SPIGELIA - ANTHELMIA ஸ்பைஜுலியா அன்தெல்மியர்
மூலம்: பல நிறமுடைய ஒரு வகை செடியின் வேர்.
இம் மருந்துக்குரியவர்கள் இதய வியாதியினால் மரண பயம் என்றால், கூர்மையான ஆயுதம் கண்டால் பயமும், தலை வலியும், இதய வியாதியின் போது வெந்நீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிட்டால், கூராண ஈட்டி, வேல், Nளாயுதம் ஆகியவற்றை கண்டால் பயம் இருப்பு கொள்ளாது. மனம் பதை, பதைக்கும். இருதய வியாதியின் போது நாக்கு சிறுத்துக்கிச்சி, பல்லில் மாட்டிக்கிச்சி என்றால் இது தான் மருந்து. மற்ற நேரங்களில் நாக்கு மாட்டிக்கிச்சி என்றால் HYOS. மற்ற நேரங்களில் சிறிது, சிறிதாக சுடுநீர் குடித்தால் சுகம் என்றால் ARS.அதிக சிந்தனை செய்த பிறகு தலை வலி, கண்ணில் ஊசி குத்தற மாதிரி தலை வலி என்பார்.
குறிப்பு:- ஒரு இதய வியாதிக்காரர் கூரான தேங்காய் உறிக்கிற கடப்பாறை கூரைப் பார்த்தால் பயங்க, ஏன் என்றால் கூர் தான் இதன் முக்கிய குறி. சிறுவர்கள் விளையாடும் போது விலக்கமார் குச்சி, வேறு எது வானாலும் கூராக வைத்து விளையாடுவதைப் பார்த்தால் இவர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள்.