CALENDULA - OFF காலன்டுல்லா ஆப்
தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை). அடி, தடி காயத்தில் சிராய்ப்பு மட்டும் இருந்து இரத்தம் வடிந்தால் மேல் தோல் மட்டும் உறிந்து விட்ட காயத்திற்கு மேல் பூச்சு போட நல்ல மருந்து ஆகும். கண்ணிலோ, காதிலோ எங்கு அடிப்பட்டு லேசான தோல் உறிவு மாதிரி காயம் என்றால் இது. உள்ளுக்கு வீரியத்தில் தந்தால் புண்ணை ஆற்றும். இதற்கு மன குறி என்று பெரிதாக இல்லை. காயம் பட்டு தோல் உறிஞ்ச மாதிரி சிராய்ப்பு ஏற்பட்ட மாதிரி இருக்குது என்றும், மூக்கு, வாய், பிறப்பு உறுப்புகள், ஆஸனம் என்று எங்கும் இப்படி சொன்னாலும் இது தந்தால் புண்ணை ஆற்றி விடும். வீரியத்தில் மட்டும் தான் உள்ளுக்கு தர வேண்டும். அடிப்பட்டு தோன்றிய புண் காயத்துக்கு மட்டும் தான் இது. தாய் திரவம் பூச வேண்டும். சருமம்:- அடி, தடிப்பட்டு காயங்கள் சருமத்தின் மீது தாறுமாறாக சருமம் கிழிந்து சிராய்ப்பு தோன்றினால் இது மருந்து. மற்றும் சருமத்தின் மீது தோன்றுகின்ற புண்களோ, கொப்பளமோ, அம்மையோ, எந்த ஒரு புறப்பாடுகளும், சிராய்ச்ச மாதிரியே தோற்றம் இருந்தால் இது தான் மருந்து.