MENTHOL மென்த்தோல்
மூலம்: கற்பூர தையலத்தை வீரியபடுத்தப்பட்டவை.
இது பெரும்பாலும் குரல் வலையை, சளி சவ்வுகளை, முதுகு தண்டுவட நரம்புகளை தாக்கும். நரம்பு வலிகளுக்கு இது நல்ல மருந்து. திடீர்ன்னு ஏற்படும் நோய் வகைகளுக்கு இது பயன்படும் என்று Dr. கிரிக்கெஸ் M.D., கூறுகிறார். விஷேசமாக பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் அரிப்புக்கு இது நல்ல மருந்து. முன் மண்டையில் தலைவலி அதிகமாகி சைனஸ் பகுதியில் வந்து முடியும். வலி இறங்கிக் கொண்டே வந்து கண் முட்டையில் வந்து இறங்கும். கண் முட்டையே கழண்டு வர மாதிரி இருக்கும். இடது புற கண் குழியில் மட்டும் வலி. மின்னல், மின்னுவது போல் வலி. மூக்கில் சளி பிடித்தது போல சொட்டு, சொட்டாக ஒழுகும். குளிர்ந்த மாதிரி இருக்கும். மூச்சு ஆழ்ந்து சுவாசிப்பார்கள். அப்போது மூச்சுக் குழாய் ஜில்லுனு இருக்கும். மூச்சுப் பாதை இழுப்பது போலவும், கிச்சு, கிச்சு செய்வது போலவும், மந்தமாகி நெஞ்சுக்கு வந்து நெஞ்செல்லாம் இது பரவும். புகைப்பட்டால் சின்ன, சின்ன இரும்பல் வரும். ஆஸ்துமா தொல்லையும், நுரையீரல் வேக்காட்டினால் தலைவலியும் இவர்களுக்கு ஏற்படும்.
கை, கால், கழுத்து எலும்புகளில், இடுப்பு எலும்புகளில், தசை, பகுதிகளில் இரணம் போல் வலி எடுக்கும். உறவு KALI – BICH, SPIGEL.
MERCURIUS – CORROSNUS - மெர்குரிஸ் கோர்ரோஸ்னஸ்
பாதரஸத்தின் ஒரு படிவம்.
வயிற்று கடுப்பில் இம் மருந்தின் குணம் அதிக இரத்தம் போகும். குறிப்பாக ஆண்களுக்கு மானி திண்டில் வட்டமான புண் ஏற்பட்டு திண்டே கரைந்து காரமான சீழ் வடியும். இதனால் சிறுநீரகம் கெட்டு விடும். மலம் கழிய உட்கார்ந்தால் முக்கிக் கொண்டே இருப்பார்கள். மலம் வராது. (வந்து விட்டால் NUX.) இதே மாதிரி முக்கி கொண்டு இருப்பார். சீதம் அதிகமாக வரும் MER - SOL. கடுமையான வெட்டுவது போல வலியோடு துண்டு, துண்டாக மலம் வரும். சிறுநீர் பாதையினுள் எரிச்சலோடு சிறது அளவே சிறுநீர் வரும். சொட்டு, சொட்டாக சிறுநீர் வரும் போது, இரத்தமும், தாங்க முடியாத வலியும், சிறுநீரில் செங்கல் தூள் மாதிரி படிவும் காணப்படும். விந்து சுரபி வீங்கி பாதை அடைத்து கொடுமையே செய்யும். இரவில் அதிக தொல்லை தரும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கானது மலம் பச்சை பில்லு மாதிரி நிறமும், தோற்றமும் இருக்கும். ஆஸன வாய் எரிச்சலோடு, அவிச்ச முட்டையை சீவி விட்ட மாதிரி நிறைய மலம் கொட்டும்.
MERCURIUS – SOLUBILIS - மெர்குரிஸ் செல்லுபிலிஸ்
பாதரஸம்.
இது முக்கியமான சிபிலிஸ் மருந்து. அதனால் மருந்துக்குரியவர்களுக்கு, எல்லா குணங்களும் நோய்களும் இதில் அடங்கும். இவர்களது மனநிலை எல்லோரும் நமக்கு எதிரி அக்கம், பக்கம் உள்ளவர்கள், உறவினர்கள் எல்லோருமே நமக்கு எதிரி என்று நினைப்பார்கள். மற்றவர்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்ற எண்ணமும், நாம் மற்றவரை கொல்ல வேண்டும் என்ற விருப்பமும், மழை, வெய்யில், இரவு, பகல், போன்றவை எல்லாமே தொல்லை, இரண்டு காலமும் தொல்லை ஏற்பட்டால் முக்கிய மருந்து. காது சீழ் மஞ்சள் நிறத்தில், பச்சை நிறம் கலந்த மாதிரி இருக்கும். இது தான் காதுக்கும், கனேரியாவுக்கும் உள்ள வித்தியாசம். இவருக்கு கொட்டுவது போலவே வலி APIS மாதிரி. மஞ்சள் நிற சீழ் ஆரம்ப புற்று உடன் துர்நாற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையிலோ, நோயிலோ, வலியிலோ, அப்படியே நரக வேதனையில் இருக்கிறேன் என்றால் இது. இவர்களுக்கு தாகம் நிறைய எடுக்கும். எச்சில் ஒழுகும் அளவு ஈரம் இருக்கும். அப்பவும் தண்ணீர் சொம்பு, சொம்பாக குடிப்பார்கள். மலம் கழிய உட்கார்ந்தும் சீத பேதியில் எழுந்திருக்கவே மாட்டார். காரணம் வர்ற மாதிரியே இருக்கும். முக்கி கொண்டே இருப்பார். ஆனால் (மலம் சிறிது கழிவான், எழுந்து வந்து விடுவான், திரும்ப போய் உட்கார்ந்து சிறிது கழிந்து விட்டு வந்து விடுவான் NUX.) உடம்பு கரையான் அரிக்கிற மாதிரி அரிச்சிடிச்சி என்றால் MERC - SOL. இங்கு கரைஞ்சி விட்டது என்றால் THUJA. நாக்கு வீங்கி பிளந்து இருக்கும். பற்களின் பதிவுகள் இருக்கும். தற்கொலை விசியத்தில் சொல்வார். பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்வார்கள்.