TEREBINTHINA டெர்பணைடினர்

மூலம்: டெர்பண்ட் ஆயில் வீரியப்படுத்தப்பட்டவை.

இம் மருந்து சரியான குறிக்கு தகுந்த ஹோமியோபதி மருந்து கொடுத்து வேலை செய்ய வில்லை என்றால் இதைத் தரலாம். அப்போது இது வேலை செய்யும். சீதமும், இரத்தமும் போகும். சிறுநீர் அதிகமாக போகும். சிறுநீர் புறவழி, விந்துச்சுரபிகள் சிறுநீர் பாதைகளில் புண்கள், ஏற்பட்டு கருப்பு நிறத்தில் இரத்தம் வரும். சீழ் வாடையும் வரும். சிறுநீர் சொட்டு, சொட்டாகத்தான் வரும். அதனால் முக்குவார்கள். இறுதியில் மயக்கம் தான் வரும். நெகச் சுத்தி ஏற்பட்டு கை விரல் அழுகி விடும். தலையைச் சுற்றிலும் இருக்கி கட்டியது போல மந்தமான வலி (CARB-AC). உடன் மயக்கம், பார்ப்பவை எல்லாம் இவருக்கு சுத்தும், தூரமாகத் தெரியும். மனதை ஒருமை படுத்த முடியாது. மூக்குப் பகுதியில் சூடும், குளிரும், இரணம் போன்ற வலியும் ஏற்படும். சீதகடுப்பு, மூக்கின் வலியாக வந்து விடும். (சில்லி மூக்கு அல்ல.) மூக்கில் மாதவிலக்கு வந்தால் AMM-C.

கண்களின் நரம்புகளை இழுத்துப் பிடிப்பது போல வலி, அதுவும் வலது புற கண்ணில் வலி அதிகமாக இருக்கும்;. இந்த வலி தலை வரை செல்லும். கண் மங்கி போதைக் காரர்கள் போல் இருப்பார்கள். அவர்கள் பேசும் பேச்சே அவர் காதில் கேட்பது போலவே இருக்குது என்பார்கள். காதில் ராகம் பாடுவது போலவும், கடலின் அலை அடிப்பது போலவும் இருக்கும். அதிகமான வலி. காது நோயில் இது தெரியும்.

நாக்கு வறட்சியாகவும், சிவந்து இரணமாட்டம்; ஆயிடும். மினு, மினுக்கும் படியிருக்கும். நாக்கின் நுனியில் எரிச்சல். முக்கியமாக முளைப்புகளும், காணப்படும். (ARG-N, BELL, K-BI, NUX-M) மூச்சு ஜில்லிப்பாக இருக்கும்.(அசிங்கமான) நாற்றமுள்ள வாடை அடிக்கும். மூச்சு திணறல் தொண்டையில் ஏற்படுவது போன்ற உணர்வு. குமட்டலும், வாந்தியும், மேல் வயிற்றுப் பகுதியில் சூடு இருக்கும்.

அடிவயிறு நீண்டு இருக்கும். பேதி ஏற்படும். மலம் தண்ணியாகவும், பச்சையாகவும், கடுமையான நாற்றத்துடனும், இரத்தம் கலந்தும் வரும். காற்று பிரிவதற்கு முன்பு வலி ஏற்படும். மலம் கழிந்தப் பிறகு வலி குறைந்து விடும். மூலத்தைச் சுற்றியுள்ள குடல்களில் இப்படி ஏற்படும். புளுக்கள் இருக்கும். இடுப்புக் கூடக எலும்பில் வலி ஏற்படும். இந்த வலி கிரு, கிருப்பில் முடியும். ஒவ்வொரு முறையும் மலம் கழியும் போது மயக்கம் (கிரு,கிருப்பு) ஏற்படும். உடன் மூலத் தொல்லைகளும், குடல்களில் (குழிப்புண்கள்) அல்சர் புண்கள் காணப்படும்.

சிறுநீர் இரத்தம் கலந்து கெட்டியாக வரும். பயங்கரமான வாடை, சிறுநீர் புற வழியில் வலியும், வீக்கமும் இருக்கும். எந்த ஒரு திடீர் நோய் ஏற்பட்டாலும், சிறுநீர்பை வேக்காடைந்து விடும். மானி விதைகளெல்லாம் இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெண்களுக்கு சிறுநீர் வரும் பகுதிகளெல்லாம் கடுமையான எரிச்சலிருக்கும். உதடுப்பகுதிகள் எல்லாம் மாறி, மாறி வீங்கும். இடைக்கால மாதவிலக்கு ஏற்படும். கருப்பையில் எரிச்சலும் இருக்கும். மூச்சுக் காற்று மாறி, மாறி வரும். மூச்சு விடத் தொல்லையாகவே இருக்கும். நுரையீரல்கள் நீண்டு விட்ட மாதிரி உணர்வு. காரித் துப்பினால் எச்சிலும், சளியிலும் இரத்தம் வரும்.

இதய துடிப்பு வேகமாகவும், சிறிய நாடியாக விட்டு, விட்டுத் துடிக்கும். திருகுவது போல் வலி ஏற்படும். ஆபத்துக் கட்டத்தைப் போல் இருக்கும். முதுகுப்பகுதியில் சிறுநீர்ப் பையின் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல். வலது சிறுநீர்ப்பையில் இழுக்கும் படியான வலி ஏற்பட்டு இடுப்பு வரை பரவும்.

சருமத்தில் முகப்பரு போன்ற கொப்பளங்கள் ஏற்படும். அக்கி கொப்பளம் ஏற்படும். பிப்பு, கடலைப் பருப்பாட்டம், மண்ணாட்டம் கொப்பளங்கள் ஏற்படும். படைகள், தடிப்பு ஏற்படும். உடன் வீக்கம், இது போன்ற ஏராளமான சரும நோய்களும், அதிகமான பிப்பும் இருக்கும். சொறிந்தால் வலி ஏற்படும். தசைகளில் எல்லாம் தொடர்ச்சியான வலி ஏற்படும்.

காய்ச்சலின் போது உடம்பு சூடு, அதிகப்படியான தாகம். நாக்கு வறண்டு விடும். அதிகமாக, ஜில்லுணு தண்ணியும் குடிப்பார்கள். (அப்போது BRY,SULPH போன்ற மருந்துகள் கொடுத்து வேலை செய்யவில்லை என்றால் இதைத் தரலாம்.) அதிகப்படியான வியர்வை மிக குளிர்ச்சியாக வரும். டைபாயிடு, மூளைக் காய்ச்சல், மூல நோய் போன்ற நோய்களின் போது ஏற்படும். முட்டாள் போல உளருவார்கள். மயக்கம் வந்தது போல் அப்படியே, படுத்துக் கிடப்பார்கள். உறவான மருந்துகள்:- ALUMEN, SECALE, CANTH, NIT-AC, TEREBEN. (மழைக்காலங்களில் ஏற்படும் இரும்பல் இது. நாட்பட்டதாக இருக்கும். தொண்டைக் குழல்கள் வேக்காடு அடைந்திடும். தளர்ந்து விடும். குரல் வளையை இருக்கி பிடித்தது போன்ற உணர்விருக்கும்.) பொது மேடைகளில் பேசக் கூடியவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பாட்டு பாடுபவர்களுக்கும் ஏற்படக்கூடிய தொண்டைக் கம்மலுக்கும், சிறுநீரில் சின்ன, சின்ன கட்டிகள் வருது என்பார்கள். சிற்றின்பத்தின் போது (உடலுறவில்) மானியை தேய்த்து, தேய்த்து இரத்தம் வரும். அப்போது முகம் கழுவுவார்கள். அப்போது தொல்லைகள் மேலும் அதிகமாகும். இதையே(TEREBINTH). முறிக்கும் மருந்து PHOS. மருந்து வீரியம்:- முதல் வீரியத்திலிருந்து 6 வது வீரியம் வரை தரலாம்.