CALCRE- FLUORATA கல்கேரியா ப்ளோரிடர்
கால்சியம் புளோரிக் ஆசிட்.
இம்மருந்து புற்று நோய் மருந்து வகையை சார்ந்ததாகும். விரல் மூட்டு மற்றும் மூட்டுகளில் எல்லாம் உருண்டையாட்டம், பந்தாட்டம் கட்டி முருடு தட்டி இருந்தால், மார்பு எலும்பு நொருங்கி போனாலும், எலும்பு வளர்ச்சிக்கும், நொருங்கி போனாலும் இதுவே மருந்து. சிலருக்கு மூட்டு பந்தாட்டம் இருக்கும். அதற்கு நல்ல மருந்து. கழுத்து மற்ற பகுதியில் எலும்பு வளர்ந்ததாக ஸ்கேனில் கூறப்பட்டால் இது தான் மருந்து. ஒரு T.B. நோயாளிக்கு மார்பு எலும்பு நொருங்கி சீழ் பிடித்து விட்டது என்றார். வாயில் எச்சி துப்பும் போது சீழ் உள்ளே கோழி எலும்பாட்டம் வந்தது என்று எடுத்து காட்டினார். இது மார்பு எலும்பு நொருங்கியது தான், காது குறுத்தெழும்பில் அரிசி மாதிரி கட்டியிருக்கும். அதுவும் குறுத்தெழும்பு வளர்ச்சி தான். அடிப்பட்ட எலும்பில் பச்சை நிறம் என்றால் இது. (நீல நிறம் என்றால் CARB-AN.) சிவப்பாக இருந்தால் BELL. அடிப்பட்ட இடத்தில் கரு நிறம் கட்டி கொண்டிருந்தால் AM-C. எலும்பில் அடிபட்டோ, புற்று நோயிலோ முண்டு, முடிச்சி போன்ற கள்ள சதை வளர்ச்சிக்கும், எலும்பு அழுகலுக்கும் இதுவே மருந்து. மூக்கு திண்டு, வேறு எங்கேயாவது குறுத்தெழும்பு வளர்ந்து விட்டது என்றாலும், வெட்டிய எலும்பு வளர்ந்து விட்டது என்றாலும் இது ஒன்றே மருந்து. இரத்தம், பணம், பொருள் குறைவு என்பார். வாங்கிய கடனை கொடுக்க மனம் வராது NUX-V. வறுமையில் இருப்பது போல் எண்ணம். ஆண்:- விதைக்கொட்டை எலும்பு மூட்டு மாதிரியிருக்குது என்பார். மனம்:- நிறைய செல்வம் இருக்கும். இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனம் வராது. தேவை, தேவை என்று அலைந்து கொண்டேயிருப்பார். கஞ்சத் தனம் தான்.