SABINA ஷபினர்

மூலம்: காரகம்.

மிகவும் கடுமையான மூட்டு வலியினால், மூன்றாவது மாதத்தில் கருச் சிதைவு ஏற்படும். பெண் உறுப்பு மேல் மேட்டு பகுதி, முதுகு சேக்ரல் பகுதியிலும், தாங்க முடியாத வலியோடு கருச்சிதைவு ஏற்பட்டால் F-P மாதவிலக்கில் சிவப்பு, வெள்ளை கட்டி என்று அப்படியே கொட்டும். ஏழு மாத கருவு கூட சிதைந்து விடும். இரத்த போக்கு கொட்டும் AMB-G.காலத்துக்கு முன்னதாகவும், ஏராளமாகவும் போகும். களைப்புக்கு ளுநுஊ. அதிகம் உள்ள மாதவிலக்கு. கருப்பை சம்பந்தப்பட்ட வலி சித்திரவதை செய்வது போலவே இருக்கும். வலி தாங்க முடியாமல் அழுவார்கள் THUJA. மாதவிலக்கின் போது உடன் மூட்டு வலி என்று சொன்னால் இது தான் முக்கிய மருந்து. நொங்கு மாதிரியும், தீட்டு கொட்டுது என்பார்.

SALIX – NIGRA - சலிக்ஸ் நைக்ரர்

கருப்பு நிற அரளியிலிருந்து எடுக்கப்படுபவை.

ஆண், பெண் ஆகிய இருபாலரின் இயற்கையான இயக்கங்கள் எல்லாமே மாறியிருக்கும். நரம்பு பலஹீனத்தால் பைத்தியம் பிடித்ததுப் போல் இருப்பார்கள். எப்போதும் காமத்தைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து வெறி பிடித்து விடுவார்கள். ஆனால் ஈடுபட முடியாது. எண்ணம் மட்டும்அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் நரம்பு (மண்டலம்) முழுவதும் பலஹீனமாகி விடும். நவீன முறையில் சிற்றின்பத்தை அனுபவிக்க விரும்புவார்கள். இப்படி உறுப்புகளை தேய்த்து, தேய்த்து கனேரியா நோய் (சீக்கு நோய்) ஏற்பட்டு விடும். மானி விரைப்பு ஏற்படும் போது தாங்க முடியாத அளவு வலி ஏற்படும். அப்போதும் மானியைத் தேய்த்து, தேய்த்து, கசக்கி, கசக்கி(MASTURABATION) இன்பமடைவார்கள். இதனால் விதை நரம்பெல்லாம் தடித்து விடும். முகம் சிவந்து வீங்கியிருக்கும். முக்கியமாக நுனி மட்டும் இப்படிக் காணப்படும். கண் இரத்த மாட்டமும் இருக்கும். மற்றும் தொட்டாலும், அசைந்தாலும் இரணமாட்டம் வலி ஏற்படும். முடியின் வேர்களில் அடிப்பட்டது போன்ற வலி ஏற்படும். (உடம்பில் என்றால் ARNICA).. மாதவிலக்கிற்கு முன்னதாகவும், மாதவிடாயின் போதும் நரம்புத் தொல்லைகளிலிருக்கும். கருப்பையில் வலி ஏற்படும். மாதவிடாய் தாருமாறாக வரும். சினைப்பையின் நரம்புகள் ரொம்ப தாக்கப்பட்டு வேக்காடு அடைந்திருக்கும். இடை, இடையில் போக்கு ஏற்படும். சிறுநீர் கழியும் போது தீட்டு வரும். கருப்பையின் மிருதுவானத்ததன்மை மாறி மலடியாகிவிடுவார்கள்.

சிறிது அசைந்தாலும் ஆணின் மானிப்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். சேக்ரல் இடுப்பெலும்பின் இடைப்பகுதியில் வலி ஏற்படும். டக்குனு எழ முடியலை என்று கூறுவார்கள்.

உறவு மருந்துகள்:- YOHIMBIN, CANTH.

மருந்தின் வீரியம்:- தாய் திராவகத்தை 30 சொட்டு விட்டுத் தரலாம். இருபாலருக்கும் மலட்டுத்; தன்மைக்கு இது முக்கிய மருந்து. SABAL-SURULOT Q இதை தந்தால் நல்ல பலனளிக்கும். (குறிப்பு:- அதாவது ஒரு ஆணுக்கு உயிர் அணு (SPERM) குறைவு என்று கூறி குழந்தை பிறக்காது என்றனர். ;. S-S, S-N – Q தந்து கருத்தரித்தது. பெண்ணுக்கும் அப்படியே செய்து பலன்.