VERATRUM ALBUM வெரட்ரம் ஆல்பம்

மூலம்: முழாம் பழம்.

இம் மருந்து மரணக் கட்டத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மருந்து. குளிர்ந்த வியர்வை முகம் கருஞ்சிவப்பு. குளிரின் போது பினாத்துதல் (உளறுதல்.) பின்பு மரணக் கட்டத்திற்கு போய்விடுவார். செக்ஸ் உணர்வு குறைவு. ஆனால் பிரசவத்திற்கு பிறகு செக்ஸ் உணர்வுஅதிகமாகி விடும் . கொச்சையாக பேசுவார். ஒழுக்கம் குறைவு. கடவுளிடமும், டாக்டரையும் மிரட்டுவான். இரவு முழுவதும் தூங்காத பைத்தியம். உடம்பு ஜில்லிட்டு, தலையில் ஐஸ் கட்டி வைத்த மாதிரி தலையே ஜில்லிட்டு இருக்கும். முகத்தில் முத்து, முத்தாக. உடம்பு பூராவும் வியர்வை தெரியும். இது காலராவில் தெரியும். வாந்தி, பேதி எப்படி என்றால் ஒரு டம்ளர் தண்ணி குடித்தால் இரண்டு டம்ளார்வாந்தி, பேதிவரும்;. CAMP - க்கு பேதி, வாந்தி குறைவு உடனே மரணம் வரும். VERAT – தாமதமாக மரணம் வரும். அதிக வியர்வை, பாசாங்கு, நடிப்பு, ஜாலாக்கு, தும்பல், இருமி காட்டுதல், நொண்டி மாதிரி நடித்து காட்டுதல், வயிறு வலி என்று கத்தி காட்டுதல், தட்டிக்காட்டுதல், தற்புகழ்ச்சி, என் சொந்த அம்மா, சொந்த தம்பி, சொந்த அக்கா, என்று யாரைப் பார்த்தாலும் உறவு வைத்து பேசுவதும், ஊதாரியாக செலவும் செய்வான். வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டான். தெரு தெரியாமல் குழம்பி போவான். அவர்களுக்கு தேவை படுபவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் குழைவான். பிடிக்காதவர்களிடம் குற்றம் கண்டுப்பிடிப்பான். குருடன், செவிடன், கை, கால் வராதவன், கர்பிணி போன்று பிரசவம் நடப்பது போன்று பாசாங்கு வேலை செய்பவர்களுக்கும், கனவில் திருடன் வந்த மாதிரி இருந்தால் VERAT. இதனால் திருடன் வந்த மாதிரி இருக்குது என்று வீட்டை சந்தேகத்துடன் தேடினாள் N-M. முகம் நீல நிறம் CARB-V. வருத்தம், கவலை இருக்கும்.

VERAT – VIRIDE - வெரட் விரிட்

அமெரிக்க விஷச் செடியின் வெள்ளை நிற பூ.

இம் மருந்துக்குரியவர்கள், இவர்கள் பார்க்கும் பொருள்கள் எல்லாம் பெரிய நெருப்பு பந்தாட்டம் இருக்குதுங்க, நெருப்பு வளையமாட்டம் இருக்குதுங்க, வீடு, மரம், மற்ற பொருள் எல்லாம் வட்ட வட்டமாக தெரியுதுங்க என்பார். சில சமயம் உடலுக்குள்ளே கூட வட்ட, வட்டமாக தெரியுதுங்க என்பார். வெளியே மட்டும் இது உள்ளே மட்டும் வட்டம் என்றால் மருந்து வேறு. ஓடும் ஆறு, குளம், நீர்வீழ்ச்சி போன்ற எல்லா நீரும் கனவிலோ, இப்படி (மாயமாக) இரத்தமாக தெரிந்தால் SOLOINUM -T-AE

ZINCUM – METTALICUM - ஜின்கம் மெட்டாலிக்கம்

துத்தநாகம் என்ற உலோகம்.

உட்கார்ந்து இருக்கும் போது முழங்கால் கீழ் தானாகவே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். மமதையில் (ஆணவத்தில இப்படி ஆட்டினால் PLAT.) ஆனால் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பக்க வாதம் தான் இப்படி ஆட்ட காரணம் ஆகும். இவர்கள் தொழிலாளியை வெறுப்பார்கள். காலையில் சிரிப்பு. மாலையில் வருத்தம். பல் வலியினால் வலிப்பு. வெளுத்த முகம். உடம்பு பகுதியில் சூடு இருக்காது. கண்ணை உருட்டிக் கொண்டும், பற்களை நகத்தில் நோண்டிக் கொண்டும் இருப்பார்கள். ஆண், பெண் உறுப்புகளிலோ, புறப்பாடுகளை அடக்கிய பிறகும், இயற்கையாக வெள்ளைப்பாடு, மாதவிலக்கை நிறுத்திய பிறகும், மூளை, முதுகு தண்டும், தாக்கப்பட்டு தலைவலிக்கு பிறகு வலிப்பு தோன்றி விடும். தடுப்பு மருந்துகளை கொடுத்து மேலே கண்ட கஷ்டங்களை தடுத்த பிறகு, மூளையில் பக்க வாதம் ஏற்பட்டு கால்களை தானாக ஆட்டிக் கொண்டிருப்பார். இது முக்கிய குறி. இது மமதை (ஆணவம்) அல்ல. மமதையில் ஆட்டுவது ஸோரா விஷம். இது தடுக்கப்பட்ட மருந்தினாலும், நோயினாலும் இப்படி பலஹீனம் ஆகி விடுவார். இதுவும் ஒரு வகை பக்க வாதமே.