MAGNETIS POLIAMBO(THE MAGNET) - மாக்னிடிஸ் போலுசாட்டிக்ஸ் (இது காந்தம்)

மூலம்: பூமியின் மையப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட காந்தம்.

இவர்களது மனநிலை ஒரு நிலையிலேயே இருக்காது. உதாரணமாக காலையில் வியாபார விஷயமாக பேசியதை மற்ற நேரங்களிலும், வியாபாரிகளிடம் தன்னை பற்றியே பேசுவது போல தெரியும். உடம்பும், மனமும், பர, பரப்பாகவே இருக்கும். உடம்;பு, சூடாக இருப்பது போல் உணர்வும், குளிர்ச்சியும், முகத்தில் வியர்வையும் இருக்கும். திடீர்ன்னு கீழே விழுந்து, விடுவார். என் உடம்பு பொணத்தை புதைத்த மாதிரி பொதஞ்சி கிடக்கிறது என்று கூறுவார்கள். இந்த பரபரப்பினால் பேசும் போது சரியாக வார்த்தை கோர்வை வராமல் உளறுவார்கள். காரணம் ஞாபக மறதி தான். ஆண்கள் வேகமாக வருவதும், போவதும், வேகமாக கண்களை உருட்டி, உருட்டி பார்ப்பதும் இருக்கும். ஞாபக மறதியின் காரணமாக பேச்சும், பார்வையும் வித்தியாசமாக இருக்கும். ஞாபக மறதியின் காரணமாக பேச்சும், பார்வையும் வித்தியாசமாக இருக்கும். தபால் எழுதினால், எழுத்துகளை, வார்த்தையே விட்டு விடுவார்கள். பொருட்களை எண்ணும் போதும், படபடப்பு. தன்னுடைய வேலைகளை சுறு, சுறுப்பாக செய்வார். அதனால் ஏகப்பட்டட தவறுகள் செய்து விடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல், போய்விடும். தன்னை சுற்றி நிறைய பொருட்கள் இருப்பதாகவும், அது பறப்பதாகவும் ஒன்றுக் கூட எடுக்க முடியலை என்றுக் கூறுவார்கள். ஆண்கள் பயங்கர வேகத்தால் கோபம் ஏற்பட்டு பிறகு அவருக்கு தலை இரணம் போல் வலியும், மண்டைக்குள்ளே கிள்ளுவது போல் வலியும் இருக்கும். ஆண்களுக்கு மாலையில் படுக்கும் போது மயக்கம் ஏற்படும். திடீரென தலை உதறுவது போலவும், புட்டுகிட்டு போவது போலவும் இருக்கும். நடக்கும் போது கீழே விழுந்திடுவோமோனு எண்ணம். ஆனால் அப்ப கிரு, கிருப்பு இருக்காது. நடக்கும் போது எதிரே உள்ள பொருட்கள் வித்தியாசமாக தெரிவதால் என்னவென்று சொல்லாமல் நிலை குழம்பி விடுவார்கள். தலை முழுவதும் “உஸ்” என்ற சப்தம் கேட்கும். பின் மண்டை காந்தம் இழுப்பது போல் பின்பக்கம் இழுக்கும். இழுத்து தொடையில் கட்டி வெச்ச மாதிரி இருக்கும். கால்களையும், மார்பையும் இழுக்கும். தலை முழுவதும், போதை பொருள் (OPIUM). சாப்பிட்ட மாதிரி குழப்பமாவே இருக்கும். அப்போது ஞாபக சக்தி குறைந்து எந்த ஞாபகமும் வராது. தலைவலியின் போது மந்தமாகவும், ஜில்லுனு போர்வையில் போர்த்தி விட்டது போலவும், இருக்கும். பின் மண்டையில் ஏற்படும் வலியானது பரவி கன்னம் பகுதி வரை வந்து அதன் குழி எலும்புகளில், அழுத்தம் ஏற்படும். இந்த பாதிப்பு மூளை வரைச் சென்று இவர்களது மனமும் மந்தமாகி விடும். தலையின் உச்சியிலுள்ள நரம்புகளில் மந்தமான வலி ஏற்பட்டு உடல் முழுவதும் கீழே பரவும். முகத்தில் ஜில்லென்றக் கையைக் கொண்டு அழுத்திப் பிடிப்பார்கள். உடன் சூடாகவும், இருக்கும். சித்ரவதை செய்வது போன்ற வலி, எரிச்சல், கிள்ளுவது போன்ற உணர்வு முகத்தின் தசைகளில் ஏற்படும். மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் காலை முகத்தில் வியர்வை மகிழ்ச்சியாக இருக்கும். சமயங்களிலும், மற்ற நேரங்களிலும், கருவிழி சுத்தும். சந்தோஷம் ஏற்பட்டும் இவர்களும் சுத்துவார்கள். இவர்கள் கண் முன்பு துப்பாக்கி வெடித்து குண்டு போவது போலவும், நெருப்பு எரியிர மாதிரியும், கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவது போலவும் தெரியும். இவர்களது கண் துடிப்பு, கண்ணாடி உடைவது போன்ற சப்தம் கேட்குது என்பார். மாலை நேரங்களில் இப்படி கேட்கும். கண் இமை, விழிக்கோலங்கள் பிப்பு ஏற்படும். மேல் இமை வறட்சியாகவும், கீழ் இமை தீடீர், தீடீரென வேகமாக இழுக்கும். காதுப் பகுதியில் இனிமையான விசில் சப்தம் கேட்கும். நாடித்துடிப்பு வருவதும், போவதும், நன்றாக் தெரியும் இவருக்கு காதில் “உஸ்” என்ற சப்தம் கேட்கும். கரண்ட் ஷேக் அடிப்பது போல் இருக்கும். கனமான சப்தம் காதில் கேட்கும். அது காதிலிருந்து, மூக்கிற்கும் வரும். கற்பனையாக ஒரு வாசனை தெரியும். பிறகு அந்த வாசனை தெரியும். பிறகு அந்த வாசம் இல்லை என்று கூறி, இது வேற வாசம் என்று கற்பனையாக கூறுவார்கள். ஒரு பொருள் இந்த மாதிரியான வாசனையாகத்தான் இருக்கும் என்று முன் கூட்டியே கூறுவார்கள். நெஞ்சுக்குள்ள ஏதோ துணி வைத்து அடைத்த மாதிரி அடைப்பு இருக்குது என்பார்கள். பல் மற்றும் தாடைப்பகுதியில் உலோக வாடை ஏற்படும். மற்றும் நாக்கின் ஒரு பக்கம் மட்டும் உலோக வாடையின் சுவை இருக்கும். தாடை பகுதியில் கிழிப்பது போன்ற வலியும், உதறலும் ஏற்படும். இது கண் குழி வரைப் பரவும். அந்த இடத்தில் (கண் எலும்பில்) கிழிப்பது போல, குடையற மாதிரி, கிள்ற மாதிரி இப்படி பலவிதமான வலிகளும், எரிச்சலுடனும் ஏற்படும். முக எலும்பிலும், கிழிப்பது போன்ற வலி ஏற்படும். இது குறிப்பாக மாலை நேரங்களில் பல் எல்லாம் ஆடுது என்று சொல்லுவார்கள். அப்போதும் குளிர்ச்சியான நீரையே குடிப்பார்கள். பல் வலி அதிகமாகி காது மந்தமாகி விடும். எகிரு (வீங்கி விடும்). பெருத்து விடும். பயங்கரமான வலி இருக்கும். தொடவே விடமாட்டார்கள். சொத்தைப் பற்களில் தொடர்ச்சியான வலியிருந்து கொண்டே இருக்கும். கீழ் பற்களில் வேர்களில் வலி அது ஓட்டைப் போட்டுக் கொண்டே போவது போலவும், இரணமாட்டமும் இருக்கும். அந்த வலி தாடைப்பகுதியில் ஷேக் அடிப்பது போல் இருக்கும். இது நெருப்பு மாதிரி பரவி பல் பகுதிக்கு செல்லும். எச்சில் சுரபிகள் பெருத்து அதில் வலி ஏற்படும். தினமும், காலையில் வெளிக் காற்றுப்பட்டால் இது போல ஏற்படும். தினமும் மாலையில் உதடு வீக்கம், வாயில் பயங்கர வாடை வரும். சீழ் நாற்றம் மாதிரி. சளி தொண்டையிலே அப்பிக் கொள்ளும். நாக்கில் எரிச்சல் மற்றும் வலியும் ஏற்படும். சாப்பிடும் போது அதிகமான பசி இருக்கும். முக்கியமாக மாலை நேரங்களில் இப்படி இருக்கும். ஆண்களுக்கு அதிகமான பசி இருக்கும். முக்கியமாக மாலை நேரங்களில் இப்படி இருக்கும். ஆண்களுக்கு அதிகமான பசி இருக்கும். ஆனால் சாப்பிட்டால் சுவையே தெரியாது. புகையிலை, பால், பீர் சாப்பிட விரும்பும் ஆண்களுக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கனும். எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியே இருக்காது. புகையிலை போட வெறுப்பாக இருக்கும். இருந்தாலும் விரும்புவார்கள். எதாவது கெட்ட வாடை வயிற்றிலிருந்து வந்து கொண்டே இருக்கும். ஊசிப்போன மாதிரி புளியேப்பம் வரும். தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிறு கல்லாட்டமும், உப்பிக்கிட்டும் இருக்கும். அசைவே இருக்காது. இழுத்துப் பிடித்த மாதிரியும், தெறிப்பது போல வலியும், அதிகமான மலக்காற்று பிரியும், அடி வயிற்றில் ஏதோ உருளுது, சில நேரங்களில் தெரிப்பது போன்ற வலியும் இருக்கும். பேதியின் போது பட, படனு சப்தத்துடன் மலக் காற்று வெளியேறிடும். காத்து வெடிப்பது போல் பயங்கர சப்தத்துடன் வெளியேறுவதால் ஆஸன வாயில் வலி ஏற்படும். விடியற்காலையில் வயிறு உப்பிசமாகி சீழ் நாற்றத்துடன் காற்று பிரிவதால், தூக்கத்தை கெடுத்துடுதுங்க என்பார்கள். காற்று சூடாகவும், மலக்காற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவதால், ஒரு மயக்க நிலையே ஏற்படும். மேல், கீழ் வயிறு இழுத்து பிடித்து வலி ஏற்படும். தொப்புளைச் சுற்றி அரிப்பு, பேதியின் போது கடுமையான வயிறு வலி. மலச்சிக்கல் காரர்களின் மலக்குடல் பகுதியில், கடுமையாக இழுத்துப் பிடிக்கும். மூலத்தில் கடுமையான வலியும் ஏற்படும். மலம் கழிந்த பிறகு மேலும் அரிப்பும், இரண மாட்டம் வலியும், மலக்குடல் பிடிப்பும் இருக்கும். உட்காரும் போதும், நடக்கும் போதும் மூலம் தரையில் முட்டும். உடன் பிப்பும், எரிச்சலும், மலம் கழிந்தப் பிறகு (மயக்க நிலை பார்வை மங்கியதுப் போல) மலம் கழிவதற்கு முன்பே மூலம் வெளியேறிடும். சிறுநீர் பையில் எரிச்சல். முக்கியமாக சிறுநீர் பையின் கழுத்துப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். கொஞ்ச நேரத்திலே சிறுநீர் வரும்.

ஆண் உறுப்பில்:- மானியின் உள் பகுதியில் எரிச்சலும், உடனே விந்தும் பீச்சியடிக்கும். அதிகாலையிலேயே செக்ஸ் எண்ணங்கள் தோன்றி விந்து வெளியேறிவிடும். இரவிலும், விந்து பீச்சியடித்துக் கொண்டு வெளியேறும். காலையில் படுக்கையில் படுத்திருக்கும் போது பயங்கரமாக செக்ஸ் விருப்பம் ஏற்படும். அதிகமான செக்ஸ் எண்ணம் ஏற்பட்ட பின் எழுச்சியே இல்லாமல் அப்படியே இருக்கும். இதற்கு காரணம் சுரபிகள் வேலை செய்யாததே. மானி வீங்கி விடும். நகர்ந்தாலும் அந்த எண்ணம் ஏற்பட்டாலும் லேசாக வலி ஏற்படும். பிப்பும் ஏற்படும். சொறிந்தால் சித்;ரவதை செய்வது போன்ற வலி. மாதவிடாய் சிறிது வந்ததும், நிற்கும் பிறகு அடுத்த நாள் வரும். (அ) ஆரம்பித்த நாளே நின்று தொடர்ந்து பத்து நாள் போகும்.

குரல் வளையில்:- இரவில் இரும்பும் போது வலிப்பு ஏற்படும். அதனால் நடக்க முடியலை என்று கூறும் ஆண்களுக்கு இது. இரும்பலின் போது வலிப்பு வந்தது போல இழுப்பார்கள். காலை, மாலை நேரங்களில் தொண்டையில் உள்ள சளியை கணைத்து, கணைத்து எடுப்பார்கள். பயங்கரமாக இரும்பல் ஏற்படும். அதனால் சளி துப்பும் போது கடைசியாக இரத்தமும் வரும். நடு இரவிலும், நடக்கும் போதும், ஆஸ்துமா தொல்லை. அந்த நேரத்தில் தொண்டையில் சளி ஏற்படும். அதை இரும்பி, இரும்பி வெளியேற்றுவார்கள். இரும்பலினால், வலிப்பு ஏற்படும். உடன் மார்பு பகுதியில் “ஷாக்” அடிக்கிற மாதிரியும், கவலைக்கிடமான சுவாசமும் காணப்படும். மார்பில் குரக்களை பிடிப்பது போன்ற வலி. வயிறு மற்றும் குடல்களில் கிழிப்பது போன்ற வலியும், தோள்பட்டையில் அடிப்பது போல் வலியும், இருக்கும். காலையில், நகரும் போதும், நடக்கும் போதும், கழுத்து (செர்விக்கல்) பகுதியிலும், முதுகு எலும்புகளிலும், கடுமையான வலியிருக்கும். கழுத்து, சதை எல்லாம், இழுத்து பிடித்து வலி ஏற்படும். ஓய்விலும், உட்காரும் போதும், நிற்கும் போதும், கழுத்தும், முதுகும் வலிக்கும். பின் முதுகெலும்பில் எரிகிற மாதிரி இருக்கும். முதுகு தசைகளில் இழுத்துப் பிடிக்கும் ஒரு வகை வலியும், முதுகில் ஒரு சில பகுதியில் உயிர் துடிப்பது போன்ற ஒர் உணர்வும் இருக்கும். காலையில் படுத்திருக்கும் போது, இடுப்பு பட்டை எலும்பில் வலி, காலை நேரங்களில் குமிந்திருக்கும் போது, நீண்ட நேரம், இது போன்ற வலி ஏற்படுதல், முதுகின் சில பகுதியில் உதறுவது போல, ஷேக் அடிப்பது போன்ற பல வலிகள் ஏற்படுதல், மூச்சு விடும் போது அப்படியே பிடித்துக் கொள்ளுதல் இருக்கும்.

கைகளில்:- குளிர்ச்சியான பகுதியில் இருக்கும் போது, புஜங்களின் தசைகளில் கிழிப்பதுப் போல் வலியும், நடுக்கமும் இருக்கும். தோள்பட்டையின் மேல் பகுதியில் ஷேக் அடிப்பது போல் ஏற்பட்டு கை, புஜம், உடம்பு என் உடல் முழுவதும் பரவி நடுக்கம் ஏற்படும். புஜங்களின் மூட்டுகளிலும், தலையில் ஷேக் அடிப்பது போல ஏற்படும். உடன் சின்ன சுத்தியை வைத்து லேசாக அடிப்பது போலவும் இருக்கும். புஜங்களிலும், கை விரல்களிலும், பட, படவென அடித்தும் கொள்ளும். புஜத்தின் வலி முழங்கை வரை பரவி வலிக்கும். உடன் நடுக்கமும் நரம்பும் இழுத்துப் பிடிப்பும் இருக்கும். பகல் நேரங்களில் கை ஜில்லித்து விடும். ஷேக் அடிப்பது போல வலி ஏற்பட்டு மற்ற இடங்களை நோக்கி பாயும்.

கால் மிதிகளில்:- நடக்கும் போது கெண்டை மற்றும் பாதப்பகுதியில் கெண்டைப் பிடிப்பு இடுப்பிலிருந்து பாதம் வரை இழுத்துப் பிடித்து அப்பகுதியில் எரிச்சல் ஏற்படும். வலது காலில் பயங்கரமான ஷாக் அடிப்பது போல் வலி ஏற்படும். மற்றும் கால் இளைச்சு போச்சுங்க என்றும் கூறுவார்கள். வலது கழுத்து, கன்னம் வரை இந்த வலி பரவும். வலது புற கைக் கால்களில் நெருப்பாட்டமே எரிச்சலும், கணுக்கால் மூட்டுகளில் கிள்ளவது போல் வலியும், கால் ஆணி போல வலியும் இருக்கும். இவர்களுக்கு தூக்கம் ஆழ்ந்திருக்காது. கண் விழித்துக் கொண்டே இருப்பார்கள். (கோமாநிலை மாதிரி). தூங்குவார்கள். அதிகாலையிலேயே தூக்கம் விழிப்பு (அ) அதிக நேரமாகியும் தூங்குவார்கள். வெறுப்பு, பயப்படுவது போன்ற கனவுகள், தூக்கம் ஆரம்பிக்கும் போது தலைவலி, உடன் மூளை எல்லாம் இரணமாட்டம் இருக்கும். அவர்களுக்கு காம மிக்க கனவுகள் வரும். அப்போது அவரை அறியாமலேயே விந்து வெளியேறிவிடும். இவர்களது சருமத்தில், ஏதோ கடித்த மாதிரி இருக்கும். சருமத்தில் பல வகையான கட்டிகள் தோன்றும். புறப்பாடுகள் அதிகமாக ஏற்படும். கை, கால் சட்டத்திற்கு கீழ் அதிகமாக கொப்புளம் ஏற்பட்டு வலி ஏற்படும். பொதுவான குறிகள் மந்தமானவர்கள். மருத்த பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் மேல், கீழ், முன், பின் பகுதியில் ஷேக் அடிப்பது போல வலி. இதய துடிப்பு அதிகமாகி மூச்சு திணறல், வலிப்பு ஏற்படும். குத்து, குத்து காயம் ஏற்பட்டால், மயங்கிய நிலையில் இருப்பார்கள். அதிக (நேரம்) நாட்கள் இருக்கும் மயங்கிய நிலை.