MAGNESIA – PHOSPHORICA மாங்கனீசா பாஸ்பாரிக்கா

மூலம்: மாங்கனீசும், பாஸ்பரசும் கலவை.

இம் மருந்துக்குரியவர்கள், வலிகளைப் பற்றியே புகார் சொல்வார்கள். ஏகப்பட்ட வலிங்க, எல்லா வலியும் முறுக்குவது போலவும், வெட்டுவது போலவும், குத்துவது போலவும், மெல்லுவது, கடிப்பது போலவும், இப்படி பலவிதமான வலிகளை சொல்லி விட்டு, எந்த வலியாக இருந்தாலும், சூடாக (சுடுநீர்) குடித்தால் வலிக்கு நல்லாயிருதுங்க, வலி குறைகிறதுங்க என்றால் இது தான் மருந்து. ARS – யை பார்த்துக் கொள்ளனும். சூடான கைகளைக் கொண்டு அழுத்திப் பிடித்தால் சுகம் என்றால் M-P. இதே மாதிரி சூடு இல்லாத கையோ, கட்டையோ, வைத்து அழுத்தி பிடித்து சுகம் என்றால் COLOCINTH. ஒன்பது விதமான வலிக்கும் இதுவே மருந்து. வலியினால் கூச்சல் போடுவார்கள். அடிக்கடி சுடுநீர் குடித்துக்கொண்டு இருப்பதால் மந்தம், சோர்வு, அசதி, கஷ்டம் இருக்கும். ARS மாதிரி வலிக்கு சுடுநீர் சாப்பிட்டால் வலி தணிவு என்றால் இது நல்ல மருந்து. துப்பாக்கி சுட்டு குண்டு மேலே ஏற மாதிரி அவ்வளவு வலிங்க என்பார். அழுத்தினால், தணிவு, நடந்தால் கஷ்டம், இதே இடத்தில் நடந்தால் சுகம் என்றால் COLOC. மாதவிலக்கின் போது எல்லா வலியும் வந்து விடும். வலியினால் தன் நோயைப் பற்றியே பேசுவார். வேறு யார் எதை சொன்னாலும் காதில் வாங்க மாட்டார். வலியின் கொடுமை தாங்க முடியாமல், தானே பேசிக் கொண்டு போவார், வருவார். வேலை செய்த பிறகு வலிப்பு ஏற்பட்டாலும், இரவில் சிறுநீர் தானாகவே போனால், நரம்பு முறிக்கிற மாதிரி என்றாலும், வயிறு உப்பிசம் ஆகி பின்னாடி கட்டிய மாதிரி உணர்வு இருந்தால் M-P.. வேலை செய்த பின்பு நரம்பு சுளுக்கு.