JALAPA – EXOGONIUM PURGA ஐலபா எக்ஸோ கோனியம் புர்கா

மூலம்: ஜெலபா என்ற தாவரத்தின் பூ இலை.

தண்ணியாட்டம் பேதி, காற்றுப் பிரியும் போது குமட்டல். வயிறை இறுக்கி கவ்விப் பிடிக்குதுங்க என்பார்கள். பேதி சேறு மாதிரி போகும். மேல் வயிற்றில் வலது புறம் நீண்டு விடும். நாக்கில் உள்ள சுரபிகளில் அறுப்பது போல் வலி. முகம் முழுவதும் நீல நிறமாகவும், ஆஸனவாய் எரிச்சலாகவும் இருக்கும். முகம் கிருஷ்ணன் வேடம் போட்டது போல நீல நிறமாகயிருக்கும், ஜில்லுன்னு இருக்கும், காலில் தெறிப்பது போல் வலி கட்டை விரலிலும், நக கண் பகுதியிலும், உள்ளங்கையிலும், மூட்டுகளிலும் வலியும், எரிச்சலும் இருக்கும். குழந்தைகள் காலை நேரங்களில் நன்றாகவே இருப்பார்கள். இரவில் மட்டும் பயத்தினால் வீரிட்டுக் கத்துதல் மற்றும் ஓய்வில்லாமல் நோயால் கஷ்டப்படுதல். இரவில் ஓயாமல் கத்தும் குழந்தைகளுக்கு இது முக்கிய மருந்து.