SABAL SERRULATA சபல் செர்லோட்டர்
மூலம்: ஷா பால்மிட்டா.
ஆண்களின் சிறுநீர் பாதையில் நன்கு வேலை செய்யும் ஹோமியோபதி மருந்து. இல்லற சக்தி குறைவாக இருந்தால் அதை சரி செய்யும். சினைப் பையில் ஏற்படும் தொல்லைகளுக்கு இந்த மருந்து பொருந்தும். விந்து சுரபிகளில், ஜவ்வுகளில் நன்றாக வேலை செய்யும். விந்து சுரபியில் உள்ள வேக்காடு, வீக்கம் இது போன்ற பல தொல்லைகளுக்கு இந்த மருந்து பொருந்தும். நன்றாக வேலை செய்து பலம் தரும். பெண்களின் மார்புக்கு கீழே உள்ள சுரபிகளில் ஏற்படும் தொல்லைகளுக்கும் இது பொருந்தும். தூங்கப் போகும் போது பயம். சோம்பேறித் தனமாகவே இருப்பார்கள். குழப்பமாகவே இருப்பார்கள். எதன் மீதும் விருப்பமிருக்காது. எதற்கெடுத்தாலும் கோபப்படும் பெண்கள். தலை சுத்தலுடன் தலைவலியும் இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட தலைவலி இருக்கு என்று நோயாளியே கூறுவார். வலி சிறிது, சிறிதாக நகர்ந்து மூக்கிற்கும், நடு நெற்றிக்கும் வரும். காரமாக எதுக்களிக்கும். பால் விரும்பி சாப்பிடுவார்கள் (உடன் ; RHUS-T, APIS.)சிறுநீர்:- வெளியேறும் பகுதியில் சிறு, சிறு கொப்பளங்கள் காணப்படும். நாட்பட்ட (கனேரியா) மேக வெட்டை நோய்க் காணப்படும். ரொம்ப கஷ்டத்துடன் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் வித்தியாசமாக தெரியும். விந்துச் சுரபிகளினுள் கட்டியும், வீக்கமும் இருக்கும்.
ஆண்களின் விந்துச் சுரபிகளில் பலத் தொல்லைகள் இருக்கும். பெருத்துக் காணப்படும். தண்ணி மாதிரி வடிவதால் சத்தெல்லாம் வீணாகி விடும். இல்லறத்தில் ஈடுபடவே முடியாது. ஆரம்பிக்கும் போதே எல்லாமே கொட்டி விடும். விரைப்பு தன்மையே இல்லாமல் ஜில்லிட்டு விடும்.
சினைப்பை வீங்கி பெருத்து விடும். மார்பகங்கெல்லாம் உலர்ந்து சுருங்கி விடும்(IOD, K-IOD.) நரம்புக் கோளாறுகள் உள்ள இளம் பெண்கள். இதனால் எந்த உணர்வும் இல்லாமல் மந்தமாக கிடப்பார்கள்.
அதிகப்படியான சளி வரும். காரி, காரி துப்பிக் கொண்டு இருப்பார்கள். நாள்பட்ட நுரையீரல் சம்மந்தமான நோயிருக்கும். (STANN, HEP.)
ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவை
PHOS-AC, STIGMATA MAYDIS, SANTAL. APIS. விந்து சுரபிகளின் தொல்லைகள் உள்ள குறிகளுக்கு FERR-PIC. THUJA, PICRIC-AC. விந்துச் சுரபிகள் வீங்கிக் கொள்ளுதல், உடன் மூத்திரப்பை, மூத்திரப்யையில் வேக்காடு POPULUS-TREMUL. மருந்தின் வீரியம்:- தாய் திராவகம் 10 வீரியம் வரை சிறந்தது. 3 வது வீரியத்தில் அடிக்கடி கொடுப்பது நல்லது. நல்ல பசுமையான பழங்களுடன் சேர்த்து தாய் திராவகம் செய்தால் (அதிக சக்தி வாய்ந்தாக இருக்கும்.) நல்ல பலனைத் தரும்.