CAMPHORA – OFFICINARM கம்போரா ஆப்பிசினரம்

கற்பூரம்.

திடீர்ன்னு வேகமான குரூர எண்ணம் தோன்றி விடும். சாவதற்கு மருந்து குடித்தவர்களுக்கும், திடீர் என தானே அந்த எண்ணம் வரும். அதேபோன்ற இந்த மருந்தும் அவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யும். கிராமத்தில் கூட விஷங் குடித்தவர்களுக்கு கற்பூரம் தருவார்கள். உளரல், ஊழையிடுதல், அழுதல், பைத்தியக்காரத்தனமாக மேலே ஏறுதல், இறங்குதல், காலாராவிற்கு இது முக்கிய மருந்து. பைத்தியகாரதனமான வேலையை செய்வார்கள். அரிசி கழுவின மாதிரி பேதி 2 முறை தான் போகும். உடன் வாந்தி வந்து சில நிமிடங்களில் நெற்றியில் வியர்வை, நெற்றி ஐஸ் மாதிரி இருக்கும். நெற்றியை நாம் தொட்டால் நமது கை ஐஸ் மாதிரி ஆகிவிடும். நமது கை இயல்பு நிலைக்கு வருவதற்க்குள் அவர்கள் வெளுத்து மரண களைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். நமக்கு வியர்வை வருதேன்னு நினைத்தால் குறைந்து விடும். போர்த்திக் கொண்டே படுப்பார். மரணக் கட்டம் நெருங்கும் போது துணியை எல்லாம் கழற்றி விடுவார். இந்நிலையிலிருந்து 10 நிமிடத்திற்க்குள் மரணம் வந்துவிடும். குழந்தை என்றால் தூக்கச் சொல்லி வீர், வீர் என்று கத்தும். தாயின் சீலையை வெறிப்பிடித்து கிழிக்கும். பேதி கழிந்து கொண்டே வாயில் நுரை, நுரையாக தள்ளி, மரணம் வந்து விடும். நுரை, நுரையாக தள்ளும் போது இந்த மருந்தை மூக்கில் வைத்தால் இரண்டு முறை சுவாசிக்கும் போதே நல்லாகிவிடும்;. வேகமான மரணக் கட்டத்துக்கு இவைகள் CAMPH, CUPER, CARB-V, VERAT. ஆகிய நான்கு மருந்துகள் 100க்கு மேற்பட்ட வேகமான காலரா நோய்களை குணப்படுத்தியதாக வரலாறு உண்டு. கண்ணை மூடிக்கொண்டு பேசுவார். இது இம்மருந்தின் குறி. புருவீங் குறிப்பு:- ஹானிமேன் காலத்தில் அவர் பிரான்ஸில் இருந்த போது அமெரிக்காவில் விஷ பேதி தாக்கி 1000 கணக்கில் மரணம் அடைந்தார்கள், அப்போது அதன் குறிகளை அறிந்து பிரான்ஸிலிருந்தே ஹோமியோபதி டாக்டர்களுக்கு மூன்று மருந்துகளை தெரிவித்தார் CAMPH, CARB-V, VERAT. இந்த மருந்து கொடுத்து 85% வெற்றி பெற்று விட்டது. வேகமாக பேதி தோன்றி மரண கட்டம் விரைவில வந்தால் இதுவே முதல் மருந்து. ஹோமியோபதி மருந்துகளையும் இது முறித்து விடும். ஆகவே இம் மருந்துகளை தனியாக வைக்க வேண்டும். கெட்ட எண்ணம், வெட்டி விடுவேன். தன்னைப் பற்றி பயம். ஓடி போக விருப்பம். பேதியில் நினைவு ஏற்பட்டால் CROTON TIG. இயலாமை, பேதியில் நினைவு இல்லாமை இது. அழ நினைப்பார் கண்ணீர் வராது. வாழ்க்கையில் அழுது கொண்டே இருக்கிறேன். உயர பறப்பது போல் எண்ணம். தீடீர் அதிர்ச்சியில் மயங்கி விழுதல். குறைந்த வியர்வை பேதி. மரணம். தண்ணீர் பாதி 2 முறை ஏற்பட்டு உடம்பு ஐஸ் மாதிரி ஜில்லித்து போய் விடும். மரண கட்டத்திற்கு வந்து விடுவார். வாந்தி, பேதி ஏற்படும். ஆனால் போர்த்த மாட்டார். மரணம் விரைவில் ஏற்படும்.