SOLANUM TUBROSUM AEGROTANS சோலோனியம் டர்ரோசியம் இக்ரோட்டன்ஸ்

மூலம்: அழுகிய உருளை கிழங்கை வீரியப்படுத்தியது.

இந்த மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பயன்படும். மாயமான தோற்றங்கள், கற்பனையான பொய் எண்ணங்கள் இரவில் தோன்றும். பார்க்கும் பொருள் மறைந்து இருப்பது போலவும், வௌ;வேறான தோற்றமும் இருக்கும். (இதுவும் மற்ற மருந்துகளைப் போல மனதிலும், உடலில் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி (என்சைக்லோ பேடியா ENCYCLOPEDIA – என்ற புத்தகத்தின் 9 வது பிரிவு புத்தகத்தில் 66-ம் பக்கத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ளவும்) இதன் முக்கியமான குறிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

இவர்களுக்கு கனவுகள் விசித்திரமாக வரும். பெண் கூறுவாள் முதல் நாள் வந்த கனவுகளே மாறி, மாறி வருதுங்க என்பாள். இரண்டாவது நாள் கனவில் பெண்கள் தெரிவார்கள், அவர்கள் திடீரென மிருகங்களாக மாறிவிடுவார்கள். மூன்றாவது நாள் கனவில் உயரமான கோபுரங்கள் கீழே விழுந்து தரை மட்டமாகி விடும். நாலு, ஐந்து நாள் கழித்து கனவு ஏற்படும் போது பெரிய கட்டிடங்கள் கீழே விழும் போது (நில நடுக்கம் போல) அவற்றின் கடக்கால்கள் தெரியும். இப்படி கட்டிடங்கள் விழுவதால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். பின்பு முதல் நாள் வந்த கனவு வரும். அதாவது வித்தைக் காரர்கள் (சர்க்கஸ்காரர்கள்) வந்து வித்தைகள் செய்துக் காட்டுவார்கள். தீடீரென அவர்கள் கண்கள் நீல நிறமாகி விடும். இது போன்று முதல் நாள், நான்காவது, எட்டாவது நாள் வந்த கனவுகள் திரும்ப, திரும்ப வரும். மூன்றாவது நாளில் ஆற்றிலோ, குளத்திலோ நீச்சல் அடிப்பது போல கனவு இருக்கும். திடீரென ஆற்றில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிடும். பிறகு வரும் கனவில் சினிமா நடிகர்கள் நடிப்பது போன்ற கனவு. 24 வது நாள் கனவில் பொருள்கள் பச்சை, மஞ்சள், கருப்பு இது போன்ற கலர், கலராக பக்கு, பக்குனு வரும். 25 வது நாள் கனவில் எல்லாமே நெருப்புப் பற்றி எரிவது போல கனவு. 26 மற்றும் 34 வது நாள் கனவில் எல்லாம் பொருள்களும் நாசம் (சேதம்) அடைவது போல வரும். மற்றும் ஒரு பெரிய நகரமே நெருப்பு பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். 13வது நாள் கனவு போலவே வரும். (எல்லோரும் சண்டைப் போட்டுக் கொண்டு வெட்டிக் கொண்டு சாவது போல கனவு). தண்ணீர் இருக்கும் குளமெல்லாம் இரத்தமாக மாறிவிடும். பெண்களுக்கு ஏற்படும் கனவில் மனிதர்கள் எல்லாம் பச்சை நிறமாகவும், பசியால் மூடியது போலவும் எல்லாம் பச்சை நிறமாகவும், நீருக்குள் வாழ்வது போலவும் இருக்கும். இந்த மனிதர்கள் (அடுத்த நாள் கனவில்) நாயாக மாறி விடுவார்கள்.