RHODIUM ரோடியம்
மூலம்: உலோகத்தையும், இரசாயத்தையும் பிரித்தெடுத்து வீரியப்படுத்தப்பட்டவை.
(இதை நிருபித்தவர் MALFARIAN. 200 வீரியத்தில்) முன் மண்டையில் கிழிப்பது போல, ஷேக் அடிப்பது போல் நரம்பில் வலி ஏற்பட்டு தலை முழுக்க பரவும், அதிகமான பிறகு காது, மூக்கு, பல் என எல்லா இடங்களில் வலி ஏற்படும். கழுத்து தள்ர்ந்து தலையே தொங்கியது போல் ஆகிவிடும். அந்த இடத்தில் ஜில்லிப்பு தட்டிவிடும். உதடு வறட்சி, இனிப்பு சாப்பிட்டால் குமட்டல், தலைவலியின் போது மந்தம். இடது புறம், வாதத் தொல்லைகள் கீழ் நோக்கி இறங்கும். புஜம், தோள்பட்டைகளில், கழுத்து இறுக்கி பிடித்துக்கும். உள்ளங்கை, முகப்பகுதியில் பிப்பு, மலம் கழியும் போது ஆஸன வாய் தளர்ச்சி, அப்போது வயிறு இழுத்து பிடித்துக்கும். மஞ்சள் நிறமான கெட்டியான சளி நெஞ்சில் அப்பிருப்பது போல எண்ணமிருக்கும். களைப்பாகவும் இருக்கும்.
RHUS – TOXICODENDRON - ரக்ஸ் டக்ஸிகோடென்ரான்
இரத்தம் குடிக்கும் ஒரு வகை விஷ (செடியின்) கொடி.
இம் மருந்துக் குரியவர்கள் கூறுவார்கள். படுத்து விட்டு எழுந்து நடக்க முடியலைங்க, நாலு ஸ்டெப் நடந்தால் தாங்க, பிறகு இயல்பாக நடக்க முடியுது என்பார்கள். தாய்மார்கள் கூறுவார்கள் மார்பு எல்லாம் வலிங்க, குழந்தை பால் குடிக்கும் போது நாலு சப்பு, சப்பினால் பிறகு வலி குறைவுங்க, கூட்டத்தில் பேச கூட முதலில் தயங்குவார்கள். பிறகு மெல்ல, மெல்ல பேசிய பிறகு, இயல்பாக பேசுவார்கள். நடக்கும் போதும் கூட முதலில் நடக்க முடியலை என்று கூறி, பிறகு கொஞ்சம் நடக்க, நடக்க சரியாகிவிடும். என்பார்கள். இவர்கள் மூட நம்பிக்கை கொண்டவர்கள். கனவில் தண்ணி எடுத்தேன், கஷ்டப்பட்டு வேலை செய்தேன், இப்ப உடம்பு வலிக்குது எனபார். எளவு வீட்டில், தீட்டு சோறு சாப்பிட்ட பிறகு தாங்க வயிற்று வலி, வயித்தாலை போகுது, உடம்பே சரியில்லை என்றும், தண்ணி தாண்டி விட்டேன். அதனால் கால் வலி, கால் வீங்கி விட்டது என்பார். இப்படி உண்மைக்கு பொருந்தாத வார்த்தைகளையே பேசுவார். டீ கடையில் பேசி கொண்;டார்கள் ரோட்டில் பணம் கொட்டிக் கிடக்குதுன்னு, உடனே எடுக்க வந்து விட்டேன் என்றும், வட்டி கடையில் நின்று கொண்டிருந்தேன் யாரோ ஒருத்;தர் ஜாமின் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டேன் என்றும், இப்படி மூட நம்பிக்கையுள்ள முட்டாள்களுக்கு இதுவே பெரிய மருந்து. மூட நம்பிக்கையில் சந்தேகப்பட்டால் இது தான் மருந்து. இதற்கு முட்டாள் மருந்து என்ற பெயரும் உண்டு. உடம்பு வலி மற்ற நோயின் போது வேலை மேலேயே கவனமாக இருந்தால், உடம்பு வலி மற்ற நோயின் போது வேலை மேலேயே, கவனமாக இருந்தால் உடம்பு நல்லாயிருக்குது என்பார்கள். வலி உள்ள பகுதியை புரட்டிக் கொண்டு, உருட்டிக் கொண்டு, அசைத்துக் கொண்டே இருத்தால் சுகம் என்பார்கள். குளிர் காற்று, குளிர் காலம் ஒத்துக்காது. தொல்லை ARS. மாதிரி. சூடான அறையில் இருந்தாலும் சுகம் என்பார். போர்வை போர்த்தினாலும் சுகம் ARS. ஆனால் ARS.-க்காரர்கள் மன அமைதியின்றி அங்கும், இங்கும் அலைவார்கள். ஆனால் இவர்கள்(RHUS)உருட்டிக் கொண்டு இருப்பார்கள், பேசும் போதே மூட நம்பிக்கை தெரியும். கண் முட்டையே பிதுங்கிற மாதிரி வலி என்றால் PULS.