MAGNETIS POLUS ASTRALIS மாகனடிக் போலஸ் ஆஸ்திரேலியர்

மூலம்: பூமியின் தென் துருவ பகுதியின் காந்தம்.

இவர்களது மனநிலை

எப்போதும் சந்தோஷமாகவே இருக்க விரும்பும் மனநிலை. ஆண்களுக்கு குறைவான உயிர்சக்தியே இருக்கும். தனிமையில் இருக்க விரும்புதல், ஏதாவது ஆராய்ச்சி செய்துக் கொண்டே இருத்தல், அதிலும் கடந்த கால துன்பங்களை மணிக்கணக்கில் ஆராய்வார்கள். உடனே அவர்களை அறியாமலே அழுகை வரும். தன்னைப் பற்றி நினைக்கும் போதே சக்தியை இழந்து விடுதல், ரொம்பவும் கோழைத் தனமானவர்கள். வேலை செய்யும் போது மனம் வெறுப்பாகவே இருக்கும், இதனால் வெறுப்புடனே பேசுவார்கள். தனிமையைத் தான் விரும்புவார்கள். நண்பர்களோ, அதிக கூட்டமோ இருந்தால் பிடிக்காது. ஒரு சின்ன விஷயத்துக்காகவும், மிருகத்தனமான கோபம் வரும், நடுக்கலும் ஏற்படும். அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவார்கள். இவர்களிடம் பணிவே இருக்காது. மிருகத்தனமாகவும், இரப்பாக பேசுவதும், செயலும் இருக்கும். சுயநலவாதிகள். சின்ன தடை ஏற்பட்டாலும், விட்டுக் கொடுக்காமல் மேலே கண்டது போல கோபப்படும் ஆண்களுக்கு. எல்லாமே வேகமாக நடப்பது போல கற்பனை. கலங்கிய மனநிலை அதனால் நிலையான சிந்தனை இருக்காது. பார்க்கும் பொருள் எல்லாம் கரெக்டாக இருக்கனும். புருவத்தை தூக்கிதான் பார்ப்பார்கள். பலவகையான நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். சராயம் குடித்தது போல மயக்கம் இருக்கும். படுக்காமல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தலையில் இரத்தம் சூடாக பாய்வது போல இருக்கும். தலை ரொம்ப பாரமாக இருக்கும். கவ்வி பிடிச்சுகிச்சி என்பார்கள். மூளையில் ஏதோ ஒரு புழு ஊறுவது போலவும், மூளை மறுத்தது போலவும் இருக்கும். இடது மூளையில் கிழிப்பது போல வலி எரிச்சிகிட்டே குத்துது என்பார்கள். பின் மண்டைப் பகுதியில் மாறி, மாறி வலி வரும். பின் மண்டையில் பயங்கரமான வலி, ஒரு மணி நேரம் வெளிக்காற்றில் இருந்தால் குறையுது என்பார்கள். தலைப்பகுதியிலும், கண் புருவப் பகுதியிலும் உள்ள நரம்புகள் இழுத்துப் பிடிக்கும். மண்டை ஓடு முன் நெற்றியில் வறட்சியாக இருப்பது போல உணர்வு. முகத்தில் குளிர்க்காற்று பட்டு மேல் நோக்கி போகுது. (ஓய்வில் இப்படி இருக்கும்) என்பார்கள். அடிக்கடி கண்ணில் தண்ணி வரும். புருவத்தில் அதிகமான வலியும், வறட்சியும் இருக்கும். முக்கியமாக ஏதாவது ஒன்றை பார்த்தால் இப்படி ஏற்படும். அதிகமாக இந்த தொல்லைகள், பகலிலும் மாலையிலும் காணப்படும். பார்க்கும் பொருட்கள் டிம்மாக தெரியும். இரண்டு, இரண்டாக தெரியும். கண்ணுக்கு சக்தி பத்தலை என்பார்கள். அப்பொழுது கழுத்து பின் பகுதியை தொடவே முடியாது.

காது:- காதில் கிழிப்பது போல வலி ஏற்பட்டு அடுத்த காது வரை பரவும். மேலும் இந்த வலி பரவி காதினுள்ளே சென்று வலிக்கும். காதில் கர்ஜனை செய்வது போல சப்தம். இந்த கர்ஜனை மேல் நோக்கி காது வரை செல்வது போன்ற உணர்வு காது மற்றும் மூக்கில் சப்தம் கேட்கும். தினமும் காலையில் காதில் ‘உஸ்’ என்ற சப்தம் கற்பனையாக கேட்பது போன்ற உணர்விருக்கும். நெற்றி பகுதியில் கனமாக ஏதோ இருப்பது போல உணர்விருக்கும். ஆண்களுக்கு வெளி காதெல்லாம் வேக்காடு அடைந்து விடும். காதில்; நைவு தைப்பது, இறுக்குவது போல வலி. வளையம் சுத்தர மாதிரி சப்தம் கேட்கும்.

பல்:- மாலை நேரங்களில் சூடாக எது குடித்தாலும் பல் வலி ஏற்படும். மேல் தாடை கண்ணில் கிழிப்பது போல வலியும், பல் முழுவதும் மந்தமான வலியும் இருக்கும்.

நாக்கு:- நாக்கு முழுவதும் வீங்கியது போல உணர்வு.பேசும் போது வாயிலுள்ள நரம்புகள் எல்லாம் Nடாக இருக்கும். முன் தொண்டைப் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல் சூடாக இருக்கும். முன்தொண்டைப் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல். குரல் வளையில் சிறிய தூசி நெறிப்பது போலவும், சூடாக இருப்பது போல இருக்கும். பால் சாப்பிட வெறுப்பு காலையில் எழுந்தவுடன் எதையும் சாப்பிடாமல் வெறுப்பாக உட்கார்ந்து இருப்பார்கள். தினமும் காலையில் எழுந்து நடந்த பின்பு வாந்தி எடுப்பது போன்ற மனநிலை இருக்கும். முன் பக்கம் குமியும் போது குமட்டல். அதனால் வலிப்பு ஏற்படும்.

அடிவயிற்றில் காற்று சுத்திக்கிட்டே, உருண்டுகிட்டே இருக்கும். இரவில் வயிறு உப்பி அடிவயிற்றில் கடுமையாக வலிக்கும். இவர்களது மலக்காற்று நாற்றத்துடனும், நாற்றம் இல்லாமலும் மாறி, மாறி வருது, உள்ளே ஏதாவது சப்தம் கேட்டுக் கொண்டேவும், கிழிப்பது போலவும், இரணமாட்டமும் இருக்கும். அடிக்கடி காற்றுப் பிரியும் ஆனால் வலி குறையாது. நடக்கும் போது வயிறு இழுத்துப் பிடித்துக்கும். அதிகாலையில் உட்கார்ந்திருக்கும் போது மேல் வயிறுப் பகுதியில் வலி தோன்றும். மாலை நேரத்தில் வயிறு நீண்டு விடும். காற்று நிறைய பீச்சியடித்து கொண்டு வரும். அடி வயிறு வளையம் போட்ட மாதிரி பெருசா வட்டமா இருக்குது. எர்ணியா உற்பத்தி ஆகுது அசைந்தால் இரும்பல் வரும்.

அடிக்கடி மலம் கழிய ஆசை உடன் இரும்பல். ஆனால் பெண்களுக்கு அடிக்கடி மலம் வரும். ஆனால் போக விருப்பம் இருக்காது. ஆஸனவாய் மற்றும் மலக்குடலில் இறுக்கம் ஏற்படும். காத்தோடு சேர்ந்து மலமும் கொஞ்சம், கொஞ்சமாக வரும்.

சிறுநீர் :- மானி அடிக்கடி தளர்ந்;திடும். சிறுநீர் அதிகமாக தொடர்ந்து போகும். சிறுநீர் பாதையில் ஆசிட் இருப்பது போலவும், நைவு காயம் ஏற்பட்டது போலவும், சிறுநீர் விடும் போது வலி ஏற்படும். தினமும் அதிகாலையில் ஆண் உணர்ச்சி நரம்புகளில் இழுத்துப் பிடித்து வலி ஏற்படும். விதை கொட்டைகளை கையில் தாங்கி பிடிக்கணும் போலிருக்கும். விதைக்கொட்டை எல்லாம் பெருசா மாட்டுக்கு இருக்குற மாதிரி எனக்கு இருக்குதுங்க என்பார்கள், மற்றும் தொட முடியாத அளவுக்கு வலியும் இருக்குது என்பார்கள். உணர்ச்சி நரம்புகளில் எல்லாம் நடுக்கலும், நரம்புகளில் மெதுவாக இழுத்துக்கொண்டே வருவது போன்ற வலியும், விந்து நரம்புகளில் நைவு காயம் ஏற்பட்ட மாதிரி வலி இது இரவில் அதிகம் மின்னல், மின்னுவது, தெரிப்பது, இழுப்பது, இது போல விந்து நரம்புகளில் பல வித வலிகள் ஏற்படும். மானி சதையெல்லாம் விரைத்து வலி ஏற்பட்டு முதுகில் போய் நிற்க்கும். மானித்திண்டில் மானியின் அருகில் பருப்பாட்டம் சிறு சிறு கட்டிகள் அதனால் மானி இருப்பது போல உணர்வே தெரியாது. மானி எல்லாம் சிவந்து விரைப்பாக இருக்கும். வலி இருக்காது. விந்து சுரபி எல்லாம் வீங்கி விந்தே வெளி வராமல் இருக்கும். பெண் மீது விரும்பி ஈடுபடுவார். பாதியில் விருப்பம் இருக்கும் போதே விந்து வெளியேறுவதற்குள் மானி வெளியே வந்திடும். இதை மானியின் பக்க வாதம், இழுத்து கொள்வது எனலாம். மாதவிலக்கு சரியான நாட்களில் வராது அசைந்தால் வரும். ஒவ்வொரு முறை போக்கு போகும் போது அடிவயிற்றில் வெட்டுவது போல வலி. ஹானிமேன் கூறுவது இம்மருந்துக்குறியப் பெண்கள் தென் துருவத்தால் தாக்கப்படுவாள் அதனால் ஒரே மாதிரியான குறியை கூறுவாள். இவர்களின் கருப்பை அடிக்கடி பாதிக்கப்படும். வட துருவ காந்தத்தினால் மாதவிலக்கு சில நாளே இருக்கும். நான்கு மணி நேரம் இருக்கும். பின்பு நின்று விடும். தென்திசையால் தாக்கப்படும் போது லேசான சிவப்பு நிறமாகவும், தண்ணியாட்டமும் மாதவிடாய் படும். வயிற்றின் குழிப்பகுதியிலிருந்து சுவாசம் வெளி வரும். அதுவும் குட்டை, குட்டையாக தான் வெளி வரும். இருதயத்தில் அதிகமான துடிப்பு தெரியும். முதுகுப்பகுதியில் கடிப்பது போல கடுமையான வலி ஏற்படும்.

கைகளில்:- இடது புஜத்தில் ஒரு சிறு பாம்பு ஊர்ந்து செல்வது போல இருக்கும். அது கீழே இறங்கி வரும், இவர்களது கைகளில் திடீரென வலி தோன்றும். உடன் உதறலும் இருக்கும். இது கீழ் நோக்கி இறங்கும். விரல்களில் உதறலும் ஏற்படும். அப்போது தொட்டால் காந்தத்தை தொடுவது போல இருக்கும். காந்தம் மாதிரி வலியோ, உணர்வோ இருக்குதுங்க என்று நோயாளிகள் காந்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால்;; மூன்று மருந்தையும் பார்த்துக் கொள்ளனும். காந்தம் நேரடியாக படுவதால் விரல்களில் அடிப்பது போல வலி இருக்கும்.

கால்கள்் தொடைகளில் அழுத்தம் ஏற்படும் அது மிகவும் கஷ்டமாக இருக்கும். கால்களில் உள்ள தசைகள் எல்லாம் இழுத்துப் பிடித்துக் கொள்ளும். வலது புற தொடை மட்டும் ஜில்லுனு இருக்கும். தொட்டால் ஜில்லிப்பு தெரியும். அழுத்தி விட்டால் கால் வலி அதிகமாகி விடும். மூட்டு ஜாயிண்டில் கொர்க், கொர்க் என சப்தம் கேட்கும். மெதுவாக நடந்தால் கெண்டைக் காலில் பிப்பு. பெருவிரல் நகத்தில் இரணமாட்டம் வலி ஏற்படும். கால் சதை எல்லாம் தொங்கி இருக்கும். தொட்டால் வலி ( காந்தம் மாதிரியே ) கிள்ளுவது போலவும் வலி ஏற்படும். பெருவிரல் நகத்தில் செருப்பு பட்டால் ஏதே தானியம் குத்துவது போன்ற உணர்வு.

தூக்கம் :- நடு ஜாமத்தில் தூக்கம் வராததால் கோட்டு வாய் விட்டுக் கொண்டே இருப்பார்கள் சில சமயம் நடு ஜாமம் வரை தூங்காமல் கூட இருப்பார்கள். படுக்கையில் படுக்க விருப்பம் இருக்காது. படுத்தாலும் திரும்பி, திரும்பி படுப்பார்கள். நெருப்பு எறிகிற மாதிரி கனவே வரும், சண்டைப் போடுவது போல, திருடர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொள்வது போலவும் கனவுகள் வரும். இதயத் துடிப்பு மார்பு[ப் பகுதியிலே நன்றாகத் தெரியும்.

காய்ச்சல் ் மாலை நேரங்களில் கழுத்தைச் சுற்றிலும் ஜில்லிப்பு. ஜில்லிப்பான அறையில் இருக்கும் போது கெண்டையிலிருந்து மூட்டுக்கு Nடு பரவி வரும். மேலும் பரவி தலையில் போய் முடியும். ஆனால் இவர்கள் எண்ணமோ உடல் முழுவதும் குளிர்ந்தது போல இருக்கும். தாகமே இருக்காது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர் வரும். உடல் முழுவதும் குளிர்ந்தது போல இருக்கும். தாகமே இருக்காது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர் வரும். உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்விருக்கும். ஆனால் நாம் தொட்டுப் பார்த்தால் Nடாக இருக்கும். குளிர்ச்சியில் இருக்கும் போது கூட உடம்பு சூடு அப்பக்கூட போர்த்தியே படுப்பார்கள், வியர்வையும் இருக்கும். வாய் ரொம்ப வறட்சியாக இருக்கும். வறட்சியை இவர்களும் விரும்புவார்கள். தண்ணித் தாகம் இருக்காது. நுரையீரல் பகுதியில் நடுக்கல் ஏற்படும். காதினுள், கோழி முடி உறுத்துவது போன்ற உணர்விருக்கும். முக்கியமாக முதுகுப் பகுதியில் சூடாக இருக்குதுணு சொல்வார்கள்.

உடலின் குறிப்பிட்ட பகுதியில், முதுகுப் பகுதியில் அரிப்பு மாலை நேரங்களில் ஏற்படும். மாலையில் படுத்திருக்கும் போது அரிப்பு, தேள் கொட்டுவது போல, கிழிப்பது போல வலி இருக்கும், அதனால் அங்கேயும், இங்கேயும் அலைவார்கள். கைக் கால்;களில் நைவு காயம் ஏற்பட்டது போல வலி, கல்லின் மேலே படுத்திருப்பது போன்ற உணர்வு. மூட்டுகளெல்லாம் இழுத்து பிடித்துக்கும். உடம்பு முழுவதும் மின்னல் மின்னுவது போல் மின்னும். உடம்பு கனமாகவும், சோர்வாகவும் இருக்கும். பக்கவாதம் வந்திடுமோனு கவலை முகம், உடம்பு எல்லாம் சூடாகி விடும். உடன் உடம்பு முழுவதும் உதறும். குளிர் மாதிரி.