TECRIUM டெக்ரியம்

மூலம்: பூனையின் தொடை.

இதன் முக்கிய குறி என்னவென்றால் பெரியவர்களோ, சிறுவர்களோ, மூக்கில் விரலை வைத்து நோண்டுவார்கள். உதட்டு தோலை உரித்து, உரித்து எடுப்பார்கள். ஆஸன வாய் கடுமையாக அரிக்கும் (அ) புழுக்கள் கூட ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும் விரலை விட்டு நோண்டி கொண்டேயிருப்பார்கள். அதை தேய்த்து, தேய்த்து புண்ணாகும் வரை விட மாட்டார்கள். புண்ணாகி விடும். இவன் சாப்பிடும் போது உணவு பொருளில் ஏதாவது குளையிருக்கிறதா என்று விரலில் கிண்டி கொண்டே இருப்பான். குறிப்பாக மதிய சாப்பாட்டில் இந்த குறையைக் (குறி) காணலாம். மனப்பாதிப்பால் மதிய சாப்பாட்டிற்கு பிறகு தொல்லை அதிகம். திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்ய விருப்பம். துயரமான செய்தியைக் கேட்டால் இவனுக்கு பர, பரப்பு ஏற்பட்டு விடும். ஆனால் கண் எதிரில் எத்தனை பேர் செத்தாலும் பர, பரப்பு இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். இது தான் முக்கிய குறி. காய்ச்சலில் வழ, வழனு பேசுவார்கள். தாயத்து கட்டிக்கொள்ள, கட்டி விட விருப்பம். கோயிலுக்கு போவான். ஆனால் மத நம்பிக்கை இருந்தால் BRY, PHOS. தனக்கு பிடிக்காததை, தன்னை பற்றி நல்லதுக்கு பேசினால் கூட இவனுக்கு தொல்லை அதிகமாகி விடும்.