MAGNESIA - SULPHRICA மாங்னீசா சல்ப்ரிக்கா

மூலம்: மாங்கனீசும், கந்தகமும் கலவை.

ஆங்கில முறையில் பேதிக்கு தரும் மருந்தை ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தி தரப்படுகிறது. இம் மருந்துக்குரியவர்களுக்கு இனம் தெரியாத பயம் வரும். அதனால் தூக்கம் சிறிது கூட வராது. முன்பு பார்த்தது ஈரல், கொழை நடுங்கும் அளவு பயம். இவர்களுக்கு காரணமே தெரியாது. ஒரே குழப்பங்க என்னான்னு தெரியலைங்க என்றும், காரணமே தெரியாத பயத்துக்கும், இரவில் தூக்கம் வரலை என்பார். உடன் பயம். கேட்டால் காரணம் எதுவும் தெரியலைங்க என்பார். சிறுநீர் கழந்ததும் சிறுநீர் பாதையில் வலி, எரிச்சல், சிறுநீரில் பச்சை நிறங்களில் சிவப்பு நிற படிவுயிருக்கும். தீட்டு மாதிரி வெள்ளைபடும். அவ்வளவு அளவு, வெள்ளை மற்றும் இடைக்கால போக்கு கறுப்பும், கட்டியுமாக போகும். தங்கி, தங்கி போகும். நான்கு நாள் போகும். நிற்கும். பிறகு மீண்டும் வரும். தங்கு தீட்டுக்கு இது தான் மருந்து. வலியானது முதுகில், வந்து பந்து முட்டுவது போன்ற பொய்யான உணர்ச்சி. இதை K-C. உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கருப்பையில் பந்து முட்டுவது போல உணர்ச்சி ஏற்பட்டால், இது தான் மருந்து. பிரசவ காலத்தில் பந்து போன்ற, அதாவது குழந்தை வந்து முட்டினால் K-C. மற்ற காலங்களில் குழந்தை, பந்து முட்டுவது போன்ற பொய்யான உணர்வு ஏற்பட்டால் M-S. தீட்டுக்கு முன்பு அடிப்பட்ட மாதிரி வலி. ARN. மாதிரி. இதே இடத்தில் நரம்பில் வலி ஏற்பட்டால் M-M. விரல்களின் நடுவில் பூச்சி ஊறுவது போன்ற பொய்யான உணர்வு. கடல் காற்று ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நேரம் அஜீரணம். பல் முளைக்கும் போது அழுகிய முட்டை மாதிரி பேதி.