MAGENTIS POLUSARTICUS மாக்னடிஸ் போலுசாட்டிக்ஸ்

மூலம்: பூமியின் வடதுருவ பகுதியில் எடுக்கப்பட்ட காந்தம்.

இம் மருந்துக்காரர்கள் வெளி உறுப்புகளின் கஷ்டத்தையே கூறுவார்கள். அழுவும் மன நிலை உடன் குளிர்ந்த உடம்பு மற்றும் பாதம் ரொம்ப குளிர்ந்தும் காணப்படும். மாலை நேரங்களில் துக்கமாக இருப்பார்கள். எதற்கெடுத்தாலும், அழும் ஆண்களுக்கு எதிர்மறையாகவே நினைப்பார்கள். கண் இரணம் ஆன மாதிரி ஓர் உணர்வு. வலியற்ற மனோபாவம் சில நேரங்களில் உணர்ச்சி வயப்படுபவரும், கற்பனையான மன நிலை உடையவர்கள். எப்போதும், தன்னுடைய வேலையைப் பற்றியே பேசுவார்கள். எழுதும், போதும் அடிக்கடி தப்பு தப்பாக எழுதும் ஆண்கள். இவர்கள் iதரியமான, வேகமான. திடமான மனநிலையுடையவர்கள். அமைதியான, எதையும் ஒழுங்கு படுத்தும் மனநிலை உள்ளவர்கள். கவனமற்றவர்கள் (உஷாரற்றவர்கள்) வேகமாகத்தான் இருப்பார்கள். பெண்கள் மயங்கிய நிலையிலேயே இருப்பார்கள். மயக்கமாக இருக்குது தலையை இப்படி, அப்படி கூட அசைக்க முடியலை என்பார்கள். குடிச்ச மாதிரி இருக்குதுங்க காற்றோட்டமா இருந்தா சுகங்க என்பார்கள். ஞாபக மறதி, ஆனால் உஷாராக இருக்கும் ஆண்கள். மேலே கூறிய மயக்க நிலை பெண்களுக்கும் காணப்படும். தலைவலி மூளையில் ஊமைக் காயம் போல, நைவுக்காயம் போல வலி மற்றும் முன் மண்டை நெற்றிப் பொட்டில் இது போன்ற வலி. மண்டையில் அதிக கணம் வைத்து அழுத்துவது போன்ற உணர்வு. மேலும் மண்டையில் ஒரு பகுதி வலியாகவும், ஒரு பகுதி அழுத்துவது போலவும் இருக்கும். தலைவலியின் போது நெற்றிப் பொட்டின் அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்படும். மதியம் முழுவதும் பயங்கரமான தலைவலி, தலையில் இரத்தம் வேகமாக பாயும், அதனால் கன்னம் பகுதி வரை இந்த இரத்த ஓட்டம் தெரியும், வலதுபுற நெற்றிப் பொட்டில் குடைவது, இழுப்பது போன்ற வலி, இது கீழ் நோக்கி வந்து கன்ன எலும்பு வரை வரும். இடது பொட்டின் மேல் பகுதியில் தொடர்ச்சியான வலி இருக்கும். தலை முழுவதும் அழுத்துவது, கிழிப்பது போல உணர்வு ஏற்பட்டு, இடது காதில் வந்து அந்த உணர்வு முடியும். கண்களை அசைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் கண்களிலிருந்து குளிர்ந்த காற்று போல வரும். கண் பிதுக்கம், உற்றுப் பார்த்தால் தெரியும். கண்களின் இரு மூலைப் பகுதிக்கு உள்ளேயும், கண் புருவத்தின் வெளிப்பகுதியிலும், கரு விழியின் ஓரப்பகுதியிலும் அரிப்பு ஏற்படும், காலையில் நடக்கும் போது, கண்ணின் இமைப்பகுதியில் வறட்சியாகவும், அதிக வலியாகவும் இருப்பது போன்ற உணர்வு. இமைப்பகுதியில் இழுத்துப் பிடிப்பது போலவும், உதறுவது போலவும் இருக்கும். அப்போது அதிகமான கண்ணீர் வரும். இமைப் பகுதியில் தினமும் காலையில் அதிகமான கண்ணீர் பெருகும். சூரிய ஒளிபட்டவுடன் அளவுக்கு அதிகமான கண்ணீர் வரும். (அதிகமான கண் தொல்லை.) தாங்க முடியாத அளவுக்கு தொல்லை. வலது கண்ணை அதிகமாக பயன்படுத்தியதால் எரியுதுங்க, அதனால் கண் சிவப்பாகி தண்ணியாட்டம் ஊத்துதுங்க (வலது கண்ணில் பலமற்ற தன்மையும் உடன் காந்த தொடர்பும் ஏற்படும். கால்மணி நேரம்.) மூன்று அல்லது நான்கு நிமிடம் கண்கள் ஜல்லித்து பலமற்று விடுதல். (கண்களில் காந்த அலைத் தொடர்பு இரண்டு நிமிடம் ஏற்படுவதால்.) கண் பார்வை (திருப்ப) அசைக்க முடியலை. உடன் கொஞ்ச, கொஞ்சமாக தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கும். கண் முன்னாடி ஏதோ ஓட்டை இருப்பது போல் உணர்விருக்கும். இரண்டு கண்ணிலும ஏதோ ஊறுதுங்க என்பார். கண்ணை பலமாக இழுத்து பிடிப்பது போல ஏற்பட்டு இது மேல் புறமாக கன்னம், காது, மேல் தாடை எலும்பு வரை பரவும். (கால்களில் காந்த அலை நேரடியாக படுவதால் தான்.) ஒரு காதில் அழகாக மணி அடிக்கும் சத்தம் கேட்கும், உடனே அடுத்த காதுக்கு சென்று விடும். காதில் “உஸ்” என்ற சப்தமும், இழுத்துப் பிடிக்கும் உணர்வும் ஏற்படும். ஒரு பக்கம் மட்டும் மணியோசை கேட்குது என்றும், கூறுவார்கள். ஆழமான செவிட்டுத்தன்மை, ஏதோ பஞ்சு வெச்சு அடைத்த மாதிரி இருக்கும் வலது காதில். காது சூடாக இருப்பது போல உணர்வு.

மூக்கு:- நோய் பிடித்த மூக்காகவே இருக்கும். மூக்கில் மாயமாக ஏதோ ஒரு வாடை அடிக்குது என்பார். (அறையில்) அழுகிய முட்டை வாடையும், நல்ல சுண்ணாம்பு வாடையும், தூசு வாசமும், கற்பனையாக அடிக்குது என்பார். மூக்கிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறும், மதியம் ஆக, ஆக அதிகமாகும். மற்றும் அழுத்தமும், தொடர்ச்சியான வலியும் இருக்கும் நெற்றியில். மூக்கு சூடாகி நுனி கன்னம் சிவந்து விடுதல், முகத்தில் இருக்கி பிடிக்கும். வலியானது டான்சில் போய் உட்கார்ந்து விடும். முகத்தில், கன்னத்தில் இழுத்து பிடிக்கும் படியான வலி.

பல்லும் தாடை எலும்பும் :- தொடர்ச்சியான வலியும், இழுத்துப் பிடிக்கும் வலி ஏற்பட்டு அது உச்சிக்கும், கீழேயும் செல்லும். பின் தாடை எலும்பின் மையத்தில் வந்து நிற்கும். தசை சுறுங்கி விரியும். கீழ் தாடையில் தெரிப்பது போன்ற வலி. பல்லுக்கு அடியில் தானியம் ஒட்டிக்கிட்டு இழுக்குது அப்ப வலிஇ நடந்தால்இ படுத்தால் வலி அதிகமாகுது. இந்த வலி பரவி கண்ணுக்கு போகும். எகிறு வேக்காடாகி வீங்கி விடுதல். இதனால் பல் வலி அதிகமாகுதல். வெளிக்காற்று புகையுள்ள அறையில் வலி மேலும் அதிகமாகும். பல் எவுறு வீங்கி எரிச்சல் எடுத்தல். உடன் கன்னம் சிவந்து வீங்கி விடுதல். இது திறந்த வெளிக் காற்றில் சுகமாகி, ரூமுக்குள் சென்றால் அதிகமாகிவிடுகிறது. பல்லில் தொடர்ச்சியான வலி ஏற்படுவதால் ஒரு பக்க முகம் மட்டும் வீங்கி விடுகிறது. தாடையில் தேள் கொட்டுவது போல் கிச்சு, கிச்சு செய்வது போல தெரிப்பது போல பல வலிகள் ஏற்படும். சாப்பிட்டப் பிறகும், வெது வெதுப்பான அறையில் இருந்தால் பல் வலி ரொம்ப அதிகமாகுதல். எவுறு மருத்து விடும். ஆனால் பல் வலி இருக்கும். அதாவது சூடுபட்டால் உடனே கன்னம் சிவந்து விடும். எவுறு வீங்கி இருக்கும். அப்போது நாக்கை லேசாக தொட்டாலே பயங்கரமான வலி. பல்வலி எவுறுகளில் இரணமாட்டமும், வெட்டும் படியான வலி இது. அதிகமாகி வாயின் முன் பகுதிக்கு வந்து விடும். வாயின் இடது ஓரத்தில் இரணமாட்டம் வலி. அப்பொழுது அசைந்தால் குழிப்புண் வடிவத்தில் வலி ஏற்படும். தாடை எலும்பில் ரிங்காரம் போல் வலி ஏற்பட்டு பல் வரை செல்லும். சாப்பிடும் போது இந்த வலி பல்லுக்கும் வரும். காலை நேரம் சாப்பாடு புளிச்சு போனது போல் தெரியும். இரவு உணவை பேராசையுடன் சாப்பிடுதல். பாதரஸம் போன்ற புளியேப்பம் வருதல், வயிற்றின் குழிப்பகுதியில் இழுக்கும் படியான வலி ஏற்பட்டு வலது மார்பு வரை பரவும்.

அடிவயிறு:- அடி வயிற்றுப் பகுதியின் மேல், உள் பகுதியில் உள்ள நரம்புகளில் இழுத்துப் பிடிப்பது போல வலி. தினமும் காலை நேரங்களில் இது ஓர் உணர்;ச்சி தான். இரவு உணவுக்குப் பிறகு வயிற்றில் கடுமையான வலி மற்றும் மலக்காற்று. அடி வயிற்றின் மேற் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், கூரான பொருளால் அழுத்தம் ஏற்படுவது போல் இருத்தல். பிறகு அடிவயிற்றில் திடீரென வெடிப்பது போல இருக்கும். அசையாமல் உட்கார்ந்திருக்கும் போது (சுலபமாக) தானாகவே காற்றுப் பிரியும். தினமும் காலையிலும், நடந்த உடனேயும் வயிற்றில் கடுமையான திருகு வலியும், வயிறும் உப்பி விடும். வயிறு உப்பிசத்தின் போது அடிவயிற்றின் மேல், கீழ் பகுதியில் வலிக்கும். அடி வயிறு முழுவதும் இழுத்துப் பிடித்து பயங்கரமாக வலிக்கும். அசைந்தாலும், ஓய்வில் இருந்தாலும், வயிறு தொல்லைகளாகவே இருக்கும். வயிறு உப்பிசத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அடிவயிற்றில் சல, சலவென சப்தம் கேட்கும். இதுவும் ஓர் உணர்வு தான். இது மேலே எழும்பி வயிற்றின் குழிப்பகுதியிலிருந்து ஏப்பமாக வெளி வரும். ஓய்வாக இருக்கும் போது அடி வயிறு சுத்தும். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடல் பிதுக்கம் அடிக்கடி பிதுங்கி பயமுறுத்தும். அப்பொழுது முக்கியமாக இரும்பிக் கொண்டிருப்பது, நடக்கும் போது அடிவயிறு புண்ணாட்டம் வலியும், வளையம் மாதிரியும் இருக்கும். அடி வயிற்றின் வெளிப்புறத்தில் துளையிடுவது போல வலி ஏற்படும். குடல் பிதுக்கமும் இருக்கும். தொடை இடுக்கிலும், தொடை சந்திலும் எர்னியா பிதுக்கமிருக்கும்.

மலம்:- மலம் கழியும் போது பெரும்பாலும், அடிவயிற்றில் இழுப்பது போல வலி இது காலை நேரங்களில் காணப்படும். மலத்தின் மீது சீதம் (சளி) தடவியது போல இருக்கும். மலக்குடலில் தேள் கொட்டுவது போலவும், கிச்சு, கிச்சு செய்வது போலவும் வலி இருக்கும். இரவு நேரம் ஆனாலே தானாக விந்து கசிந்து விடும். மார்பு பகுதியில் வறட்சியாக இருக்கும். அதனால் வறட்டு இரும்பல் ஏற்படும். முக்கியமாக இரவு நேரத்தில் வெது, வெதுப்பான படுக்கையிலிருந்து எழும் போது இப்படி ஏற்படும். படுத்திருக்கும்; போது இரும்பல் ஏற்பட்டு வலிப்புக் கூட வரும். ஆழ்ந்த தூக்கத்தில் நடு இரவில் இரும்பல், மூச்சுத் திணறல், வலிப்பு ஏற்படும். இதயப் பகுதியில் திடீரென அழுத்தம் ஏற்படும். வெளிக்காற்;றில் நடக்கும் போது மார்புப் பகுதியில் சூடான காற்றுபடுவது போன்ற உணர்வு, இது மேலே ஒன்று முன் தொண்டை வரை பரவும். அசைந்தாலே முதுகு எலும்புகளில், இழுப்பது போன்ற வலி ஏற்படும். நடு எலும்புத்தண்டில் நைவு காயம் மாதிரி வலி, அப்போது குமிந்தால் முதுகே பின்னாடி போவது போல் உள்ளது என்பார். தோள்பட்டை எலும்பில் உதறல் இருக்கும். இரண்டு தோள்பட்டை எலும்பில் தண்ணீர் மெதுவாக ஓடுவது போன்ற உணர்விருக்கும். இடுப்பு பட்டை எலும்பிலும் நைவுகாயம் மாதிரி வலிக்கும். அசைந்தாலும் ஓய்வில் இருந்தாலும் வலிக்கும், தொட்டால் வலி தெரியாது.

கைகளில்:- புஜங்களில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி இது தூங்கப் போகும் வரை இருக்கும். கைகள் முழுவதும் ஜில்லிப்பு, காந்த சக்தி மாதிரி இருப்பதாக பெண்கள் கூறுவார்கள். காந்தமாட்டம் இழுக்குது என்பார்கள். முன்பக்க தோள்பட்டை, புஜங்களில் உடைப்பது போன்ற வலி, முக்கியமாக முன் புஜ எலும்பு முழுவதும் வலி ஏற்படும். வெளிக்காற்றில் நடக்கும் போது வலி தோள்பட்டையில் புண்ணாட்டம் வலி ஏற்படும். இரவில் படுக்கையில் படுத்திருக்கும் போது வலது கணுக்கால் மற்றும் கை மணிக்கட்டு எலும்புகள் கெட்டியாக இழுத்துப் பிடித்துக்;கும். சிறு விரல், கை எலும்புகளின் நடுவில், முதுகுப் பகுதியில் பிப்பு, அதிகமாக வலி மற்றும் எரிச்சல் மேலும் அந்தப் பகுதியில் லேசாக தொட்டாலும் தாங்க முடியாத அளவு வலி ஏற்படும்.

கால்கள்:- முழங்காலிருந்து கணுக்கால் மூட்டுவரை வெளிப்புறம் கிழிப்பது போலவும், அழுத்துவது போன்ற வலியும், கால்களில் பயங்கரமான அசதி நடக்கும் போது ஏற்படும். நடக்கும் போது தடை ஏற்பட்டாலும் வலிக்கும். உட்கார்ந்த பிறகும், எழுந்து நடக்கும் போதும் நரம்புகள் இழுத்துப் பிடித்துக் கொள்ளுதல், கால்களின் ஓரங்களில் நைவு காயம் போல வலிக்கும், இதற்கு முன்பு இப்படி வலியே இருந்ததில்லை. இப்ப தாங்க முடியாத அளவு வலி வருது என்பார்கள். சிறு விரலில் கூட அழுத்தம் பயங்கரமாக ஏற்படும். கெண்டை காலில், பாத எலும்பு மூட்டுகளில் பெரு விரலில், ஊசியில் குத்துவது போல் வலி. வலது பாதப் பகுதியில் இழுத்து பயங்கர வலி ஏற்படுது என்பார்கள்.

பகலில் தான் தூக்கம் வருது, இரவில் சோம்பலாகவும், நிறைய கனவுகளும் ஏற்படுகிறது என்பார்கள். பெண் கூறுவாள் பார்த்த ஆட்களே கனவில் திரும்ப, திரும்ப வருது என்பாள், முதலில் பார்த்த ஆளே அடுத்த நாளும் வாராங்க என்பாள், அதனால் ஆழ்ந்த தூக்கமில்லை என்பாள். தூங்கும் போதும், ஓய்வாக இருக்கும் போதும் உயரமாக படுத்திருப்பது போலவும், வெது, வெதுப்பாக இருப்பது போலவும் உணர்விருக்கும். காய்ச்சலின் போது உடல் முழுவதும் குளிர்ச்சியாகவும், மிகவும் ஜில்லிப்பாகவும், ஐஸ் மாதிரியும் இருக்கும். இதனால் பெண்கள் துணியை லு}சாகப் போட்டுக் கொள்வார்கள். குளிர்ச்சிக்குப் போனால் உடனே தொல்லை. இதனால் பெண்களுக்கு தண்ணி மாதிரி பேதியாகும். அழுத்தினால் சுகம். உடல் முழுவதும் குளிரால் ஆடும். வடக்கு திசையை நோக்கி இழுக்கும். ஜில்லென்ற வியர்வையும் வரும். கன்னம் சூடாகி விடும். ஆனால் உடம்புக்குள் சூடாகவே இருக்கும். வலது புறம் படுத்தால் கஷ்டம்.

சருமம்:- சருமம் இழுத்துப் பிடித்து வலி.

பொதுகுறிகள்:- பல பகுதியில் தொடர்ச்சியாக ஊசியில் தைப்பது போல வலி இருக்கும். மற்றும் பயங்கரமான வலியும், தசைக்குள் பாய்வது போன்ற வலியும், நைவுக் காயம் போல வலியும், ஒரு பக்கம் இயல்பாகவும், மற்றொரு பக்கம் சுமையாகவும் இருக்கும். உடல் முழுவதும் நடுங்கும், விசேஷமாக கால் பாதம் நடுங்கும். பாதிக்கப்பட்ட பகுதியைத் தொட்டால் காந்தத்தை தொட்டது போல் விசுக்குனு இழுக்கும். நரம்பெல்லாம் நடுங்கும், கைக் கால்களில் உதறல் ஏற்படும். அடிவயிற்றில் இழுப்பு இருக்கும். மனம் கவலையாகவும், தனிமையாகவும் இருப்பது போல இருக்கும். நரம்புகளில் பயங்கரமான பலஹீனம் இருக்கும். குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வும், அந்த பகுதியை தொட்டால் காந்தம் இழுப்பது போல இழுக்கும். எலும்பின் வெளிப்பகுதியிலும், எலும்புக்குள்ளும் இழுத்து பிடிக்கும். காய்ச்சலின் போது சவம் மாதிரி கிடப்பது போல உணர்வு. (ஆனால் மேற்புறம் சில்லென்றும் சூடாகவும் இருக்கும்.) வெளிக்காற்றில் போகும் போது கைக் கால்களில் வலுவற்ற தன்மையாகவும், பயங்கரமான வலியாகவும், ஊமைக்காயமாட்டமும், வலியும் ஏற்படும்.