CALENDULA - OFF காலன்டுல்லா ஆப்
மூலம்: தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை). அடி, தடி காயத்தில் சிராய்ப்பு மட்டும் இருந்து இரத்தம் வடிந்தால் மேல் தோல் மட்டும் உறிந்து விட்ட காயத்திற்கு மேல் பூச்சு போட நல்ல மருந்து ஆகும். கண்ணிலோ, காதிலோ எங்கு அடிப்பட்டு லேசான தோல் உறிவு மாதிரி காயம் என்றால் இது. உள்ளுக்கு வீரியத்தில் தந்தால் புண்ணை ஆற்றும். இதற்கு மன குறி என்று பெரிதாக இல்லை. காயம் பட்டு தோல் உறிஞ்ச மாதிரி சிராய்ப்பு ஏற்பட்ட மாதிரி இருக்குது என்றும், மூக்கு, வாய், பிறப்பு உறுப்புகள், ஆஸனம் என்று எங்கும் இப்படி சொன்னாலும் இது தந்தால் புண்ணை ஆற்றி விடும். வீரியத்தில் மட்டும் தான் உள்ளுக்கு தர வேண்டும். அடிப்பட்டு தோன்றிய புண் காயத்துக்கு மட்டும் தான் இது. தாய் திரவம் பூச வேண்டும். சருமம்:- அடி, தடிப்பட்டு காயங்கள் சருமத்தின் மீது தாறுமாறாக சருமம் கிழிந்து சிராய்ப்பு தோன்றினால் இது மருந்து. மற்றும் சருமத்தின் மீது தோன்றுகின்ற புண்களோ, கொப்பளமோ, அம்மையோ, எந்த ஒரு புறப்பாடுகளும், சிராய்ச்ச மாதிரியே தோற்றம் இருந்தால் இது தான் மருந்து.
CAMPHORA – OFFICINARM - கம்போரா ஆப்பிசினரம்
கற்பூரம்.
திடீர்ன்னு வேகமான குரூர எண்ணம் தோன்றி விடும். சாவதற்கு மருந்து குடித்தவர்களுக்கும், திடீர் என தானே அந்த எண்ணம் வரும். அதேபோன்ற இந்த மருந்தும் அவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யும். கிராமத்தில் கூட விஷங் குடித்தவர்களுக்கு கற்பூரம் தருவார்கள். உளரல், ஊழையிடுதல், அழுதல், பைத்தியக்காரத்தனமாக மேலே ஏறுதல், இறங்குதல், காலாராவிற்கு இது முக்கிய மருந்து. பைத்தியகாரதனமான வேலையை செய்வார்கள். அரிசி கழுவின மாதிரி பேதி 2 முறை தான் போகும். உடன் வாந்தி வந்து சில நிமிடங்களில் நெற்றியில் வியர்வை, நெற்றி ஐஸ் மாதிரி இருக்கும். நெற்றியை நாம் தொட்டால் நமது கை ஐஸ் மாதிரி ஆகிவிடும். நமது கை இயல்பு நிலைக்கு வருவதற்க்குள் அவர்கள் வெளுத்து மரண களைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். நமக்கு வியர்வை வருதேன்னு நினைத்தால் குறைந்து விடும். போர்த்திக் கொண்டே படுப்பார். மரணக் கட்டம் நெருங்கும் போது துணியை எல்லாம் கழற்றி விடுவார். இந்நிலையிலிருந்து 10 நிமிடத்திற்க்குள் மரணம் வந்துவிடும். குழந்தை என்றால் தூக்கச் சொல்லி வீர், வீர் என்று கத்தும். தாயின் சீலையை வெறிப்பிடித்து கிழிக்கும். பேதி கழிந்து கொண்டே வாயில் நுரை, நுரையாக தள்ளி, மரணம் வந்து விடும். நுரை, நுரையாக தள்ளும் போது இந்த மருந்தை மூக்கில் வைத்தால் இரண்டு முறை சுவாசிக்கும் போதே நல்லாகிவிடும்;. வேகமான மரணக் கட்டத்துக்கு இவைகள் CAMPH, CUPER, CARB-V, VERAT. ஆகிய நான்கு மருந்துகள் 100க்கு மேற்பட்ட வேகமான காலரா நோய்களை குணப்படுத்தியதாக வரலாறு உண்டு. கண்ணை மூடிக்கொண்டு பேசுவார். இது இம்மருந்தின் குறி.
புருவீங் குறிப்பு
ஹானிமேன் காலத்தில் அவர் பிரான்ஸில் இருந்த போது அமெரிக்காவில் விஷ பேதி தாக்கி 1000 கணக்கில் மரணம் அடைந்தார்கள், அப்போது அதன் குறிகளை அறிந்து பிரான்ஸிலிருந்தே ஹோமியோபதி டாக்டர்களுக்கு மூன்று மருந்துகளை தெரிவித்தார் CAMPH, CARB-V, VERAT. இந்த மருந்து கொடுத்து 85% வெற்றி பெற்று விட்டது. வேகமாக பேதி தோன்றி மரண கட்டம் விரைவில வந்தால் இதுவே முதல் மருந்து. ஹோமியோபதி மருந்துகளையும் இது முறித்து விடும். ஆகவே இம் மருந்துகளை தனியாக வைக்க வேண்டும். கெட்ட எண்ணம், வெட்டி விடுவேன். தன்னைப் பற்றி பயம். ஓடி போக விருப்பம். பேதியில் நினைவு ஏற்பட்டால் CROTON TIG. இயலாமை, பேதியில் நினைவு இல்லாமை இது. அழ நினைப்பார் கண்ணீர் வராது. வாழ்க்கையில் அழுது கொண்டே இருக்கிறேன். உயர பறப்பது போல் எண்ணம். தீடீர் அதிர்ச்சியில் மயங்கி விழுதல். குறைந்த வியர்வை பேதி. மரணம். தண்ணீர் பாதி 2 முறை ஏற்பட்டு உடம்பு ஐஸ் மாதிரி ஜில்லித்து போய் விடும். மரண கட்டத்திற்கு வந்து விடுவார். வாந்தி, பேதி ஏற்படும். ஆனால் போர்த்த மாட்டார். மரணம் விரைவில் ஏற்படும்.
CANNABIS – INDICA - கன்னாப்பிஸ் இண்டிகர்
கஞ்சா
எல்லா பொருள்களும், காட்சிகளும், மாயமாக தெரியுது என்பார். நான் தான் கடவுள், கிருஷ்ணன், முருகன், காளி என்பான். சக்கரவர்த்தி, பெரிய ஆபிஸர் என்று தன்னையே பெரிய ஆளாக சொல்லுவான், நினைத்து கொண்டும் இருப்பான் இது. (நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் COFF.) இதற்கு எதிராக முனியப்பன், பேய் பிடித்திருக்குது நான் சவமாட்டம் இருக்கிறேன். மூன்று லோகத்திலும் இருக்கிறேன் என்பார். எனக்கு சூனியம் வைத்திட்டாங்க என்றால் LACH. சந்தேகப்பட்டு என்னை யாரோ கூப்பிடுவது போல காதில் விழுது என்றாலும், (கொடுத்த மருந்து சரிதானா என்று மருந்து மேல் சந்தேக பட்டாலும், டாக்டர் படிச்சவர் தானா என்று டாக்டர் மேல் சந்தேகபட்டாலும், இப்படி சந்தேகத்துக்கு HYOS.) யாரோ எனக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ, யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ, தண்ணி தாண்டிய பிறகு தான், நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ. தண்ணி, தாண்டிய பிறகு தான் நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) தீட்டு சோறு, எழவு சோறு சாப்பிட்ட பிறகு தான் நோய் வந்து விட்டது, தண்ணி தாண்டிய பிறகும், எலும்மிச்சை பழத்தை மிதித்த பிறகும் தான் எனக்கு கால் வலி வந்தது என்றால் RHUS.) காதில் மணியோசை மாதிரியும், யாரோ கூப்பிடுகிற மாதிரி, பேசுகிற மாதிரியும் ஒரு கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் மாதிரி தெரியும். ஒரு மணி நேரம் போவது, ஒரு நாள் போகிற மாதிரி இருக்கிறது. இப்படி புதுமையான, தாமதமான, மாயமான எண்ணங்களையே கூறுவார். (நரகத்தில் இருக்கிற மாதிரி என்றால் MERC. சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி என்றால் COFF.)
CANNABIS – SATIVA - கன்னாப்பிஸ் சாடிவர்
வெள்ளை பூண்டு.
ஆண்களின் சிறுநீர் புறத்தினுள் (பாதையில்) பட்டாணி பருப்பு மாதிரி ஒரு சொட்டு தண்ணி உருண்டு கிட்டு வருது, சிறுநீர் விட்ட பிறகும், இல்லறத்தில் ஈடுபட்ட பிறகும், உறுப்பின் நடு பகுதியல் விந்தோ, நீரோ, ஒரு சொட்டும் உருண்டு கிட்டு வருகிறது என்பார். பெண் சீக்கில் அடிபட்ட பிறகு துணி மேலே பட முடியலையீங்க என்பார். கேட்டால் விந்து ஒரு சொட்டு மட்டும் தங்கி கிட்டு உருண்டு கிட்டே இருக்கிறது என்பார். அதனால் துணியோ, தொடையோ, மோத முடியலை. எடப்பி, எடப்பி நடக்கிறேன் உறுப்பு மோதாமல் இருக்க அப்படி நடக்கிறேன் என்பார். ஓடும் தண்ணீரை கண்டால் பயம். (அதிகமான் தண்ணி, நீர்வீழ்ச்சி, தண்ணீரில் எழுப்பும் ஒளி (அ) பள, பளப்பு பார்த்தால் பயம் என்றால் LYSS. STRAM.)ஆண், பெண் இருபாலருக்கும் வயிற்றுக்குள்ளே உறுப்பைச் சொல்லியும், வயிறு, இதயம், கருப்பை, ஈரல், மூளை இப்படி ஏதோ ஒரு உறுப்புக்குள்ளே ஒரு சொட்டு உருண்டுக்கிட்டே இருக்கிறது என்றால் ஒரே மருந்து இது தான்.