளுக்கு கீழ் உள்ள பகுதியில் சுடுவது போல வலி. இந்த வலி அதிகரித்து கீழ்ப்புறமாக இடது கால் வரை பரவும். தோள்பட்டை எல்லாம் கனமாக இருப்பது போன்ற உணர்வு. கைகள் மற்றும் பாதத்தில் எரிச்சல், கைகள் மற்றும் புஜங்களில் தொடர்ச்சியான வலி. இரவில் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் ஒய்வின்றி நடுங்குதல். காலையில் அதிகமாகி விடுதல். ஒய்வில்;; திரும்பி, திரும்பி படுப்பது போல கற்பனையான எண்ணமிருக்கும். விலா எலும்புக்கு கீழே உள்ள பகுதியில் மந்தமாக இருத்தல், அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு பட, படவென அடித்துக்கொள்ளும். வலி உள்ள பகுதியை அழுத்திப் படுத்தால் சிறிது சுகம் கிடைக்கும்.