MAGNESIA – MURIATICA மாங்கனீசா முரியாட்டிக்கா

மாங்கனீஸில் உள்ள உப்பு.

இவர்களுக்கு கல்லீரல் நடுங்கும் அளவுக்கு பயம் ஏற்படும். மரண பயம், நோயை பற்றியும் மரண பயம். படுத்திருக்கும் போது எதிர்;காலத்தை பற்றியும் ஏற்படும். அதை சொல்லும் போது பயத்தில் ஈரல், குலை எல்லாம் நடுங்குதுங்க என்பார். மற்றும் கல்லீரல் தொல்லையும் இருக்கும். எனக்கு ஒன்னுக்கு நின்னு, நின்னு வருதுங்க என்பார். மலக்குடலில் இவர்களுக்கு இரணம், அதனால் மலம் சீராக வராமல் ஆஸனத்தில் வந்து தங்கும். முக்கி, முக்கி, முக்கி ஒரு பெரிய உருண்டையாகி விடும். ஆஸன வாய் அடைத்துக் கொள்வதால் தன் விரல்களில் மலத்தை கிள்ளி, கிள்ளி எடுப்பார்கள். இது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். இதை தவிர வேறு வழி இல்லையே அவர்களுக்கு. சிறுவர்கள் என்றால் விரலை ஆஸன வாயிலே வைத்துக்கொண்டே இருப்பார்கள். தாய் கூறுவாள், பிள்ளைக்கு பசியே இல்லை. அதனால் நீண்ட நேரம் ஆனாலும் கூட ஒரு வாய் சாப்பிட மாட்டிங்குதுங்க என்று கூறுவாள். அதற்கு முக்கிய மருந்து. கடல் காற்று ஒத்துக் கொள்ளாது. நீண்ட நாள் அஜீரணத்திற்கு என்றால் M.M., திடீரென அஜீரணமென்றால் NUX -V.மாத விலக்கானது குபுக், குபுக்கெனபடுது என்பார். பேதி மிக நாற்றமுள்ள பேதி. (தான் உயர்வு என்று எண்ணும் காலத்தில் இப்படி பேதி தோன்றும்.) நன்கு யோசித்து வேலை செய்யும் போது கொழ, கொழன்னு அழுகிய முட்டை மாதிரி நாற்றம் உள்ள பேதி ஏற்படும். கல்லீரல் தொல்லையால், காமாலைக்கும், இம் மருந்து பொருந்தும். உடைந்த பல்லில் உணவு சிக்கிக் கொண்டு பல் வலிக்குதுங்க என்பார். அதற்கு இது நல்ல மருந்து. உடன் STAPH. தலைவலியின் போது வெளிக்காற்றில் இருந்தால் சுகம். நெற்றிக்கு மட்டும் காற்றுபட்டால் சுகம் ARS. இடுப்பு நரம்பு வலி. நரம்பு வலிகளைப் பற்றி கூறுவார். உடம்பு முழுக்க குளிர்க் காற்றுபட்டால் சுகம்.