OPIUM ஓபியம்

மூலம்: அபினி - இஸ்லாமிய நாட்டில் விளையும் காப்பி மாதிரி.

இம் மருந்துக்குரியவர்கள் தனது வேலையை மறந்து விட்ட பிறகு பயன்படும் மருந்து. அதாவது சிறுநீர், மலம், படிப்பு, மருந்து, சாப்பிட இப்படி தனது வேலையை செய்ய மறப்பவர்களுக்கு இது. இதை பச்சையாக கொடுத்தால் போதைக்கு பயன்படும். இதே நமது முறையில் வீரியமாக்கியதால் போதை மயக்க நிலையை தெளிய வைக்க பயன்படும். திடீர் பயம். கவலை ஏற்பட்ட பிறகு ஸ்தம்பித்துப் போவுதல், மிக நெருங்கியவர்கள், இறப்பு செய்தியைக் கேட்டவுடன் பர பரப்பினாலோ, பயத்தினாலோ அப்படியே ஸ்தம்பித்து போய் விடுவார். சிரிப்பு, அழுகை, பேச்சு இல்லாமல் அப்படியே நின்று விடுவார்கள். ஹோமியோபதி மருந்து வேலை செய்யவில்லை என்றால் இது தான் மருந்து.மருந்து வேலை தூண்டி விடும். நான்கு வருடம் முன்பு பயந்தேன்க. அந்த பயம் போயிடுச்சு, ஆனால் அந்த நினைப்பு இன்னும், இருக்குதுங்க என்றால். நீங்க மருந்து கொடுத்தீங்க இன்னும், எதுவும் மாற்றமில்லை என்றாலும், வயதானவர்களுக்கு (வைட்டல் போர்ஸ்) ஜீவ சக்தி குறைந்தாலும், இயற்கையிலேயே ஜீவ சக்தி குறைந்தவர்களுக்கும், நோயினால் ஜீவ சக்தி குறைந்தாலும், மருந்து வேலை செய்யவில்லை என்றால் இம் மருந்து. முனி பிடிச்சிருக்குது என்றாலும், நான் எல்லா டாக்டரையும் பார்த்துட்டேங்க என்றாலும், இம் மருந்து கொடுத்தால் ஜீவ சக்தியை அதிகரிக்கும் குறியும் காட்டும். வீக்கத்தில் கூட வலி யிருக்காது. மருந்து சாப்பிடறேன். அப்படியே இருக்குதே எதுவும் மாற்றமில்லை என்றால் இதை (OP) தந்தால் தக்க குறியை காட்டும். மலம் வருவதும், காற்று பிரிவது இரண்டுமே தெரியாது. என்றால். இனிப்பு சாப்பிட்டால் தொல்லை வரும்னு தெரியுதுங்க, தெரிந்தே தப்பு செய்திட்டேன் என்று தன் மீதே பழி போட்டுக் கொண்டால், என்னை ஏதோ பிடித்துக்கிட்டு இருக்குது, என் வாழ்க்கையிலும் ஏதோ பிடித்திருக்குது என்று புலம்பினால் ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும்.