MAGNESIA – CARBONICA மாங்கனீசா கார்போனிக்கர்

ஹானிமேனால் மாங்கனீசை சுட்ட கரி. வீரியம் செய்யப்பட்டவை.

இம் மருந்துக்குரியவர்கள் உடல் தேரவே, தேராது. தாய்க் கூறுவாள் எவ்வளவு தீனி, உணவு, கறி, டானிக் சாப்பிட்டாலும் தேரவே மாட்டிங்கிறான் என்பாள். வெளுத்த மாதிரி இருப்பார்கள். நரம்பு சுண்டி, தசை, சருமம், தளர்ந்து சோர்வுடன் இருப்பார்கள். காய்ச்சலில் போர்த்திக் கொள்ளுவார்கள் TUBER. மாதிரி. உயிர் சக்தியை இழந்த பிறகு தோன்றும் வியாதிகள் CHINA. மாதிரி. நடந்தால் சுகம் என்பார். RHUS –T மாதிரி. குனிந்தால் சுகம் என்பார். சளிக்கு பிறகு தொல்லையும், இடது புறம் தொல்லை என்பார். மாதவிலக்கிற்கு முன்பும், கர்பக்காலத்திலும் பல் வலி, கறி தின்பார்கள் CHIN. மாதிரி. பச்சை நிறத்தில் மண் மாதிரி மலம் பாதி வரும், பாதி உள்ளே போகும். களி மண் மாதிரி மலம் கழிவதும், வெறுப்பு, சந்தோஷம், கோபம் பிறகு வெறுப்பு, திண்பண்டம் திருடும் திருடன், அதாவது பணம் திருடினால் ALUM. போன்ற மருந்துகள். ஆனால் இவன் திண்பண்டத்தை மட்டும் திருடி திண்பான் உடன் M-C. பல் ஈரே கரையும். அதனால் பழம் கூட சாப்பிட முடியாது. கழிவு பொருட்கள் புளித்த நாற்றம், உடன் காரத்தன்மை பல் வேர் கெடும் THUJA.. மாதிரி. ஆனால் M-C யில் பல் ஈரே கரையும். அதனால் பழம் கூடம் சாப்பிட முடியாது. மாலையில் படுத்தால் எல்லா நோயும் சுகம். வெளியே போனால் வண்டி மோதிவிடுமோ, கெட்டது நடந்து விடுமோ என்ற பயம். எவ்வளவு நேரம் தூங்கினாலும் களைப்பே போகாது, தூங்கி எழுந்து உட்கார்ந்து கொண்டுச் சொல்வார், திரும்ப படுத்து கொள்ளலாம் என்று இருக்குது என்பார். BRY, CON, HEP, OP, SULPH. தான் அனாதை என்ற எண்ணத்தால் எர்ணியா ஏற்பட்டாலும், அனாதை விடுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு இம் மருந்து கொடுத்து, அவர்கள் மனநிலை எவ்வளவோ மாற்றம் அடைந்தது என்று கூறுகிறார் Dr. KENT. பல் டாக்டரிடம் போக பயம் STRAM, CALC. கால் ஜில்லிப்பும், உடம்பு சூடும். கவலைக்கு முக்கிய மருந்து. ARS – ஐ விட இது வெறுப்பு அதிகம். ஜெயிலில், அனாதை விடுதியில் கணவனை பிரிந்து, இருக்கும் போது ஏக்கமும், வெறுப்பும்.