IRIS VERSICOLOR ஐரிஸ் வெர்ஸிகலர்
மூலம்: நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
இம் மருந்து பித்தப்பையில், கணையத்தில், உமிழ்நீர் (எச்சில்) சுரபியில், போன்ற சுரபிகளில் வேலை செய்யக்கூடியவை. நெற்றியில் வலியுடன் குமட்டல் . வலது புற பொட்டில் (விசேஷமாக) தொல்லை ஏற்படும். பயங்கரமான தலைவலி. அதனால் ஓய்வு எடுக்கனும் என்பார்கள். காதில் கர்ஜனை செய்வது போன்ற சப்தமும், (சில்லு) வண்டு கத்துவது போல சப்தமும் கேட்கும். காதைக் குடைந்துக் கொண்டேயிருப்பார்கள். ரொம்ப ஆழமான மயக்கத்தால் விழுந்துவிடுவார்கள். சொத்தைப் பல் வலியினாலும் மயக்கம் வரும். நரம்பு சம்பந்தப்பட்ட குளிர் தானாக வரும். எரிச்சல், வயிறு முழுவதும் எரியும், எரிச்சலினால் வாந்தி வரும், உடன் இரத்தம், பித்தமும் வரும். இவர்கள் பல் துலக்கினால் கூட பித்த வாந்தி வரும். உடன் MERC, IP, K-I பார்த்துக் கொள்ளனும். குழந்தைகளின் வேகமான இளைப்புக்கு இதுதான் மருந்து. எல்லா வாந்திக்கும் HYDROS, IP. பொருந்தும். பித்த வாந்தி என்றால் மட்டும் இது பொருந்தும்.
JALAPA – EXOGONIUM PURGA - ஐலபா எக்ஸோ கோனியம் புர்கா
ஜெலபா என்ற தாவரத்தின் பூ இலை.
தண்ணியாட்டம் பேதி, காற்றுப் பிரியும் போது குமட்டல். வயிறை இறுக்கி கவ்விப் பிடிக்குதுங்க என்பார்கள். பேதி சேறு மாதிரி போகும். மேல் வயிற்றில் வலது புறம் நீண்டு விடும். நாக்கில் உள்ள சுரபிகளில் அறுப்பது போல் வலி. முகம் முழுவதும் நீல நிறமாகவும், ஆஸனவாய் எரிச்சலாகவும் இருக்கும். முகம் கிருஷ்ணன் வேடம் போட்டது போல நீல நிறமாகயிருக்கும், ஜில்லுன்னு இருக்கும், காலில் தெறிப்பது போல் வலி கட்டை விரலிலும், நக கண் பகுதியிலும், உள்ளங்கையிலும், மூட்டுகளிலும் வலியும், எரிச்சலும் இருக்கும். குழந்தைகள் காலை நேரங்களில் நன்றாகவே இருப்பார்கள். இரவில் மட்டும் பயத்தினால் வீரிட்டுக் கத்துதல் மற்றும் ஓய்வில்லாமல் நோயால் கஷ்டப்படுதல். இரவில் ஓயாமல் கத்தும் குழந்தைகளுக்கு இது முக்கிய மருந்து.
KALI – ARSENICOSUM - காலி ஆர்சனிக்கம்
பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.
இம் மருந்தின் முக்கிய குறி அரிப்பு தான். இவர்களுக்கு இரவில் ஆடையை கழற்றும் போதே அரிப்பு உண்டாகும். இதே மாதிரி RUMEX க்கும், இந்த இரண்டு மருந்துக்கும் ஒரே குறி தான். மற்ற வித்தியாசங்களைப் பார்த்து மருந்தை பிரித்துக் கொள்ளனும். நாக்கு, கண் பிதுங்கிற மாதிரியும், பெரிதாக இருக்குது என்றும் மருத்து போச்சி என்றும் கூறுவார். மாயமாக தெரியுது என்றும் கூறுவார். கழிவுப் பொருள் அதிக தூ]நாற்றத்துடன் வெளியே வரும். படர் தாமரையில் துர்நாற்றமும், மணல் மாதிரி செதில்கள் நிறைய உதிரும். மற்றும் படர் தாமரை வளர்ந்து கொண்டே வரும். (இதை குணப்படுத்துவது கஷ்டம்.) இவர்களுக்கு CALC மாதிரி எதிர்பார்ப்பும், பயமும் இருக்கும். மற்றும் கூட்டத்திலும், தனியாக போகவும் பயப்படுவார்கள். இரவு நேரத்திலும், குளிரிலும் தொல்லை. மலம் கழியும் போதும், மாதவிலக்கின் போதும் கவலை ஏற்படும். இவரது கண்கள், தோல்கள், மஞ்சள் நிறமாக காணப்படும். கருவிழி சாம்பல் நிறமாக இருக்கும். காமாலை முற்றியும் மஞ்சலாக மாறும். இவருக்கு மரணமோ, முற்றிய நிலையோ வந்தால், மஞ்ச காமாலையில் முடியும். நாள்பட்ட சரும நோய்க்கும், சரும புற்றுக்கும் இதுவே மருந்து. வறண்ட சருமத்துக்கும், செதில், செதிலாக விழுவதற்க்கும் இது தான் மருந்து. வலது புறமாக, அதாவது வலது கை, கன்னம், கால் என வரும். மணல் போன்ற கொப்புளம் ஏற்பட்டு படர்தாமரை ஏற்படும். அதில் இருந்து மீண்டும் கொப்புளம் ஏற்பட்டு உடைந்து பெரிதாகிக் கொண்டே போகும். இதை குணப்படுத்துவது கஷ்டம் தான். தனிமையில் மரண பயம் ARS. மலம் கழியினுமேனு கவலை. இப்படி காய்ச்சல், சிறுநீர் விடும் போதும், மாதவிலக்கிலும் கவலை, அதனால் மன அமைதியின்மை காணப்படும். சரும புற்றில் சருமம் காய்ந்து சுருங்கி எலும்பும், தோலுமாக இருப்பார்கள், சொறிய, சொறிய விருப்பம். பிறகு வறண்ட கொப்புளம் செதில், செதிலாகவும் வரும். காய்ச்சலுக்கு முன், பின் இப்படி தோன்றும். தாங்க முடியாத அளவு பலஹீனம்.