RHODODENDRON ரோடோடென்ரான்
மூலம்: பனியில் மட்டும் விளையும் ரோஜா.
இது ஆண்களுக்கு மிக முக்கிய மருந்து. மனக்குறி எதிரில் உள்ள பொருள் எதுவாக இருந்தாலும், பற்றி எரிகிற மாதிரி இருக்குது என்பார். ஒளி வட்ட வட்டமாக தெரிந்தால் இங்கு VERAT – VIRIDE. இரண்டு, இரண்டாக தெரிந்தால் இம்மருந்து. பல வட்டங்கள் தெரிந்தாலும் இது தான். ஆண்களின் விதை வலி, வீக்கம், மிக பெரியதாக வீங்கி கொண்டே போகும். அதற்கு இது தான் முக்கிய மருந்து. ஒரு பெரிய தேங்காய் அளவு கூட வீங்கி போய் விடும். அப்பொழுது இந்த மருந்து கொடுத்தால் சரியாகி விடும். (இதுக்கு மனக்குறி முக்கியம். எம் மருந்துக்கும் மன குறி முக்கியம்.) விதை வீக்கத்தில் தோல்வி அடைந்தால் SPONG. பொருந்தும். தன் உடம்பே நெருப்பில் எரிகிற மாதிரி தெரிந்தாலும், இடி, மின்னல் வர போகிறது என்பது முன் கூட்டியே தெரிந்து கொண்டாலும் இத தான் மருந்து. பயம் என்றால் PHOS.. தலைவலியின் போது வேலை செய்தால் வலி தணியும் SEP.மற்றும் சிறு மூட்டுக்கள், சதை நார்கள் மற்றும் விதை நரம்புகள் இங்கு எல்லாம் நன்கு வேலை செய்யும். எல்லா விதமான வாத நோய்களுக்கும் பொருந்தும். ஆனால் மனகுறி பார்த்துக் கொள்ளனும். இவன் ஒரு சோம்பேறி, எதிலும் ஒத்து போக மாட்டான்.